100மில்லி தயிர் பாக்கெட் விலை 972 ரூபாய்.. ஆர்டிஐ பதிலுக்கு ரயில்வே துறை மறுப்பு..!

100மில்லி தயிர் பாக்கெட் விலை 972 ரூபாய்.. ஆர்டிஐ பதிலுக்கு ரயில்வே துறை மறுப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய ரயில்வேயின் கேட்ரிங் துறை உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்யும் போது பல மடங்கு விலை அதிகமாக வாங்கப்பட்டுள்ளதாக அஜய் போஸ் என்பவரின் கேள்விக்கு ஆர்டிஐ பதில் கிடைத்தது. இதைக் கண்டு போஸ் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ச்சி அடைந்தது.

இந்நிலையில் தற்போது புதிய திருப்பமாக, இந்திய மக்களால் மிகவும் மதிக்கப்படும் ஆர்டிஐ அளித்த தகவல் தவறாது என இந்திய ரயில்வே அமைச்சகம் விளக்கமாகப் பதில் அளித்துள்ளது.

இந்திய ரயில்வே

இந்திய ரயில்வே

ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள உணவகங்களில் பெரும்பாலும் உணவுகள் தரமாகக் கிடைப்பதில்லை எனப் பயணிகள் ஒரு பக்கம் புகார்கள் அளிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தத் தர பற்றாக்குறைக்கு ரயில்வே துறையில் இருக்கும் பல்வேறு இடைத்தரகர்கள், கான்டிராக்டர் ஆகியோர் முக்கியக் காரணம் என மக்கள் மத்தியில் கருத்து நிலவினாலும், இதனை முழுமையாகக் களைய மத்திய அரசும், ரயில்வே துறையும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

ஆர்டிஐ பதில்

ஆர்டிஐ பதில்

அஜய் போஸ் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேட்ட கேள்விகளுக்கு, ஆர்டிஐ அமைப்பு மிகவும் தவறான பதிலை அளித்துள்ளது.

போஸ் இந்திய ரயில்வே துறை உணவு கொள்முதல் குறித்துக் கேட்ட கேள்விகளுக்கு ஆர்டிஐ அளித்த பதிலை முதலில் பார்ப்போம்.

100மில்லி அமுல் தயிர் பாக்கெட் 14 கோடி ரூபாய் அளித்து 15,336 பாக்கெட் வாங்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் 100 கிராம் கொண்ட ஒரு தயிர் பாக்கெட்டின் விலை 972 ரூபாய் ஆகும்.

 

குளிர்பானங்கள் மற்றும் நீர்

குளிர்பானங்கள் மற்றும் நீர்

குளிர்பானங்கள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் கூட 20 முதல் 30 மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தயிரில் துவங்கி, வாட்டர் பாட்டில், மாமிசம் எனப் பலவற்றைக் குறித்துப் பதில் அளித்துள்ளது ஆர்டிஐ அமைப்பு. ஆனால் இவை அனைத்தும் தவறாகத் தகவல்களை என இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

 

அதிகாரிகள் பணிநீக்கம்

அதிகாரிகள் பணிநீக்கம்

மேலும் ஆர்டிஐ கேள்விக்குத் தவறாகப் பதில் அளித்த 3 அரசு அதிகாரிகளை மத்திய அரசு தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது.

அவர்கள் அளித்த பதில்களின் முழுமையான விபரம்.

 

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்

ஆர்டிஐ அனுப்பிய பதிலில் 58 லிட்டர் எண்ணெய்யை 1,241 ஒரு லிட்டர் என 72,034 ரூபாய் கொடுத்து வாங்கியதாகக் குறிப்பிட்டு இருந்தது. அதற்கு மருப்பு தெரிவித்து மத்திய ரயில்வே அனுப்பிய பதிலில் 15 லிட்டர் கொண்ட 58 டின் எண்ணெய் 72,034 ரூபாய்க்கு வாங்கப்பட்டதாகவும், ஒரு லிட்டர் 82.7977 ரூபாய் என்றும் குறிப்பிட்டு உள்ளது.

