ஆகஸ்ட் 1 தான் கடைசி.. இல்லையென்றால் 58 வயது வரை காத்திருக்க வேண்டும்: பிஎப் பணம்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: பிஎப் கணக்கு மீது மத்திய அரசு விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் வருகிற ஏப்ரல் 30 முதல் அமலாக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவித்த ஈபிஎப்ஓ அமைப்பு பிஎப் கணக்காளர்களின் கடுமையான எதிர்ப்புகள் வாயிலாக அமலாக்கத்தை ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை ஒத்திவைத்துள்ளது.

இதனால் அவரச நிதி தேவை உடையோர், சில மாதங்களுக்கு முன் திடீரென வேலை இழந்தோர் என அனைத்து தரப்பினரும் அடுத்த 3 மாதத்திற்குள் பிஎப் கணக்கில் உள்ள பணத்தை முழுமையாக எடுத்துக்கொள்ளுங்கள், இல்லை என்றால் 58 வயது வரை காத்திருக்க வேண்டும்.

பிப்ரவரி 10

பிப்ரவரி 10

கடந்த மாதம் 10ஆம் தேதி தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஈபிஎஃப் கணக்கின் திரும்பப்பெறும் தொகை மீது புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.

இக்கட்டுப்பாடுகளைப் பல நெருக்கடிகள் மற்றும் எதிர்ப்புகள் மத்தியில் மத்திய அரசு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுத் திருத்தம் செய்து வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி அமலாக்கம் செய்யப்பட உள்ளதாக ஈபிஎப்ஓ அமைப்பு தெரிவித்துள்ளது.

 

பிஎப் தொகை

பிஎப் தொகை

ஒவ்வொரு ஊழியர்களின் சேமலாப நிதி அதாவது பிஎப் கணக்கில் மாதம் தவறாமல் (கணக்காளர் பணியில் இருக்கும்போது மட்டும்.) ஒரு குறிப்பிட்ட தொகை வைப்பு வைக்கப்படும். இதில் ஊழியரின் பங்கு, ஊழியர்களுக்கு வேலை அளித்துள்ள நிறுவனத்தின் பங்கு மற்றும் வைப்பு வைக்கப்பட்டுள்ள தொகைக்கான வட்டி தொகை ஆகியவை வைப்பு வைக்கப்படும்.

இதனையே நாம் பிஎப் தொகை எனக் கூறுகிறோம்.

புதிய விதிமுறை

புதிய விதிமுறை

மத்திய அரசின் புதிய விதிமுறையின் படி, இனி பிஎப் கணக்கில் வைப்பு வைக்கப்பட்டுள்ள தொகையைக் கணக்காளர் முழுமையாகத் திரும்பப்பெற முடியாது.

ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குப் பின் பிஎப் கணக்காளர் ஒரு தனது பிஎப் கணக்கில் உள்ள தொகையை முழுமையாகத் திரும்பப்பெற நினைத்தால் மத்திய அரசு அனுமதிக்காது. ஒரு பகுதி தொகையை மட்டுமே பெறும் வகையில் மத்திய அரசு புதிய சட்ட திட்டங்களை மாற்றி அமைத்துள்ளது.

அதற்கும் பல விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் உள்ளது.

பகுதி தொகை..

பகுதி தொகை..

ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குப் பின் உங்கள் பிஎப் கணக்கில் உள்ள பணத்தைப் பெற, நீங்கள் குறைந்தது 2 மாதம் அல்லது அதற்கு மேல் வேலை இல்லாமல் இருந்திருக்க வேண்டும், அப்படியானால் உங்கள் கணக்கில் நிறுவனம் வைப்பு வைக்கப்பட்ட தொகை மற்றும் அதற்கான வட்டி தொகையை மட்டுமே மத்திய அரசு அளிக்கும்.

ஊழியர் மூலம் பிஎப் கணக்கில் வைப்பு வைக்கப்பட்ட தொகை மற்றும் அதற்கான வட்டியை 58 வயதுக்குப் பின்னரே அரசு உங்களுக்கு அளிக்கும்.

