பிஎப் திட்டம்: மாதம் ரூ.15,000க்கும் அதிகமான சம்பளம் வாங்குவோருக்கு மட்டுமே புதிய வரி விதிப்பு..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2016-17ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், பிஎப் திட்டத்தின் மீது விதிக்கப்பட்ட வரி குறித்து அனைத்துத் தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்புகள் மற்றும் கருத்துகள் சந்தித்தது நிதியமைச்சகம்.

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள்
டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

இப்பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நிதியமைச்சகம், தற்போது அறிவிக்கப்பட்டள்ள வரி விதிப்பு பிஎப் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பொருந்தாது, 15,000 ரூபாய்க்கு அதிகமாகச் சம்பளம் வாங்குவோருக்கு மட்டும் தான் என விளக்கம் அளித்துள்ளது.

பட்ஜெட் 2016-17

பட்ஜெட் 2016-17

மத்திய பட்ஜெட் அறிக்கையில், மாதம் 15,000 ரூபாய்க்கும் அதிகமாகச் சம்பளம் வாங்கும் பிஎப் வாடிக்கையாளர், தான் ஓய்வு பெறும் காலத்தில் பிஎஃப் தொகையில் 60 சதவீதத்தை ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்தால் தான் திரும்பப்பெறும் தொகைக்கு எவ்விதமான வரியையும் செலுத்த தேவையில்லை, இல்லையெனில் வரி விதிக்கப்படும் எனக் குறிப்பிட்டு இருந்தது.

நிதியமைச்சகம்

நிதியமைச்சகம்

சமுக வலைத்தளத்தில் ஏற்பட்ட கிளர்ச்சி மற்றும் கேள்விகளின் அடிப்படையில் நிதியமைச்சகம் இன்று விளக்கம் அளித்துள்ளது.

இதில் பிஎப் வாடிக்கையாளர் தான் திரும்பப்பெறும் தொகையில் 60 சதவீதத்தை ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்தால் முழுமையான விரி விலக்கு கிடைக்கும். இல்லையெனில் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 60% பிஎஃப் தொகைக்குப் பெறப்பட்ட வட்டிக்கு வருமான வரி அடிப்படையில் வரி விதிக்கப்படும் என நிதியமைச்சகம் இன்று விளக்கம் அளித்துள்ளது.

 

மீதமுள்ள 40 சதவீதம்

மீதமுள்ள 40 சதவீதம்

எஞ்சியுள்ள 40 சதவீத தொகையைப் பிஎஃப் வாடிக்கையாளர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

15,000 ரூபாய் சம்பளம்

15,000 ரூபாய் சம்பளம்

மாதம் 15,000 ரூபாய் சம்பளம் வாங்கி அதிகச் சம்பளம் வாங்குவோர் என ஒப்புக்கொண்ட தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மட்டுமே இப்புதிய வரிச் சட்டம் பொருந்தும் எனவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

3.7 கோடி வாடிக்கையாளர்கள்

3.7 கோடி வாடிக்கையாளர்கள்

இப்புதிய வரி விதிப்பின் மூலம் 3.7 கோடி பிஎப் வாடிக்கையாளர்களில் 3 கோடி வாடிக்கையாளர் பாதிக்கப்படமாட்டார்கள். எஞ்சியுள்ள 60 லட்சம் பேர் மட்டுமே இப்புதிய விரி விதிப்பின் கீழ் வருவார்கள்.

அரசின் நோக்கம்

அரசின் நோக்கம்

இப்புதிய திட்டம் மூலம் அதிகச் சம்பளம் பெறும் தனியார் நிறுவன ஊழியர்கள் ஓய்வூதியம் பெறும் வகையில் மட்டுமே இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FinMin: EPF tax only for the ‘highly paid'

Under fire from all sides, the Finance Ministry on Tuesday made it clear that the proposed new tax treatment on withdrawal from the Employees Provident Fund (EPF) will not apply to EPFO members who are within the statutory wage limit of ₹15,000/month.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X