'கிரெடிட் கார்டு' வாசிகளே உஷார்.. நொடிகளில் மாயமாகும் பண 'மோசடி'..!

By Srinivasan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் கிரெடிட் கார்டு வைத்திருக்கிறீர்களா? அதில் எப்போதாவது சிக்கலில் மாட்டியதுண்டா? கிரெடிட் கார்டு மோசடிகளால் தங்கள் வங்கிக் கணக்கில் பணம் இன்றிப் பலர் தவிக்கவிடப்படுகின்றனர். குறிப்பாக உலகில் அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடாக விளங்கும் ஐக்கிய அரபு நாடுகளில் இந்நிலை மிகவும் மோசம்.

இந்தக் கிரெடிட் கார்டு மோசடிகள் திருட்டு அல்லது முறைகேடான கார்டு உபயோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பொதுவான சொல்.

கிரெடிட் கார்டு மோசடிகள்..

கிரெடிட் கார்டு மோசடிகள்..

நாம் பல்வேறு இடங்களில் உபயோகப்படுத்தும் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலம் இத்தகைய மோசடிகள் நடக்கிறது. பொருட்களை வாங்கும்போது உரியத் தொகை செலுத்தாமல் இருத்தல் அல்லது உரிய அனுமதி இன்றிப் பணமெடுத்தல் ஆகியவை மோசடி அல்லது திருட்டாகப் பார்க்கப்படுகிறது.

இதில் மோசடிகளையும் தாண்டி சில முக்கியத் திருட்டு இதில் அடங்கியுள்ளது.

 

அடையாள திருட்டு

அடையாள திருட்டு

பல்வேறு விதமான வழிகளில் இந்த மோசடிகள் நடந்தாலும் மிக மோசமாகவும் அடிக்கடி நடக்கக்கூடியதாக இருப்பது அடையாள விவரங்களை இழப்பது.

நாம் இணையத்தில் பதிவிடப்படும் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு எண்களைத் திருடும் செயல் தற்போது மிகப்பெரிய அளவில் நடந்து வருகிறுது.

 

புள்ளி விபரம்
 

புள்ளி விபரம்

உலக அளவில் 2015 முதல் 2020 ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் கிரெடிட் கார்டு மோசடிகள் மூலம் சுமார் 183.29 பில்லியன் டாலர் அளவிலான இழப்பு ஏற்படும் என்று நீல்சன் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இவ்வறிக்கையின் படி 2014 ஆண்டில் 16.31 பில்லியன் டாலர் மதிப்பிலான கிரெடிட் கார்டு மோசடிகள் ஏற்பட்டுள்ளதாகவும். இது 2020 ஆண்டில் 35 பில்லியன் டாலரை எட்டும் எனவும் தெரிவிக்கிறது.

சரி இந்தியா பிடித்திருக்கும் இடத்தைப் பார்ப்போமா..?

11. பிரான்ஸ்

11. பிரான்ஸ்

பிரான்ஸில் நடைபெற்ற ஆய்வில் பங்கேற்றவர்களில் 26 சதவிகிதம் பேர் கடந்த ஐந்தாண்டுகளில் ஏதாவது ஒரு மோசடியில் சிக்கியதாகத் தெரிவித்துள்ளனர்.

உலகளவில் நடந்த இணையத் திருட்டு மற்றும் கிரெடிட் கார்டு மோசடிகளில் அதிகம் நடந்த நாடுகளில் பிரான்ஸ் நாடு 11வது இடத்தை அடைந்துள்ளது.

 

10. சிங்கப்பூர்

10. சிங்கப்பூர்

இன்றைய நடைமுறையில் அனைவரிடமும் கிரெடிட் உள்ளது. இதனைச் சரியான பயன்படுத்தாகக் காரணத்தினால் உலகம் முழுவதும் கிரெடிட் கார்டு மோசடிகளின் அளவு அதிகரித்துள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளில் சிங்கப்பூரில் மக்கள் தொகையில் சுமார் 28 சதவீதம் பேர் கிரெடிட் கார்டு மோசடிகளில் சிக்கியதாகத் தெரிவித்துள்ளனர்.

9. யுனைடெட் கிங்டம் (UK)

9. யுனைடெட் கிங்டம் (UK)

அண்மைக் காலங்களில் யுகே-வைப் பற்றி அதிக அளவு மோசடிகளின் இருப்பிடமாக இருப்பதாகக் கேள்விப்படுகிறோம்.

கடந்த சில ஆண்டுகளில் இந்நாட்டில் 28 சதவிகித நபர்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மோசடிகளால் பல முறை பாதிக்கப்பட்டுள்ளதாகத் கிரெடிட் கார்டு குறித்த ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.

 

8. பிரேசில்

8. பிரேசில்

இந்த ஆய்வில் 30 சதவிகித நபர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் மோசடியில் சிக்கியதாகப் பிரேசிலில் தெரிவித்திருப்பது.

ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டிகள் இந்நாட்டில் துவங்க இருக்கும் நிலையில் இந்த நாட்டைப் பற்றிக் கவனமாக இருக்கத் தூண்டுகிறது. எனவே இதைக் கவனத்தில் வைத்துக்கொண்டு ஒருவேளை நீங்கள் ஒலிம்பிக் போட்டிகளைக் காணச் சென்றால் எச்சரிக்கையுடன் உங்கள் கார்டுகளைப் பயன்படுத்தவும்.

6. தெனாப்பிரிக்கா

6. தெனாப்பிரிக்கா

ஆய்வில் பங்கேற்ற 30 சதவிகித மக்கள் இங்குக் கார்டு மோசடிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

6. ஆஸ்திரேலியா

6. ஆஸ்திரேலியா

வாழும் ஒவ்வொரு உயிரும் உங்களைக் கொல்ல நினைக்கும் விந்தையான பூமியான ஆஸ்திரேலியாவில் மோசடி வல்லுநர்களும் உங்களிடம் திருட தருணத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

உண்மையில் ஆய்வில் பங்கேற்ற 31 சதவிகிதம் பேர் கடந்த ஐந்தாண்டுகளில் கிரெடிட் கார்டு மோசடிகளால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

 

5. மெக்சிகோ

5. மெக்சிகோ

மெக்சிகோ பல்வேறு விதமான மோசடி மற்றும் குற்றங்களுக்காக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஒரு அபாயகரமான நாடு.

உங்கள் பணம் கண் முன்னே காணாமல் போகும் வாய்ப்பு இங்கு உண்டு. ஆய்வில் பங்கேற்ற நபர்களில் 33 சதவிகிதம் பேர் கடந்த ஐந்தாண்டுகளில் ஒருமுறையாவது பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

(பீர்-இல் மூழ்கி போதையில் தள்ளாடும் 'மெக்ஸிகோ'..!)(பீர்-இல் மூழ்கி போதையில் தள்ளாடும் 'மெக்ஸிகோ'..!)

4. அமெரிக்கா

4. அமெரிக்கா

அட அமெரிக்கா இந்தப் பட்டியலில் இடம்பெறாது என நினைத்தீர்களா? உண்மையில் கிரெடிட் கார்டுகள் அதிகம் உபயோகிக்கப்படும் நாடு அமெரிக்கா.

அதனாலேயே இங்கு மோசடிக்கான வாய்ப்புகளும் அதிகமானதாக உள்ளது. பார்க்ளேஸ் ஆய்வின் படி உலகின் கார்டு மோசடிகளில் 47 சதவிகித அளவிற்கு அமெரிக்கா பொறுப்பாக உள்ளது. உலகில் உள்ள கார்டுகள் எண்ணிக்கையில் 24 சதவிகிதம் கொண்டிருக்கும்போதே இங்கு இந்த நிலை.

இங்கு ஐட் குருப்பும் ஏசிஐ வோர்ல்ட்வைட் அமைப்பும் இணைந்து வெளியிட்ட ஆய்வறிக்கையில் 41 சதவிகித நபர்கள் கார்டு மோசடிகளில் கடந்த ஐந்தாண்டுகளில் சிக்கியதாகத் தெரிவித்துள்ளார்கள்.

 

3. இந்தியா

3. இந்தியா

மக்கள் தொகை நிறைந்த நாடுகளில் ஒன்றான இந்தியாவிற்கும் மேற்கூறிய அளவு பொருந்தும். இங்கும் 41 சதவிகித நபர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் மோசடிகளை எதிர்கொள்ள வேண்டியதாகத் தெரிவித்துள்ளனர்.

2. சீனா

2. சீனா

இது ஒன்றும் ஆச்சரியமான விசயம் இல்லை. ஆனால் சீனா உலகில் இரண்டாவது மோசமான கார்டு மோசடிகளில் சிக்கும் நாடு. 42 சதவிகித நபர்கள் ஆய்வின் போது கடந்த ஐந்தாண்டுக் காலத்தில் கார்டு மோசடிகளால் பாதிக்கப்பட்டதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

1. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஈ)

1. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஈ)

இந்த நாடு ஒன்றும் பரப்பில் அவ்வளவு பெரியதில்லை என்றாலும் உலகின் எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் ஏழாவது இடத்திலுள்ளது. இந்தப் பணக்கார நாட்டின் குடிமகன்கள் ஆய்வில் பங்கு பெற்றபோது 44 சதவிகித நபர்கள் தாங்கள் கடந்த ஐந்தாண்டுகளில் கிரெடிட் கார்டு மோசடிகளில் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்ததால் இந்த நாடு இப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கிறது. ம்ம்ம் எல்லாம் எண்ணெய் செய்யற வேலை...

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

 

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Credit Card Frauds: India in 3rd place, UAE at top

Many are left without the money in their bank accounts due to fraud involving credit cards, especially those living in these 11 worst countries for credit card fraud.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X