இந்தியாவின் விமானப் போக்குவரத்து சேவை மற்றும் வர்த்தகத்தைக் கட்டியமைத்த ஏர் இந்தியா தற்போது மிகப்பெரிய கடன் சுமையிலும், கடன் நெருக்கடியிலும் சிக்கித்தவித்து வருகிறது, இதுமட்டும் அல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு அதிகளவிலான நிதியுதவியுடன் ஏர் இந்தியாவை நிர்வாகம் செய்தாலும் குறைவான வர்த்தகத்தாலும், அதிகரிக்கும் செலவுகளாலும் ஏர் இந்தியா தொடர் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
இந்நிலையில் தான் மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்திற்கும் இனியும் நிதியுதவி செய்ய முடியாது என்று இந்நிறுவனத்தை விற்பனை செய்ய முடிவு செய்தது. இந்நிறுவனத்தை வாங்கப் பல விமானச் சேவை நிறுவனங்கள் ஆர்வம் காட்டிய வேகத்தில் வெளியேறிவிட்டனர்.
இதற்கு என்ன காரணம் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

காரணம்
பல தடைகளைத் தாண்டி தான் ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்யும் முடிவுக்கு மத்திய அரசு வந்தது. இந்தப் பங்கு விற்பனை செய்யும் திட்டத்தில் மத்திய அரசு ஏர் இந்தியாவின் பங்குகளை முழுமையாக விற்பனை செய்யாமல் 24 சதவீத பங்குகளை வைத்திருக்க முடிவு செய்துள்ளது.

நித்தி அயோக்
மத்திய அரசின் திங்க் டாங்க் அமைப்பா நித்தி அயோக் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்கு இருப்பை முழுமையாக விற்பனை செய்துவிட்டு நிர்வாகத்தில் இருந்து வெளியே வலியுறுத்தியது.

மாற்றம்
ஆனாலும் மத்திய அமைச்சகம் ஏர் இந்தியா பங்கு விற்பனையில் ஆதாயம் அடை வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்நிறுவனத்தின் 24 சதவீத பங்குகளை வைத்துக்கொள்ள முடிவு செய்தது.

3 வருடங்கள்
இந்த 24 சதவீத பங்குகளை ஏர் இந்தியா நிறுவனம் விற்கப்பட்ட அடுத்த 3 வருடத்தில் விற்பனை செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

விருப்பமில்லை..
இந்நிலையில் ஏர் இந்தியாவின் 76 சதவீத பங்குகளை மட்டும் வாங்க இந்தியாவில் இருக்கும் எந்தொரு விமானச் சேவை நிறுவனங்களுக்கும் விருப்பமில்லை. சொல்லப்போனால் ஏர் இந்தியாவின் 1 சதவீத பங்குகளைக் கூட அரசு வைத்திருக்க யாருக்கும் விருப்பமில்லை.

முக்கிய நிறுவனங்கள்
ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க டாடா குழுமம், இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்கள் வாங்க ஆர்வம் தெரிவித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையும் நடத்தியது. பேச்சுவார்த்தையில் மத்திய அரசின் 24 சதவீத பங்கு இருப்புக் குறித்துத் தெரிந்த உடனே அனைத்து நிறுவனங்களும் வெளியேறிவிட்டது.

மறு திட்டம்..
இந்நிலையில் ஏர் இந்தியா தனது விற்பனை திட்டத்தை மாற்றியமைக்கும் பணியில் தற்போது மூழ்கியுள்ளது, கூடிய விரைவில் அடுத்த

76 சதவீத பங்குகள்
தற்போது மத்திய அரசு விற்பனை செய்யும் 76 சதவீத பங்குகளில் ஏர் இந்தியாவின் மலிவான விமானச் சேவை பிரிவான ஏர் இந்தியா ஏக்ஸ்பிரஸ்-இல் 100 சதவீத பங்குகளும், தரை கட்டுப்பாட்டு சேவைகளை மேற்கொள்ளும் AISATS பிரிவில் 50 சதவீதத்தையும் விற்பனை செய்ய உள்ளது.

சொத்துக்கள்
இதுமட்டும் இல்லாமல் ஏர் இந்தியா நிறுவனத்தில் பல கலை பொருட்கள், சிலைகள், பெயின்டிங் ஆகியவையும் உள்ளது, இதோடு இந்நிறுவனத்திற்குச் சொந்தமாக டெல்லி, மும்பை, சென்னை, லண்டன், டோக்கியோ ஆகிய பகுதிகளில் நிலம் உள்ளது.
தற்போதைய விற்பனையில் இதுவும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானங்கள் & சேவைகள்
ஏர் இந்தியா நிறுவனத்திடம் 100 போயிங் விமானங்கள் மற்றும் ஏர்பஸ் போன்றவை உள்ளன. இவை வாரத்திற்கு 2,300 உள்ளூர் விமானச் சேவைகளை 54 விமான நிலையங்களுக்கு அளித்து வருகிறன. அதுமட்டும் இல்லாமல் சர்வதேச அளவில் 2,543 விமான நிலையங்களுக்கு விமான சேவையை வழங்க அனுமதிகளை வைத்துள்ளது.

முந்தைய தோல்வி
இந்திய அரசு இதற்கு முன்பு ஒரு முறை விற்க முயன்றும் அப்போதும் அது அரசியல் காரணங்களுக்காகத் தோல்வியில் தான் முடிந்துள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
2001-ம் ஆண்டுச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியாவில் இருந்த பங்குகளை விற்றுவிட்டு வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது.