பெட்ரோல், மொபைல் சேவை அடுத்து கேபிள் டிவிக்குள் நுழையும் "முகேஷ் அம்பானி"..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

மும்பை: இந்திய பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தைப் பிடித்து வரும் முகேஷ் அம்பானி மிகப்பெரிய முதலீட்டுத் திட்டத்துடன் கேபிள் டிவி துறையில் இறங்க உள்ளார்.

(பிஎப் மீதான வரி விதிப்பு வாபஸ்.. தப்பித்தது இளைஞர்கள் பட்டாளம்..)(பிஎப் மீதான வரி விதிப்பு வாபஸ்.. தப்பித்தது இளைஞர்கள் பட்டாளம்..)

இதனால் தனது தம்பி அனில் அம்பானி மட்டும் அல்லாமல் நாட்டில் சிறு, குறு கேபிள் டிவி நிறுவனங்களையும் ஆட்டிப்படைக்க வேண்டும் என முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளார்.

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

நாட்டின் மிகப்பெரிய தனியார் மற்றும் லாபகரமான நிறுவனம் எனப் போற்றப்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் சிறந்து விளங்கி வருகிறார்.

ஆனால் சமீப காலமாக இவரது கண் வாடிக்கையாளர் சேவையின் பக்கம் திரும்பியுள்ளது. இதன் ஒரு பகுதி தான் டெலிகாம் சேவை.

டெலிகாம் மற்றும் கேபிள் டிவி

டெலிகாம் மற்றும் கேபிள் டிவி

நாட்டின் 4ஜி மற்றும் தொலைத்தொடர்பு சேவையை மிகப்பெரிய அளவில் துவங்க சுமார் 18 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்து உருவாக்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்தச் சில மாதங்களுக்குள் துவங்க உள்ள நிலையில், தற்போது கேபிள் டிவி-யின் பக்கம் இவரது கண் திரும்பியுள்ளது.

முகேஷ் அம்பானி 2 பில்லியன் டாலர் முதலீட்டுடன் இந்தியாவில் "Last mile" எனப்படும் கேபிள் டிவி துறையைக் கட்டி ஆளக் கிளம்பியுள்ளார்.

கேபிள் டிவி

கேபிள் டிவி

இந்தியாவில் ஹோம் என்டர்டெயின்மென்ட் துறைக்கு மிகப்பெரிய சந்தை மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளது. இத்துறையில் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் உள்ளபோதும், குறைவான லாப வர்த்தகம் மட்டுமே உள்ளது. இதனாலேயே தான் இத்துறையில் மூலைக்கு மூலை ஒரு நிறுவனங்கள் அல்லது ஆப்ரேட்டகள் உள்ளனர்.

ஆதிக்கம்

ஆதிக்கம்

நம்நாட்டில் கேபிள் டிவி இணைப்புகளைப் பல நிறுவனங்களின் கையில் உள்ளது, இதில் மிகப்பெரிய நிறுவனம் என ஒன்றும் கிடையாது. ஆனால் சில முக்கிய நிறுவனங்கள் மட்டுமே இத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

அம்பானி டெலிவிஷன்..

அம்பானி டெலிவிஷன்..

இத்திட்டத்தின் அடிப்படையில் முகேஷ் அம்பானியின் டெலிவிஷன் நிறுவனம் கடந்த சில நாட்களில் ஊழியர்கள் எண்ணிக்கையில் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது.

இவர்களை வைத்துக்கொண்டு தான் இந்தியாவில் மூலை முடுக்குகளில் இருக்கும் ஒவ்வொரு கேபிள்டிவி ஆப்ரேட்டர்களையும் கவரத் திட்டமிட்டுள்ளார் முகேஷ் அம்பானி.

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

மேலும் இந்திய கேபிள் டிவி உலகில் ஆதிக்கம் செலுத்தும் ஹேத்வே கேபிள், டென் நெட்வொர்க்ஸ், மற்றும் சிட்டி கேபிள் ஆகிய நிறுவனங்களைக் கைப்பற்றவும் அல்லது ஒன்றிணைந்து செயல்படும் வகையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இலக்கு

இலக்கு

இப்புதிய நிறுவனம் அடுத்த ஆறு மாதத்தில் 50 லட்சம் வாடிக்கையாளர்கள், 3 வருடத்தில் 2 கோடி வாடிக்கையாளர்களைப் பெறும் இலக்குடன் செயல்பட்டு வருகிறது.

செம திட்டம்..

செம திட்டம்..

இந்நிலையில் வாடிக்கையாளர் மற்றும் வர்த்தகத்தைப் பெறும் "ஆம்பானி டெலிவிஷன்", தனது வாடிக்கையாளர்களுக்குப் பல நூறு சேனல்கள், சில HD சேனல்கள், இதனுடன் இண்டர்நெட் இணைப்பு, லேண்டுலைன் இணைப்பு, ஹோம் சர்வைலன்ஸ் ஆகிய சேவையும் வழங்கத் திட்டமிட்டுள்ளது.

இதுமட்டும் அல்லாமல் NETFLIX வடிவிலான ஜியோ பிளே எனப்படும் திரைப்படம் மற்றும் டிவி சிரியல் பதிவின் தொடர் இணைப்பையும் வழங்க திட்டமிட்டுள்ளது இப்புதிய நிறுவனம்.

அனில் அம்பானி

அனில் அம்பானி

டெலிகாம் சேவையில் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தைப் பெற்று இத்துறையில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள முகேஷ் அம்பானியின் தம்பி முகேஷ் அம்பானிக்கு எதிராகவும், இத்துறையில் கிடைக்கு அதீத லாபத்தைக் கணக்கிட்டு முகேஷ் அம்பானி புதிய டெலிகாம் நிறுவனத்தைத் துவங்க உள்ளார்.

ரிலையன்ஸ் ஜியோவின் துவக்கம்

ரிலையன்ஸ் ஜியோவின் துவக்கம்

இந்நிறுவனத்தின் துவக்கம் மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டும் என நினைத்த முகேஷ், அனில்-இன் நிறுவனத்துடன் (RCOM) இணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளார். இதற்காக இரு தரப்பும் ஒப்புதல் அளித்துள்ளது.

திடீர் விரிவாக்கம்

திடீர் விரிவாக்கம்

கடந்த 4 வருடமாக அமைதியாக இருந்த RCOM நிறுவனம் கடந்த சில மாதங்களாக மிகப்பெரிய அளவில் வர்த்தம் விரிவாக்கம் செய்ததுள்ளது.

சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் செயல்பட்ட ரஷ்ய டெலிகாம் நிறுவனமான சிஸ்டமா நிறுவனத்தை மிகப்பெரிய தொகை கொண்டு கைப்பற்றியது.

தற்போது பல ஊழல் வழக்கில் சிக்கியுள்ள ஏர்செல் நிறுவனத்தைக் கைப்பற்றவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இக்கைப்பற்றுதல் மூலம் RCOM நிறுவனம் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வாடிக்கையாளர் தொலைத்தொடர்பு நிறுவனமாகத் திகழும்.

இணைப்பு

இணைப்பு

டெலிகாம் துறையில் அனில்-முகேஷ் இருவரும் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளதால், ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் ஆகும் நேரத்தில் நாட்டின் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமாகத் திகழும் ஏர்டெல் ஓரம்கட்டப்பட்டு முன்னணி நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ இருக்கும்.

மேலும் இதன் அறிமுகச் சலுகையில் மயங்கி ஏர்டெல், வோடாபோன், ஐடியா போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கும் ஈர்க்கப்படுவார்கள்.

மக்கள்

மக்கள்

இதனால் இந்திய மக்கள் பெரும் பகுதியினர் டெலிகாம் மற்றும் கேபிள் டிவி சேவைக்காக ரிலையன்ஸ் என்னும் ஒரு தனியார் நிறுவனத்தை நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

சட்டம் தன் கையில்

சட்டம் தன் கையில்

சந்தையின் இந்நிறுவனத்தின் பெயரில் உருவாகும் ஆதிக்கத்தால் அடுத்தச் சில வருடங்களில் இக்கூட்டணி நிறுவனங்கள் வைப்பதே கட்டணம், வைப்பதே சட்டம்.

மக்களின் பணம் கோவிந்தா கோவிந்தா..

அனில் அம்பானி

அனில் அம்பானி

'ஏர்செல்' நிறுவனத்தைக் கைப்பற்ற அனில் அம்பானி திட்டம்.. சோகத்தில் ஏர்டெல்..!'ஏர்செல்' நிறுவனத்தைக் கைப்பற்ற அனில் அம்பானி திட்டம்.. சோகத்தில் ஏர்டெல்..!

எம்டிஎஸ் நிறுவனத்தின் வர்த்தகத்தை முழுமையாகக் கைப்பற்றியது ரிலையன்ஸ்..!எம்டிஎஸ் நிறுவனத்தின் வர்த்தகத்தை முழுமையாகக் கைப்பற்றியது ரிலையன்ஸ்..!

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.. 4ஜி சேவைக்காக ஒன்றிணையும் அம்பானி பிரதர்ஸ்..!தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.. 4ஜி சேவைக்காக ஒன்றிணையும் அம்பானி பிரதர்ஸ்..!

அண்ணன் முகேஷ் உடன் சேர 5,500 கோடி ரூபாய் கேட்டும் தொலைத்தொடர்பு துறை..!அண்ணன் முகேஷ் உடன் சேர 5,500 கோடி ரூபாய் கேட்டும் தொலைத்தொடர்பு துறை..!

மொபைல் டவர் கம்பெனி சொத்துக்களை விற்கத் தயாரானது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்!மொபைல் டவர் கம்பெனி சொத்துக்களை விற்கத் தயாரானது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்!

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh Ambani, is muscling into the cable TV sector as part of a media and telecoms offensive that pits him against his once-estranged younger brother and threatens to shake up both industries.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X