துவரம் பருப்பு

துவரம் பருப்பு

ஆர்டிஐ துவரம் பருப்பு அதிக விலை கொடுத்து வாங்கியதாகத் தெரிவித்திருந்தது ஆனால் துவரம் பருப்பு விலை உயர்ந்து 143 ரூபாய் கிலோ என விலை இருந்த போது கொள்முதல் செய்த விலை இது என்று மத்திய ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

டாடா உப்பு

டாடா உப்பு

ஆர்டிஐ அளித்த பதிலில் டாடா உப்பு 49 ரூபாய் கிலோவிற்கு அளிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய ரயில்வே கிலோவிற்கு 17.8 ரூபாய் தான் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கின்றது.

அமுல் தயிர்

அமுல் தயிர்

ஆரிடிஐ பதிலில் 100கிராம் கொண்ட 15,336 கப் தயிர் வாங்க 1,49,19,934.32 ரூபாய் செலவு செய்யப்பட்டதாகவும் ஒரு கப்பின் தயிர் 972.87 ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய ரயில்வே இது டைப் செய்யும் போது ஏற்பட்ட பிழை என்றும் 100 கிராம் கொண்ட 108 கப் அட்டைப்பெட்டி ஒன்று 972.87 ரூபாய் என்றும், மொத்தமாக 142 பெட்டிகள் வாங்கப்பட்டு அதற்கு 1,38,148 ரூபாய் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

எழும்பு இல்லா கோழி கறி

எழும்பு இல்லா கோழி கறி

ஆர்டிஐ எழும்பு இல்லா கோழி கறி கிலோ 237 ரூபாய்க்கு வாங்கப்பட்டதாகவும் சந்தை விலை 160 ரூபாய் எனவும் குறிப்பிட்டு இருந்தது. ஆனால் 650 கிராம் எழும்பு இல்லா கோழி கறி 237 ரூபாய் என்றும், எழும்பு உள்ள கோழி கறி 160 ரூபாய் எனக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

ஜன் ஆஹார்

ஜன் ஆஹார்

மத்திய ரயில்வேயின் இந்தச் சமையல் அறையில் இருந்து பிற ரயில்வே உணவகங்களுக்கும், நெடுந்தூர ரயில்களுக்கும், கேண்டீன்களுக்கும், ரயில் நிலையங்களுக்கு உணவு அளிக்கப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கு இருந்து தான் குறைந்த விலையில் உணவு விநியோகிக்கும் ஜன் ஆஹார் போன்ற உணவகங்களுக்கும் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றது.

 

அப்பீல் மனுவுக்கு வந்த பதில்

அப்பீல் மனுவுக்கு வந்த பதில்

ஆர்டிஐ-க்குப் போஸ் முதலில் விண்ணப்பிக்கும் போது பதில் வரவில்லை, பின்னர் அப்பீள் செய்த உடன் விவரங்கள் இவருக்கு அளிக்கப்பட்டு இருக்கின்றது.

பதில் கடிதத்தை ஏப்ரல் 10-ம் தேதி பெற்று பார்த்த உடன் இவர் அதிர்ச்சி அடைந்ததாகவும் இவர் தெரிவித்தார்.

 

10 மடங்கு அதிக விலை

10 மடங்கு அதிக விலை

சந்தையில் விற்கப்படும் ஒரு பொருளை 10 மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கி இருப்பது பெறும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கிட்டத்தட்ட எல்லாப் பொருட்களும் சந்தை விலையை விட அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பைப் பெற்றது.

ஒரே சப்ளையர்

ஒரே சப்ளையர்

குறிப்பாக ஒரு சப்ளையர் உடன் இருந்து பொருட்களைக் கொள்முதல் செய்து வந்துள்ளனர். மும்பையின் பிரதான ரயில் நிலையங்களான லோகமான்யா திலக் டெர்மினஸ் மற்றும் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ஆகிய இரண்டு ரயில் நிலையங்கள் மற்றும் ஜன் ஆஹார் உணவகங்களில் சமீபத்தில் ரயில்வே நிர்வாகம் சமீபத்தில் ஆடிட் செய்தது குறிப்பிடத்தக்கது.

லட்சம் கணக்கான பயணிகள்

லட்சம் கணக்கான பயணிகள்

மத்திய ரயில்வேயில் கேட்ரிங் துறை உணவகங்கள் மற்றும் கேண்டின்களில் தினமும் லட்சம் கணக்கான பயணிகள் உணவுகளை எடுத்துக்கொள்வார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Railway Catering scam: Food products purchased at ten times their MRP

Railway Catering scam: Food products purchased at ten times their MRP
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X