இனி இன்போசிஸை விட்டு யாரும் வெளியே போக முடியாது.. புதிய திட்டத்துடன் விஷால் சிக்கா..!

அட பாவிகளா.. மனுஷன முன்னேற விடவே மாட்டிங்களா..? இன்போசிஸ் ஊழியர்களின் இப்போதைய மைண்ட் வாய்ஸாக இருக்கும்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ், கடந்த சில மாதங்களாக உயர் அதிகாரிகளின் தொடர் வெளியேற்றத்தால் மிகப்பெரிய அளவிலான மாற்றத்தைச் சந்தித்து அஸ்திவாரமே ஆடம் கண்டது.

இந்த ஆட்டத்தில் ஆடிப்போன விஷால் சிக்கா 2017ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளுக்குப் பின் வர்த்தக மற்றும் லாப அளவுகளின் சரிவை குறித்தும், நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் வெளியேற்றத்தைக் குறித்தும், கடிதம் மூலம் ஊழியர்களிடம் தனது சோகத்தைப் பங்குப்போட்டுக்கொண்டார். சில நாட்களுக்கு முன்பு மிகவும் கணிசமான லாபத்துடன் தனது 2வது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது இன்போசிஸ்.

இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தில் அடுத்து யார் வெளியேறப் போகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கும் புதிய வழிமுறையை உருவாக்கியுள்ளனர்.

அட பாவிகளா.. மனுஷன முன்னேற விடவே மாட்டிங்களா..? இதுதான் இன்போசிஸ் ஊழியர்களின் இப்போதைய மைண்ட் வாய்ஸாக இருக்கும். என்ன சரியா..?

பயிற்சி

பயிற்சி

இன்போசிஸ் நிறுவனம் அதிகளவிலான உயர் அதிகாரிகள் வெளியேற்றத்தைக் கண்ட நிலையில், இதுபோன்ற நிலையில் இனி சிக்கிக்கொள்ளக்கூடாது என முடிவு செய்துள்ளது.

இதன் வெளிப்பாடாகவே நிறுவனத்தில் அடுத்தமட்ட உயர் அதிகாரிகளைக் கண்டறிந்து அவர்களுக்குப் புதிய பயிற்சிகளை அளிக்கத் திட்டமிட்டுள்ளது. இதுமட்டும் அல்லாமல் பயிற்சி பெறும் அதிகாரிகள் அனைவரையும் புதிய பொறுப்புகளிலும், துறையிலும் பணியில் அமர்த்தவும் திட்டமிட்டுள்ளது.

 

கிருஷ்ணமூர்த்திச் சங்கர்

கிருஷ்ணமூர்த்திச் சங்கர்

இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய லீடர்ஷிப் திட்டங்கள் நிறுவனத்தைப் பல்வேறு வடிவங்களில் வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்லுவது மட்டும் அல்லாமல் புதிய நிர்வாகத் தலைவர்களை உருவாக்கும் மிகப்பெரிய முயற்சி என இன்ரோசிஸ் நிறுவனத்தின் நிர்வாகத் துணை தலைவர் கிருஷ்ணமூர்த்திச் சங்கர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

25 ஊழியர்கள்
 

25 ஊழியர்கள்

இத்திட்டத்தில் லீடர்ஷிப் மட்டும் அல்லாமல் ஊழியர்களுக்குத் தேவையான பல்வேறு பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் முதல்கட்டமாக அடுத்தமட்ட உயர் அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும் விதமாக 25 ஊழியர்களுக்கு மட்டும் இப்புதிய திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளோம் எனவும் கிருஷ்ணமூர்த்திச் சங்கர் கூறினார்.

பார்தி ஏர்டெல்

பார்தி ஏர்டெல்

நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனத்தில் முக்கியப் பதவியில் இருந்து கிருஷ்ணமூர்த்திச் சங்கர் 2015ஆம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தில் இணைந்தார்.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்

இதனுடன் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டம், ஏற்கனவே இன்போசிஸ் நிறுவனம் அமெரிக்க ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தும் லீடர்ஷிப் திட்டம் இல்லை. இது முற்றிலும் மாறுபட்டது எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக லீடர்ஷிப் திட்டத்தின் கீழ் சுமார் 50 ஊழியர்கள் பயிற்சிபெற்றுள்ளதாக இன்போசிஸ் தெரிவித்துள்ளது.

 

விஷால் சிக்கா

விஷால் சிக்கா

இந்நிறுவனத்தில் தற்போது செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களுக்கும் விஷால் சிக்கா தலைமையிலான முக்கிய நிர்வாகக் குழுவே செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

3-4 வருடங்கள்

3-4 வருடங்கள்

இத்தகைய பயிற்சி இன்போசிஸ் நிறுவனத்தில் அடுத்த 3-4 வருடங்கள் தொடர்ந்து நடக்கும். காரணம் இன்போசிஸ் நிறுவனத்தின் அடுத்தகட்ட திட்டத்திங்களுக்கு எத்தகைய நிர்வாகத் தலைவர்கள் வேண்டும் என்பதைக் கண்டறிய சில வருடங்கள் தேவைப்படும் என 3-4 வருடங்கள் கிருஷ்ணமூர்த்தித் தெரிவித்தார்.

ஊழியர்கள் வெளியேற்ற

ஊழியர்கள் வெளியேற்ற

இத்தகைய பயிற்சிகள் மூலம் உயர் மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளின் வெளியேற்றம் அதிகளவில் குறையும். இதனால் நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் வலிமை தொடர்ந்து அதிகரிக்கும்.

புதிய வழிமுறை

புதிய வழிமுறை

அதேபோல் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து அடுத்து யார் வெளியேறப் போகிறார் என்பதைக் கண்டறியும் ஒரு புதிய செயல்வடிவத்தையும் உருவாக்கியுள்ளது.

வெளியேற விரும்பும் உயர் அதிகாரிகளின் தடுக்கும் விதமாகவே இத்தகைய பயிற்சி திட்டங்கள் ஐடி நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகின்றனர்.

 

மனித வளப்பிரிவு

மனித வளப்பிரிவு

இன்போசிஸ் நிறுவனத்தின் மனித வளப்பிரிவு புதிய icount என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் எந்த ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்திருக்கிறார் என்பதைக் கண்டறிய முடியும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு predictive analytics tool ஆகும்.

செத்தான் சேகர்..

 

'பம்பர் ஆஃபர்'..!

'பம்பர் ஆஃபர்'..!

இன்போசிஸ்: அந்த 7 பெருந்தலைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?இன்போசிஸ்: அந்த 7 பெருந்தலைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

<strong>இன்போசிஸ் ஊழியர்களுக்கு அடித்தது யோகம்.. 'பம்பர் ஆஃபர்'..!</strong>இன்போசிஸ் ஊழியர்களுக்கு அடித்தது யோகம்.. 'பம்பர் ஆஃபர்'..!

 

நியூஸ்லெட்டர்

நியூஸ்லெட்டர்

சுடச்சுட வர்த்தகச் செய்திகள் தினமும் உங்களுக்காக..!

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys is using an algorithm to predict who might leave company next

Infosys is putting new programmes in place to identify and develop the company's next batch of top leaders. HR initiatives - including its new iCount app which will have a feedback feature. "We've developed a predictive analytics tool or rather an algorithm which identifies who are the people who are at risk of leaving."
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X