தொடர் பணிநீக்கம்.. முதலீட்டாளர்கள் கையில் சிக்கித் தவிக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: முதலீட்டாளர்களின் நெருக்கடி, நிறுவனங்களின் கடுமையான மறுசீரமைப்பு நடவடிக்கை, அதிகளவிலான வர்த்தகப் போட்டி, ஊழியர்களின் அதிகளவிலான சம்பளம், ஸ்திரமற்ற சந்தை ஆகியவற்றின் காரணமாக இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

உணவு ஸ்டார்ட்-அப் நிறுவனமான சோமேட்டோ மற்றும் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான ஸ்னாப்டீல் நிறுவனத்தில் முதலீட்டாளர்களின் நெருக்கடியால் உருவான மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 2015ஆம் ஆண்டில் அதிகளவிலான ஊழியர்களைப் பணி நீக்கம் செய்தது.

நடப்பு நிதியாண்டிலும் இந்திய ஸ்டார்ட்-அப் சந்தை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், நிறுவனத்தைக் காப்பாற்றிக்கொள்ள அதிகளவிலான பணிநீக்கம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய ஸ்டார்ட் அப் சந்தை

இந்திய ஸ்டார்ட் அப் சந்தை

நடப்பு நிதியாண்டில் இந்திய சந்தையில் உள்ள ஸ்டார்ட்- அப் நிறுவனங்களில் அதிகளவிலான ஆட்டோமேஷன் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாலும், நிறுவனங்கள் இணைப்பு மற்றும் விற்பனை செய்யும் படலம் நிலவி வருவதாலும் அதிகளவிலான பணி நீக்கம் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

இந்நிலையில், முதலீட்டாளர்கள் பார்வையில், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் பணிநீக்கத்தை அறிவிக்கப்படுவதால், அதிகளவிலான செலவுகள் குறைப்பதற்காகவும், வர்த்தகத்தை மேம்படுத்து அதிகத் திறன் உடைய ஊழியர்களை நிறுவனத்தில் சேர்க்கவும் முடியும் எனக் கருதுகின்றனர்.

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

இதே பார்மூலாவை ஃபாலோ செய்த பிளிப்கார்ட், பல மில்லியன் டாலர் சம்பளத்தில் கூகிள், மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற மிகப்பெரிய நிறுவனங்களில் இருந்து உயர் அதிகாரிகளைப் பணியில் அமர்த்தியது.

ஆனால் இந்திய ஸ்டார்ட் - அப் சந்தையில் ஸ்திரமற்ற தன்மையைக் கண்டு 2 வருடம் கூட ஆகாத நிலையில் பல அதிகாரிகள் பிளிப்கார்ட் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

 

ஸ்னாப்டீல் முதல் கார் தேக்கோ வரை

ஸ்னாப்டீல் முதல் கார் தேக்கோ வரை

கடந்த 8 மாதத்தில் ஸ்னாப்டீல், சோமேட்டோ மற்றும் கார் தேக்கோ போன்ற முக்கிய நிறுவனங்களும் தங்களது நிதிநிலையை மேம்படுத்திக்கொள்ளவும், செலவுகளைக் குறைக்கவும் 100க்கும் அதிகமான உயர்மட்ட அதிகாரிகளைப் பணி நீக்கம் செய்துள்ளது.

35 சதவீதம்

35 சதவீதம்

இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் அதிகளவிலான சம்பளம் கொடுக்கப்படுவதால் நிறுவனத்தின் மொத்த வருவாயில் சுமார் 35 சதவீத தொகை ஊழியர்களின் சம்பளத்திற்காக மட்டுமே செலவு செய்யப்படுகிறது.

லாபமும்.. முதலீட்டாளர்களின் கெடுபிடியும்..

லாபமும்.. முதலீட்டாளர்களின் கெடுபிடியும்..

கடந்த சில வருடங்களாகப் பல்வேறு காரணங்களால் இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகப் போட்டியை சந்தித்து வருகிறது. இதனால் நிறுவனத்தில் பணத்தைப் போட்ட முதலீட்டாளர்கள் லாபத்தைக் கேட்பதால் நிறுவன தலைவர்கள் பணிநீக்கத்தை அறிவிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

லோக்கல்ஓய் (LocalOye)

லோக்கல்ஓய் (LocalOye)

டைகர் குளோபல் மேனேஜ்மென்ட் மற்றும் லைட்ஸ்பீட் வென்சர் பார்ட்னர்ஸ் முதலீடு செய்துள்ள லோக்கல்ஓய் கடந்த வருடம் மட்டும் சுமார் 60 உயர் பணியிடத்தில் இருக்கும் அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்துள்ளது.

