கருப்புப் பணத்தை ஒழிக்க புலனாய்வு அமைப்புகளுடன் ரிசர்வ் வங்கி கூட்டணி..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிக்க இந்திய புலனாய்வு அமைப்புகளான ஐபி மற்றும் RAW உடன் அன்னிய முதலீடு குறித்த தகவல்களை ரிசர்வு வங்கி பகிர்ந்துகொள்ள முடிவு செய்துள்ளது.

(6,900 கோடி ரூபாய் கடனை அடைக்க வங்கிகளுடன் பேச்சுவார்த்தை: விஜய் மல்லையா)(6,900 கோடி ரூபாய் கடனை அடைக்க வங்கிகளுடன் பேச்சுவார்த்தை: விஜய் மல்லையா)

இந்திய சந்தையில் முதலீடு செய்யப்படும் அன்னிய முதலீடுகள் எவ்வாறு இந்திய நாட்டுக்குள் வருகிறது, யார் மூலம் வருகிறது, சரியான முறையில் வரி செலுத்தப்பட்டுக் கொண்டு வரப்படுகிறதா எனப் பல்வேறு கோணங்களில் விசாரிக்கும் வகையில் ஏதுவாக அன்னிய முதலீடு குறித்து அனைத்துத் தகவல்களையும் ஐபி மற்றும் RAW எனப்படும் இந்திய புலனாய்வு அமைப்புகளிடம் பகிர்ந்துகொள்ள ரிசர்வ் வங்கி ஒப்புக்கொண்டது.

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

பொருளாதாரக் குற்றங்கள்

பொருளாதாரக் குற்றங்கள்

இந்தியாவில் பொருளாதாரக் குற்றங்களை முழுமையாகவும், இரும்பு கரங்களைக் கொண்டு அடக்கவும் வருவாய் துறை செயலாளர் தலைமையிலான கூட்டத்தில் ரிசர்வ் வங்கி இந்திய புலனாய்வு அமைப்புகளுக்குத் தகவல் பகிர்வு குறித்த ஒப்புதல்களை அளித்துள்ளது.

வரித் தளர்வுகள்

வரித் தளர்வுகள்

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வரிப் பயன்கள் மற்றும் தளர்வுகளை, தவறான முறையில் பயன்படுத்தாமல் இருக்க Research and Analysis Wing (RAW) அமைப்புடன் இணைந்து இத்தகைய முடிவை எடுத்துள்ளது.

<strong><em>(இந்திய நிதி அமைப்பில் இத்தனை வரியா..?)</em></strong>(இந்திய நிதி அமைப்பில் இத்தனை வரியா..?)

தகவல் பெட்டகம்

தகவல் பெட்டகம்

இதன் படி இனி இந்தியாவில் செயல்படும் ஒவ்வொரு நிறுவனங்களின் முதலீடு, பங்கு வெளியீடு எனச் சகலமும் பதவு செய்யப்படும் ஒரு தனித் தகவல் பெட்டகத்தை உருவாக்கவும் நிதியமைச்சகம் மத்திய பொருளாதாரப் புலனாய்வு அமைப்பிற்கு உதிரவிட்டுள்ளது.

2 முறைகள்

2 முறைகள்

தற்போதைய நிலையின் படி இந்தியாவில் ஆட்டோமேடிக் முறை மற்றும் FIPB அமைப்பின் அனுமதி வாயிலாகத் தான் இந்தியாவில் அன்னிய முதலீடு செய்யப்பட உள்ளது.

பணச் சலவை

பணச் சலவை

இதன் அடிப்படையிலான தகவல்களை ஆர்பிஐ மற்றும் FIPB அமைப்புகள் IB மற்றும் RAW அமைப்புகளிடம் பகிர ஒப்புதல் அளித்துள்ளது. இப்புதிய நடவடிக்கையின் மூலம் பணச் சலவை அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது.

59 பில்லியன் டாலர்

59 பில்லியன் டாலர்

2015ஆம் ஆண்டில் மட்டும் இந்திய சந்தையில் சுமார் 59 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Black money: RBI to share FDI-related information with IB, RAW

The Reserve Bank of India (RBI) will share FDI-related information with country's intelligence agencies -- IB and RAW -- to check black money from entering the country.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X