ஹெச்டிஎப்சி வங்கி பெயரில் SMS மூலம் மோசடி.. மக்களே உஷார்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆன்லைன் வங்கி சேவை, டிஜிட்டல் வங்கி சேவைகள் வந்த பின்பு எந்த அளவிற்கு வங்கி சேவைகள் எளிதாகியுள்ளதோ, அதே அளவிற்கு ஆபத்துக்களும் அதிகமாகியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் நாட்டின் முன்னணி வங்கியான ஹெச்டிஎப்சி வங்கி பெயரில் மோசடி நடந்து வருகிறது.

 

இலங்கை பேஷன் நிறுவனத்தை வாங்கிய முகேஷ் அம்பானி.. தொடர் கையகப்படுத்தலில் ரிலையன்ஸ்..!

கார்டு மேலே 16 நம்பர் எனப் போன் கால் செய்து ஏமாற்றுவதைத் தாண்டி தற்போது எஸ்எம்எஸ் வாயிலாக இணையதள இணைப்பு மூலம் நூதன முறையில் மோசடி செய்யப்பட்டு வருகிறது.

எஸ்எம்எஸ் மோசடி

எஸ்எம்எஸ் மோசடி

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் அனைவருக்கும் தெரியும் ஒரு நாளுக்கு எத்தனை எஸ்எம்எஸ் வருகிறது என்று, அப்படி ஒரு எஸ்எம்எஸ்-ஐ வங்கி அனுப்பியதை போலவே அனுப்பி ஏமாற்று வேலையில் இறங்கியுள்ளது ஒரு மோசடி கூட்டம்.

ஹெச்சிஎப்சி வங்கி

ஹெச்சிஎப்சி வங்கி

அன்பார்ந்த ஹெச்சிஎப்சி வாடிக்கையாளரே, உங்கள் ஹெச்டிஎப்சி வங்கி கணக்கின் நெட்பேங்கிங் சேவை இன்று முடக்கப்பட்டு உள்ளது. கீழே கொடுக்கப்பட்டு உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்து பான் கார்டு-ஐ உடனடியாக அப்டேட் செய்யச் செய்யுங்கள் என ஒரு இணைப்பையும் அனுப்பியுள்ளது இந்த மோசடி கும்பல்.

 

டிவிட்டர்

மேலும் இந்த எஸ்எம்எஸ் 76058-35257 என்ற எண்ணில் இருந்து வந்துள்ளது என எஸ்எம்எஸ் மெசேஜ்-ன் ஸ்கிரீன்ஷாட் உடன் ஹெச்டிஎப்சி வங்கியை டேக் செய்து டிவிட்டரில் பதிவு செய்துள்ளார் வீர் சங்கவி. இதுபோன்ற மோசடி தொடர்பான எஸ்எம்எஸ்-ஐ நாமும் பெற்று இருப்போம், ஆனால் அதைப் பொது வெளியில் கொண்டு வரும்போது தான் மக்கள் விழிப்புணர்வு அடைவார்கள்.

இணைப்பை கிளிக் செய்யக் கூடாது

இணைப்பை கிளிக் செய்யக் கூடாது

பொதுவாக எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப்-ல் வரும் எந்த ஒரு வெப்சைட் லிங்க்-ஐயும் கிளிக் செய்யக் கூடாது என்ற பழக்கத்தைக் கற்க வேண்டும், அப்படிக் கிளிக் செய்ய வேண்டும் என்றால் அனுப்பியது யார்..? இணைய முகவரி சரியாகப் பெயருடன் உள்ளதா..? HTTPS உள்ளதா..? என்பதைக் கட்டாயம் கவனிக்க வேண்டும்.

வார்த்தைகளைக் கவனிக்கவும்

வார்த்தைகளைக் கவனிக்கவும்

இதுபோன்ற எஸ்எம்எஸ், ஈமெயில் மோசடியில் தகவல்களில் அதில் இருக்கும் வார்த்தைகளைக் கவனித்தாலே மோசடியாளர்களைக் கண்டுபிடித்து விட முடியும். உதாரணமாக இந்த டிவீட்டில் இருக்கும் குறுஞ்செய்தியைப் பாருங்கள்.

1. பொதுவாகக் குறிப்பிடுதல் (Dear User - உங்கள் வங்கி கணக்கு முடங்கியிருந்தால் கட்டாயம் உங்கள் பெயர் இருக்கும்.)

2. மோசமான ஆங்கில இலக்கணம் (will be block today)

3. அவசர உணர்வு ( need to do it today - பொதுவாக வங்கி இத்தகைய மெசேஜ் அனுப்பினால் வங்கி கிளையை அணுகுங்கள் எனத் தெரிவாகக் குறிப்பிட்டு இருக்கும்).

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

New SMS scam in name of HDFC bank; People must be aware of this phishing

New SMS scam in name of HDFC bank; People must be aware of this phishing
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X