பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்த காலத்தில் பல்வேறு நிறுவனங்கள் அதிகளவிலான பணத்தைப் பரிமாற்றம் செய்துள்ளதை வருமான வரித்துறை மற்றும் நிதியமைச்சகம் சில நாட்களுக்கு முன்பு கண்டுபிடித்தது.
தற்போது இந்த நிறுவனங்களின் மீது அதிரடியாக நிதியமைச்சகமும், மத்திய அரசும் நடவடிக்கை எடுத்துள்ளது.

2 லட்ச நிறுவனங்கள்
இந்திய நிறுவனங்களின் முறைகேடான பணப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து நாட்டில் கருப்புப் பணத்தை முழுமையாக ஒழிப்பது மட்டுமல்லாமல் இக்காலகட்டத்தில் முறையற்ற பணப் பரிமாற்றம் செய்த சுமார் 2,09,032 ஷெல் நிறுவனங்களின் வங்கி கணக்குகளை முழுமையாக முடங்கியுள்ளது.

கண்காணிப்பு
அதுமட்டும் அல்லாமல் வருமானத்தை முறையாகக் கணக்குக்காட்டாமல் இருக்கும் பிற நிறுவனங்களின் வங்கி கணக்கையும் முழுமையாகக் கண்காணிக்க மத்திய அரசு, அனைத்து வணிக வங்கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

24 அதிகார வரம்புகள்
இந்த 2.09 லட்ச நிறுவனங்களும் குறிப்பிட்ட பகுதியைச் சார்ந்த நிறுவனங்கள் என அல்லாமல் 24 அதிகார வரம்புகளிலும் இந்த நிறுவனங்கள் உள்ளது. இதனால் தனிப்பட்ட பிராந்தியம் சார்ந்த கவனிப்பு இல்லாமல் ஒட்டுமொத்த நிறுவனங்களின் செயல்பாடுகளையும் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது நிதியமைச்சகம்.

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம்
மேலும் இந்த வங்கி கணக்குகளை நிறுவனத்தைச் சேர்ந்த யாராலும் பயன்படுத்த முடியாது.
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் தத்தகம் நிறுவனங்கள் மீதான பிரச்சனைகளை முழுமையாகக் களைக்கப்பட்ட பின்பே வங்கிகள் பயன்படுத்த முடியும் எனவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

பணமதிப்பிழப்பு
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் பணமதிப்பிழப்பின் 2ஆம் கட்ட நடவடிக்கையாக வர்த்தகச் சந்தையில் பார்க்கப்படுகிறது.
2ஆம் கட்ட நடவடிக்கைகள் பற்றித் தெரிந்துகொள்ள இதைக் கிளிக்குங்கோ.