காமென்ஃபுலோர்

காமென்ஃபுலோர்

கடந்த வருடம் கடுமையான வர்த்தகம் மற்றும் நிதிநெருக்கடியில் சிக்கியிருந்த ஆன்லைன் ரியல் எஸ்டேட் நிறுவனமான காமென்ஃபுலோர் நிறுவனம் சுமார் 100 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்தது.

இப்பணிநீக்கத்திற்குப் பின் அடுத்த இரண்டு மாதத்தில் குவிக்கர் நிறுவனம் காமென்ஃபுலோர் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.

 

ஸ்னாப்டீல்

ஸ்னாப்டீல்

இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் முக்கிய நிறுவனமான ஸ்னாப்டீல் கடந்த நிதியாண்டில் மட்டும் 200க்கும் அதிகமான ஊழியர்களை நேரடியாகப் பணிநீக்கம் செய்யாமல், தனது கால் சென்டர் பிரிவில் மாற்றியது. இதனால் பல ஊழியர்கள் தாமாகவே நிறுவனத்தை விடு வெளியேறினர்.

புட்பாண்டா

புட்பாண்டா

உணவு டெலிவரி மற்றும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான புட்பாண்டா டிசம்பர் மாதத்தில் மட்டும் 300 ஊழியர்களை நிறுவனத்தை விட்டு வெளியேற்றியது.

இது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 15 சதவீதமாகும்.

 

சோமேட்டோ

சோமேட்டோ

அதேபோல் ஜனவரி மாதத்தில் உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ 300 ஊழியர்களை வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது. இதில் பெரும்பாலான ஊழியர்கள் அமெரிக்கக் கிளையில் இருந்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பணிநீக்கம்

பணிநீக்கம்

இந்திய சந்தையில் நிலவும் இந்தக் கடுமையான சூழ்நிலையில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டிலும் அதிகளவிலான பணி நீக்கத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் அதிகாரி

கூகுள் அதிகாரி

நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் தனது வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்யவும், அதன் தொழில்நுட்ப திறனை மேம்படுத்திக்கொள்ளவும் திட்டமிட்டு கூகுள் நிறுவன ஊழியரான புனித் சோனி-யை மிகப்பெரிய சம்பளத்தில் பணியில் அமர்த்தியது.

15 மாதங்கள்

15 மாதங்கள்

தற்போது 15 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், பிளிப்கார்ட் நிறுவனத்தில் பணியாற்றிய நிலையில் புனித் சோனி நிறுவனத்தை விட்டு விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

இந்தியாவில் மிகப்பெரிய சந்தை வர்த்தகத்தை அடையத் திட்டமிட்ட பிளிப்கார்ட் தனது மொபைல் ஆப் மற்றும் இணையதளத்தின் திறனை மேம்படுத்திக்கொள்ள வருடம் 1 மில்லியன் டாலர் சம்பளத்தில் பிளிப்கார்ட் இவரைப் பணியில் அமர்த்தியது.

போட்டி..

போட்டி..

இதனால் ஈகாமர்ஸ் சந்தையில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனங்களான சோமேட்டோ, ஸ்னாப்டீல், போன்ற முன்னணி நிறுவனங்கள் உலகின் முன்னணி நிறுவனங்களில் இருந்து முக்கியப் பணியாளர்களை மிகப்பெரிய சம்பளத்தில் இந்திய நிறுவனங்கள் பணியில் அமர்த்தியது.

பிங் சேவை

பிங் சேவை

பிளிப்கார்ட் நிறுவனத்தின் மொபைல் ஆப்-இல் மெசேஜிங் சேவை மட்டுமே இந்த 15 மாத காலத்தில் புனித் சோனி அறிமுகப்படுத்தினார். ஆனால் சந்தையில் இது மிகப்பெரிய வெற்றி காண தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.

நிலையற்ற சந்தை

நிலையற்ற சந்தை

புனித் சோனி-யின் வெளியேற்றத்திற்கு முக்கியக் காரணம் இந்திய சந்தையில் ஈகாமர்ஸ் சந்தை சந்தித்து வரும் நிலையற்ற முதலீடும், வர்த்தகமும் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

 

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian startups bracing for another year of drastic belt-tightening are expected to give the axe to hundreds more employees this year, bowing to pressure from investors to trim flab and restructure operations.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X