பிட்காயினில் முதலீடு செய்பவர்களைக் கண்காணிக்கும் வருமான வரித்துறை..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

உலக முதலீட்டுச் சந்தையைப் புரட்டிப் போட்ட கிரிப்டோகரன்சி, இந்தியாவில் இதுநாள் வரையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, ஆனாலும் இந்தியாவில் பல கிரிப்டோகரன்சி வர்த்தகத் தளம் இயங்கி வருகிறது.

இதன் வாயிலாகப் பல லட்சக்கணக்கான இந்தியர்கள் ஆர்வமாக முதலீடு செய்து வருகின்றனர்.

கண்காணிப்பு

இந்தியாவில் கிரிப்டோகரன்சி முதலீடு இன்னமும் அங்கீகரிக்கப்படாத நிலையில், பிட்காயினில் யார் முதலீடு செய்கிறார்கள் என அடையாளம் காணும் பணியைக் கர்நாடகா புலனாய்வு இயக்குநரகம் நடத்தி வருவதாக இத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நடவடிக்கை இந்தியா முழுவதும் நடப்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

 

133A சட்டம்

முதலீட்டாளர்களையும், வர்த்தகர்களைக் கண்டறியும் வகையில் வருமான வரிச் சட்டம் 133Aயின் கீழ் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

ஆய்வு

இந்த ஆய்வில் பிட்காயினில் முதலீடு செய்பவர்கள் யார், அவர்களுடைய வங்கி கணக்கு மற்றும் விபரம். பிட்காயினை டிரான்ஸ்பர் செய்யும் கணக்குகள் மற்றும் அதன் விபரங்கள் ஆகியவற்றையும் கண்காணிக்க உள்ளது புலனாய்வு இயக்குநரகம்

9 பரிவர்த்தனை தளம்

இந்த ஆய்வு இந்தியாவின் 9 முக்கியப் பிட்காயின் எக்ஸ்சேஞ்ச் தளத்தில் செய்யப்பட உள்ளது.

இது ரெய்டு போன்றது அல்ல, இதில் முதலீடு செய்பவர்களின் விபரங்களைச் சேகரிக்கும் ஒரு முயற்சி.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

People who investing in bitcoin are under IT radar

People who investing in bitcoin are under IT radar
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns