என்ன நடந்தாலும் சரி.. எங்களுக்குப் பெட்டர்மாஸ் லைட்டே தான் வேண்டும்: பஞ்சாப் நேஷ்னல் வங்கி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த இரண்டு வருடங்களாகப் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நடைபெற்றுள்ள மோசடியில் பல கோடி ரூபாய் இழப்பினை சந்தித்துள்ள நிலையில் தற்போது வங்கியின் விளம்பர தூதராக உள்ள விராத் கோஹ்லியே தான் தங்களது பிராண்டு அபாசிடர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியா மட்டும் இல்லாமல் சர்வதேச அளவிலும் காஸ்ட்லியான விளம்பர தூதர் விராத் கோஹ்லி என்பதும் குறிப்பிடத்தக்கது.

விளம்பர தூதர்

விளம்பர தூதர்

பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் விளம்பர தூதர் பதவியில் இருந்து விராத் கோஹ்லி வெளியேறுவதாக வந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ்

பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ்

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நடைபெற்ற 11,400 கோடி ரூபாய் மோசடிக்கும் சத்யம் மற்றும் நோக்கியா மோசடி வழக்கில் தொடர்புடைய ஆடிட் நிறுவனமான பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனத்திற்கும் தொடர்புடையதாக வெளியான செய்திகளுக்கும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

பணம் எடுக்கக் கட்டுப்பாடு
 

பணம் எடுக்கக் கட்டுப்பாடு

வங்கி வாடிக்கையாளர்களுக்குத் தினசரி 3,000 ரூபாய் மட்டுமே வங்கி கணக்கில் இருந்து பணத்தினை எடுக்கக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகச் சமுக வலைத்தளங்களில் வரும் தகவல்களும் வதந்தி தான் என்றும் தெரிவித்துள்ளனர்.

வங்கி சேவைகள்

வங்கி சேவைகள்

வங்கி பரிவர்த்தனை வரம்பு மட்டும் இல்லாமல் பிற சேவைகளும் எப்போது போலத் தான் அளிக்கப்பட்டு வருகிறது என்றும் சமுக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆர்பிஐ

ஆர்பிஐ

இந்திய ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு அளித்த கடனை திருப்பி அளித்தற்குப் பஞ்சாப் நேஷ்னல் வங்கியே தான் பொறுப்பு என்று கூறியுள்ளது. ஆனால் வங்கி நிர்வாகம் தற்போது வெளிவந்துள்ள அறிக்கைகளில் தவறு உள்ளது. மோசடி பரிவர்த்தனைகளுக்குத் தாங்கள் பொறுப்பு இல்லை என்றும் முறையிட்டு வருகிறது.

சோதனைகள்

சோதனைகள்

மறுபக்கம் வருமான வரித் துறை, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை நடத்தி வரும் சோதனையில் 5,100 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பரிமுதல் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PNB fraud: Virat Kohli continues to be brand ambassador, says bank

PNB fraud: Virat Kohli continues to be brand ambassador, says bank
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X