மே 1

மே 1

மத்திய அரசு தனது புதிய விதிமுறைகளை அமலாக்கம் செய்யப்பட்டால் ஆகஸ்ட் 1 முதல் 58 வயது வரையிலான காலத்தில், உங்கள் சம்பளத்தில் வெறும் 12 சதவீத தொகையை மட்டுமே வட்டியுடன் நீங்கள் பெற முடியும்.

மீதமுள்ள தொகையை 58 வயதிற்குப் பின் தான். சரி 58 வயது வரை பிஎப் தொகையை எடுக்கவில்லை என்றால் என்ன லாபம் தானே கேட்டுகிறிங்க..

மிஸ்டர் சிவகணேஷ்

மிஸ்டர் சிவகணேஷ்

ஒரு உதாரணமாக, சிவகணேஷ் என்பவர் மாதம் 25,000 ரூபாய் சம்பளம் பெறுகிறார் என வைத்துக்கொள்வோம். இவருக்கு 58 வயது வரை சிவ கணேஷ் சம்பளத்தில் மாற்றம் ஏதுமில்லை என வைத்துக்கொள்ளுங்கள்.

இந்நிலையில் இவரது பிஎப் கணக்கில் மாதம் 3,000 ரூபாய் தொடர்ந்து வைப்பு வைக்கப்படும்.

 

20 வருட வேலை

20 வருட வேலை

ஒரு நிறுவனத்தில் 20 வருமாட பணியாற்றிய சிவ கணேஷ் ஜனவரி 2016ஆம் ஆண்டு ஓய்வு பெறுகிறார். இக்காலகட்டத்தில் எவ்விதமான ஊதிய உயர்வு இல்லை என்றாலும், அவரது பிஎப் கணக்கில் சுமார் 7.20 லட்சம் ரூபாய் வைப்பு வைக்கப்படும். (12%*25000*12*20). இதற்கான வட்டி தொகை சேர்த்தால் 19 லட்சம் ரூபாய் வரை உயரும்.

இதுமட்டும் அல்லாமல் நிறுவனத்தின் மூலம் வைப்பு வைக்கப்படும் 4.20 லட்சம் ரூபாய் வட்டியுடன் 20 வருடங்களில் 11.50 லட்சம் ரூபாயாக உயரும்.

 

2 மாத இடைவேளை

2 மாத இடைவேளை

ஜனவரி 1ஆம் தேதி ஓய்வுபெற்ற சிவகணேஷ், மத்திய அரசு புதிய விதிமுறை அமலாக்கத்திற்கு முன் பிஎப் பணத்தைக் கோரினால் சுமார் 30.5 லட்சம் ரூபாய் மொத்தமாகக் கிடைக்கும். இக்காலகட்டத்தில் மொத்தமாக 9 சதவீதம் என்ற நிலையில் வட்டி கணக்கிடப்பட்டுள்ளது.

தற்போது பிஎப் கணக்கின் வட்டி விகிதம் 8.75 சதவீதம், ஒவ்வொரு வருடமும் இந்த அளவை மத்திய அரசால் மாற்றியமைக்கப்படும்.

25 வயது இளைஞன்

25 வயது இளைஞன்

இந்நிலையில் 25 வயதுடைய ஒரு இளைஞன் 58 வயதில் அதாவது 33 வருடப் பணிக்காலத்தில் எவ்வளவு தொகையைப் பெறுவான்...?

பிஎப் தொகையைக் கணக்கிடுவது எப்படி..? ரொம்ப ஈசி பாஸ்..!பிஎப் தொகையைக் கணக்கிடுவது எப்படி..? ரொம்ப ஈசி பாஸ்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

 

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

EPFO rules restricting withdrawal of employees' provident fund will come into force after April 30. Just 15 days more, get your EPF fully, orelse wait to turn 58.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X