உலகையே திக்குமுக்காட வைத்த சடோஷி நக்மோடோ.. யார் இவர்..? என்ன செய்தார்..?

Written By:
Subscribe to GoodReturns Tamil

இன்று தங்கத்திற்கு இணையாகவும், அடுத்தச் சில ஆண்டுகளில் தங்கத்தின் மதிப்புப் பாதியாகக் குறையும் அளவிற்கு உலக முழுவதும் ஆதிக்கம் செலுத்துகிறது கிரிப்டோகரன்சி. சந்தையில் இது ஏமாற்றும் திட்டம், போலி திட்டம், முதலீட்டாளர்களின் பணத்தை ஸ்வாகப் போடப்போகிறார்கள் எனப் பல்வேறு செய்திகள் நாள்தோறும் வெளிவந்தாலும், இதன் வளர்ச்சி சற்றும் குறைந்தப்பாடு இல்லை.

அமெரிக்கா உட்படப் பல நாடுகள் தங்கத்தை அதிகளவில் இருப்பு வைத்திருக்கும் காரணத்தினால் கிரிப்டோகரன்சியை எதிர்த்து வருகின்றனர் என்றும் ஒருதரப்புக் கூறப்படுகிறது.

கிரிப்டோகரன்சியின் இன்றைய வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது பிட்காயின் என்றால் மிகையாகாது. இந்தப் பிட்காயினைக் கண்டுபிடித்தவர்தான் சடோஷி நக்மோடோ.

பிட்காயின்

கிரிப்டோகரன்சிக்கு அடித்தளமிட்ட பிட்காயினை உருவாக்கிய சடோஷி நக்மோடோ என்ற பெயரும், சில முக்கியத் தீர்வுகளும் தான் தற்போது இச்சந்தையை ஆட்டிப்படைத்து வருகிறது.

யார் இந்தச் சடோஷி நக்மோடோ..?

நாம் படிக்கும் கதை புத்தகத்தில் வரும் கற்பனை பெயர் போலத் தான் சடோஷி நக்மோடோ. இப்படி ஒரு பெயரில் யாருமே இல்லை என்பதே உண்மை.

ஆனால் பிட்காயினை உருவாக்கியவரின் பெயரை சடோஷி நக்மோடோ என்று பல்வேறு ஆதாரங்களைக் கிடைத்துள்ளது. இதனை உருவாக்கியது தனிநபரா, ஆணா பெண்ணா அல்லது ஒரு குழுவாக உருவாக்கப்பட்டதா என்று எதுவும் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

 

2007இல் துவக்கம்..

கிரிப்டோகரன்சியான பிட்காயின் திட்டம் முதல் முறையாக 2007ஆம் ஆண்டுத் துவங்கப்பட்டு 2008ஆம் ஆண்டுச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. பிட்காயின் உருவாக்கும் திட்டம் 2010வரையில் நீடித்தது.

கிரிப்டோகரன்சி என்னும் அதிவேக கடல் கடந்த பணப் பரிமாற்ற சேவையை ஜப்பான் நாட்டைத் தலைமையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்றும் தெரிகிறது.

 

10 லட்சம் பிட்காயின்

கற்பனை பெயர் கொண்ட இந்தச் சடோஷி நக்மோடோ என்னும் நபரிடம் சுமார் 10 லட்சம் பிட்காயின் இருப்பதாகத் தெரிகிறது. இந்தியாவில் ஒரு பிட்காயின் மதிப்பு 11 லட்சத்தில் இருந்து 12 லட்சம் ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெயர் விளக்கம்

சடோஷி நக்மோடோ என்ற பெயருக்கு விளக்கமும் உண்டு ஜப்பான் மொழியிஸ்

சடோஷி என்றால் ஞானம் என்று பொருள்
நக்மோடோ என்றால் மத்திய சக்தி (central source)

ஆகச் சடோஷி நக்மோடோ central source of wisdom என்று பொருள்

 

அரசு வெறுப்பு

பொதுவாக ஒரு துறையை மத்திய பகுதியில் இருந்து கட்டுப்படுத்தும் (centrally controlled networks) அமைப்பைத் தனியாரிடம் இருந்தால் அரசுக்குப் பிடிக்காது. உதாரணமாக நேப்ஸ்டர் நிறுவனத்தை அமெரிக்க அரசு முழுமையாக முடக்கியது மறந்திருக்க முடியாது. இத்தகைய எதிர்ப்புகள் தான் தற்போது பிட்காயின் உட்படப் பிற கிரிப்டோகரன்சி ஆகியவற்றுக்கு ஏற்பட்டு வருகிறது.

இப்போது சொல்லுங்க இவர் உலகையே திக்குமுக்காட செய்தாரா இல்லையா..?

 

பல சுவாரஸ்ய தகவல்கள்

அடுத்தக் கட்டுரையில் சடோஷி நக்மோடோ குறித்து இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களைத் தமிழ் குட்ரிட்டன்ஸ் வெளியிட உள்ளது.

ஆசாமி

அமெரிக்காவில் வாழும் ஒரு ஜப்பானிய நபரின் பெயர் டோரேயன் நக்மோடோ, இவர்தான் பிட்காயின் உருவாக்கியவர் என்று சில வாரங்களுக்கு முன்பு அரசு காவலில் எடுத்து, இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது, ஆனால் பிட்காயின், கிரிப்டோகரன்சி குறித்து இவருக்கு எதுவுமே தெரியாது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இவர் விடுவிக்கப்பட்டார்.

ஆனால் இவரது போட்டோ உலகம் முழுவதும் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Satoshi Nakamoto: Biggest mind blowing person ever

Satoshi Nakamoto: Biggest mind blowing person ever
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns