வைகோ கேட்ட அந்த 4 கேள்வி.. ஒன்றிய அரசு கொடுத்த பதில் இதுதான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய மறைமுக வரி அமைப்பை முற்றிலுமாக மாற்றிய சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட நாளில் இருந்து மக்களும், நிறுவனங்களும் அதிகளவிலான பிரச்சனைகளைத் தொடர்ந்து சந்தித்து வருகின்றன.

ஒவ்வொரு ஜிஎஸ்டி வரி கூட்டத்திலும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை மேம்படுத்த புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டாலும் தொடர்ந்து விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது ஒன்றிய அரசு.

வைகோ கேட்ட அந்த 4 கேள்வி.. ஒன்றிய அரசு கொடுத்த பதில் இதுதான்..!

சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் ஜிஎஸ்டி வரி எய்ப்பு குறித்தும், ஜிஎஸ்டி கட்டமைப்பு குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ முக்கியமான கேள்விகளை முன்வைத்தார்.

இதற்கு ஒன்றிய அரசின் நிதியமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி பதிலை நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகக் கொடுத்துள்ளது.

வைகோ கேட்ட கேள்வி

நாடாளுமன்ற உறுப்பினர் 4 முக்கியமான கேள்விகளை முன்வைத்து இதற்கு நிதியமைச்சர் விளக்கம் தருவாரா என 03.08.2021ஆம் தேதி 1673வது கேள்வியாகத் தனது கேள்விகளை வைகோ பதிவு செய்தார்.

கேள்வி 1. கடந்த மூன்று ஆண்டுகளில், ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு எவ்வளவு? ஆண்டுவாரியாகக் கணக்கு தருக.

கேள்வி 2. முற்றிலும் கணினிமயம் ஆக்கப்பட்ட பின்னரும், இத்தகைய வரி ஏய்ப்பிற்கான காரணங்கள் என்ன?

கேள்வி 3. மனிதர்களின் தவறா? அல்லது கணினிகளின் கோளாறா?

கேள்வி 4. இத்தகைய பிரச்சினைகளைத் தவிர்க்க, மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?

ஒன்றிய அரசின் விளக்கம்

வைகோ கேட்டது போலவே நான்கு கேள்விகளுக்கும் புள்ளிவிவரத்துடன் ஒன்றிய அரசின் நிதியமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி கேள்வி வாரியாகப் விளக்கமான பதிலை அளித்துள்ளார்.

கேள்வி 1-க்கு விளக்கம்

கேள்வி: கடந்த மூன்று ஆண்டுகளில், ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு எவ்வளவு? ஆண்டுவாரியாகக் கணக்கு தருக.

கடந்த மூன்று ஆண்டுகளாக, ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு கணக்கு விவரங்கள்.

1. 2019-20 நிதியாண்டில்: 10657 முறைகேடுகள். முறைகேடு செய்யப்பட்ட மொத்தத் தொகை 40,853.27 கோடி. அதில், 18,464.07 கோடி ரூபாய் திரும்பக் கிடைத்துள்ளது.

2. 2020-21நிதியாண்டில்: 12,596 முறைகேடுகள். முறைகேடு செய்யப்பட்ட மொத்தத் தொகை ரூ 49,383.96 கோடி. அதில், 12,235 கோடி ரூபாய் திரும்பக் கிடைத்துள்ளது.

3. 2021-22 நிதி ஆண்டில், ஜூன் 21 ஆம் நாள் முடிய, கண்டுபிடிக்கப்பட்ட முறைகேடுகள் எண்ணிக்கை 1580. இந்த முறைகேடுகளில் செய்யப்பட்ட மொத்தத் தொகை ரூ 7421.27 கோடி. அதில், 1920 கோடி ரூபாய் திரும்பக் கிடைத்து உள்ளது எனப் பங்கஜ் சௌத்ரி விளக்கம் கொடுத்து இருந்தார்.

கேள்வி 2-க்கு விளக்கம்

கேள்வி : முற்றிலும் கணினிமயம் ஆக்கப்பட்ட பின்னரும், இத்தகைய வரி ஏய்ப்பிற்கான காரணங்கள் என்ன?

ஜிஎஸ்டி வரிக் கணக்குகள் முழுமையும் கணினிமயம் ஆக்கப்பட்டுள்ளது உண்மைதான். வரி செலுத்துவோர், சட்டம் மற்றும் நடைமுறை தேவைகளுக்கு இணங்கி நடக்க வேண்டும். ஆயினும் கூட, வரி செலுத்துவோர், மின்னணுத் தளங்களில் கூட முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.

பதிவு செய்யும்போது, பொய்ச் சான்று ஆவணங்களைத் தருகின்றனர்; உண்மைத் தகவல்களை மறைத்து விடுகின்றனர்; வரிச்சலுகை பெற, விலைப்பட்டியலை உயர்த்தி விடுகின்றனர்; பொருட்களின் தர வகைப்பாடுகளைத் தவறாகத் தருகின்றனர் என்று 2வது கேள்விக்குப் பங்கஜ் சௌத்ரி விளக்கம் கொடுத்து இருந்தார்.

கேள்வி 3-க்கு விளக்கம்

கேள்வி: மனிதர்களின் தவறா? அல்லது கணினிகளின் கோளாறா?

தெரிந்தே வரி ஏய்ப்புச் செய்யலாம்; சில வேளைகளில் பிழைகள் நேர்வதும் உண்டு.

ஆனால், ஒன்றிய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (Central Board of Indirect Taxes & Customs-CBIC) கணினிகளில் கோளாறு எதுவும் இல்லை என்று 3வது கேள்விக்குப் பங்கஜ் சௌத்ரி விளக்கம் கொடுத்து இருந்தார்.

கேள்வி 4-க்கு விளக்கம்

கேள்வி 4: இத்தகைய பிரச்சினைகளைத் தவிர்க்க, மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?

வரி ஏய்ப்பைத் தடுக்க, சரக்கு மற்றும் சேவை வரிகள் வலைப்பின்னல் மற்றும் ஒன்றிய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் இணைந்து (GSTN-CBIC) கீழ்க்காணும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

1. புதிய விண்ணப்பங்களுடன் ஆதார் எண் இணைக்கின்றோம். அவ்வாறு ஆதார் எண் தராதவர்கள் அல்லது வேறு ஏதேனும் அடையாள ஆவணங்களை இணைக்காதவர்களின் வணிக மையங்களுக்கு நேரடியாகச் சென்று, அவர்களுடைய அடையாளங்களைச் சரிபார்க்கின்றோம்.

2. புதிய பதிவு எண் கோருவோரது, முந்தைய பதிவுகளைச் சரிபார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

3. வரித்துறையின் நம்பிக்கையைப் பெறாத வரி செலுத்துவோரின் பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதற்கும், பதிவை நீக்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

4. உளவுத் தகவல்களின் அடிப்படையில், சரக்கு மற்றும் சேவை வரிப் பதிவுகளை, பெரும் அளவில் இடைநிறுத்தம் செய்து இருக்கின்றோம்; அது தொடர்பான மேல் நடவடிக்கைகளை, மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் தொடர்கின்றது.

5. ஆறு அல்லது அதற்கும் மேற்பட்ட மாதங்களாக, ஜிஎஸ்டிஆர் 3 பி கணக்குப் பதிவு செய்யாத, எண்ணற்றவர்களின் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

6. உள் வரி வரவுக் கடன் (Internal Tax Credit) வழங்குவது தடை செய்யப்படுகின்றது.

7. ஜிஎஸ்டிஆர் 2 ஏ மூலம், உள் வரி வரவுக் கடன் கணக்குகள் சோதிக்கப்படுகின்றன என 4வது கேள்விக்குப் பங்கஜ் சௌத்ரி விளக்கம் கொடு

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How much govt lost through GST tax evasion?: Finance Ministry explains for MP Vaiko question

How much govt lost through GST tax evasion?: Finance Ministry explains for MP Vaiko question
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X