2,000 கம்ப்யூட்டர்கள் ஹேக் செய்யப்பட்டது.. அதிர்ச்சியில் பிர்லா குழுமம்..!

By கிருஷ்ணமூர்த்தி
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதுவரை இந்தியாவில் நிகழ்ந்திராத வகையில் 2,000 கம்ப்யூட்டர்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

 

நாட்டின் முன்னணி வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான ஆதித்யா பிர்லா குழுமத்தின் பல்வேறு கிளை நிறுவனங்களுக்குச் சொந்தமான கம்ப்யூட்டர்களை ஹேக்கர்கள் கிரிப்டோஜாக்கிங் செய்துள்ளனர். இதனால் பிர்லா குழுமம் ஆடிப்போய் உள்ளது.

கிரிப்டோஜாக்கிங்

கிரிப்டோஜாக்கிங்

இண்டர்நெட் உலகில் தற்போது புதிதாக வந்துள்ள ஒரு ஹேக்கிங் முறை (cyber-warfare) தான் கிரிப்டோஜாக்கிங். ஹேக்கர்கள் இந்த முறையின் வாயிலாகப் பெரிய பெரிய நிறுவனங்களின் கணினிகள் மற்றும் அதன் பிராசசிங் சக்தியைப் பயன்படுத்திப் புதிய கிரிப்டோகரன்சியை உருவாக்கி வருகின்றனர்.

 ஆபத்து

ஆபத்து

இந்த முறையைப் பயன்படுத்தும் ஹேக்கர்கள் தகவல்களைத் திருடுவது, வர்த்தகத்தைச் சீர்குலைப்பது போன்ற மோசமான வேலைகளைச் செய்வதில்லை. இதற்கு மாறாக நிறுவனத்தின் மின்சாரம் மற்றும் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்திக் கிரிப்டோகரன்சியை உருவாக்கி வருகின்றனர்.

 வெளிநாட்டு அலுவலகம்
 

வெளிநாட்டு அலுவலகம்

ஆதித்யா பிர்லா இந்த இணையத் தக்குதலை ஒரு மாதத்திற்கு முன்பு தனது வெளிநாட்டு அலுவலகத்தில் நடந்ததைக் கண்டுபிடித்தது.

அதன் பின் சில நாட்களில் இந்நிறுவனத்தின் பிற உற்பத்தி நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் என இக்குழுமத்தின் கிட்டத்தட்ட 2,000 கம்ப்யூட்டர்களைப் பதம் பார்த்துள்ளனர் ஹேக்கர்கள் என்பதை ஆதித்யா பிர்லா கண்டுபிடித்துள்ளது.

 ஆதித்யா பிர்லா

ஆதித்யா பிர்லா

இந்நிலையில் இக்குழுமத்தின் சிறப்புக் குழு, வர்த்தகம் சார்ந்த அனைத்துச் செயலிகள், இன்பராஸ்டக்சர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இந்தக் கண்காணிப்பில் சில நாட்களுக்கு முன்பு இந்நிறுவனத்தின் டெஸ்க்டாப் கணினிகளிலும் இந்தக் கிரிப்டோஜாக்கிங் நடந்திருப்பதை இக்குழு கண்டுபிடித்துள்ளது.

தகவல் திருட்டு

தகவல் திருட்டு

இந்த ஹேக்கிங்கில் இதுவரை எவ்விதமான தகவல் திருட்டும் நடக்கவில்லை என இக்குழு எனக் கூறியுள்ளது.

இந்தத் தாக்குதல் மூலம் இணைய வேகம், கணினி இயக்கம் ஆகியவை அதிகளவில் குறையும். இதேபோன்ற நிகழ்வு தான் ஆதித்யா பிர்லா குழுமத்தில் நிகழ்ந்துள்ளது, இதன் அடிப்படையாகக் கொண்ட ஆய்வு செய்யப்பட்டுத் தாக்குதல்களைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மொனிரோ

மொனிரோ

தற்போது ஆதித்யா பிர்லா குழுமத்தின் செய்யப்பட்ட ஹேக்கிங் மூலம் மொனிரோ என்னும் கிரிப்டோகரன்சி உருவாக்கப்பட்டுள்ளது. பிட்காயினை விடவும் மொனிரோ virtually untraceable எனக் கூறப்படுவது மட்டும் அல்லாமல் தற்போது இவ்வகையான தாக்குதல்களில் மொனிரோ கரன்சிகள் அதிகளவில் தயாரிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Over 2,000 computers are cryptojacked at Aditya Birla Group

Over 2,000 computers are cryptojacked at Aditya Birla Group
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X