என்னய்யா சொல்றீங்க.. விவசாயிகள் மீதே வழக்கா.. BT ரக பருத்தி நடவு செய்ததாலா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: களைக்கொல்லி தாங்கு திறனுடைய பருத்தியான (BT=Bacillus thuringiensis) BT ரக பருத்தியினை சட்டவிரோதமாக வளர்த்து வந்த 12 விவசாயிகள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.

 

அட ஆமாங்க.. மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகோலா மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. தடை செய்யப்பட்ட இந்த ரக பருத்தியினை நடவு செய்துள்ளதாக அந்த மாநில அரசு 12 விவசாயிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

 
என்னய்யா சொல்றீங்க.. விவசாயிகள் மீதே வழக்கா.. BT ரக பருத்தி நடவு செய்ததாலா?

விதைச்சட்டம், இந்திய தண்டனை சட்டம், தாவர வகைகள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம், 1962ன் தனிபயன் சட்டங்கள் மற்றும் காப்புரிமைச் சட்டம் 1970 உள்ளிட்ட பல்வேறு சட்டங்களின் அடிப்படையில், இந்த விவசாயிகளின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த BT ரக பருத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986ன் கீழ் அரசாங்கத்தால் அங்கீகரிப்படாத பயிர்களை வளர்ப்பது சட்டப்படி குற்றம் என்றும், இதற்காக ஒரு லட்சம் ரூபாய் அபாராதமும், 5 வருட சிறை தண்டனையும் விதிக்கப்படலாம் என்றும் கருதப்படுகிறது.

அதோடு முதல் இரண்டு தலைமுறையினர் பயன்படுத்திய Cry 1 Ab மற்றும் Cry 1 Ac உள்ளிட்ட விதைகளை பயன்படுத்தினர். இது பருத்தி செடிகளில் இளஞ்சிவப்பு நிற புழுத் தாக்குதலை கட்டுப்படுத்துவதில் கருவியாக இருந்தது என்றும் கூறப்படுகிறது.

ஆந்திரபிரதேசம், தெலுங்கானா, குஜராத், மற்றும் மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே இந்த ரக பருத்திகள் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. களைக் கொல்லி தாங்குதிறனுடைய பருத்தியான (Herbicide tolerant) அங்கீகரிக்கப்படாத சாகுபடியை விசாரிப்பதற்காக மத்திய அரசு ஏற்கனவே ஒரு குழுவை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அகோலா மாவட்ட காவல் துறை அதிகாரியான ராகேஷ் கலசாகர் கூறியுள்ளதாவது, இந்த மாவட்ட விவசாயிகளை தவறாக வழி நடத்தும் நபர்களுக்கு எதிராக நாங்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். அதுவும் எங்கள் வேளான் மேம்பாட்டு துறை அதிகாரி வந்து இந்த விதைகளை பறிமுதல் செய்து சோதித்த பின்னரே நாங்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

இந்த ரக விதைகள் மரபணு மாற்றப்பட்டுள்ளன.. இது களைக் கொள்ளிகளை சுற்றியுள்ள களைகளை கொன்றாலும், பயிர்களை அப்படியே விட்டுவிடுகின்றன. எனினும் இந்த ரக பருத்தி விதைகள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை. இதனாலேயே இந்த பருத்தியை விளைவிக்க விவசாயிகள் விரும்புகின்றனராம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FIRs against 12 Maharashtra farmers illegally sowing banned cotton

FIRs against 12 Maharashtra farmers illegally sowing banned cotton
Story first published: Wednesday, June 26, 2019, 14:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X