ரிலையன்ஸ் 45வது வருடாந்திர கூட்டம்.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது என்ன..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பெரும் எதிர்பார்ப்புகள் மத்தியில் தனது 45வது வருடாந்திர பொதுக் கூட்டத்தை நடத்துகிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸை காட்டிலும் அதானி குழுமம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் முகேஷ் அம்பானியின் எதிர்காலத் திட்டம் என்ன..? நிறுவனத்தின் வர்த்தகப் பாதை என்ன..? ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் அடுத்த முக்கிய வர்த்தகம் என்ன..? எனப் பங்கு முதலீட்டாளர்கள் அனைவருக்கும் தேவையான முக்கியமான கேள்விக்கு இன்று பதில் கிடைக்க உள்ளது.

அமெரிக்க மில்லியனர்களை புரட்டி போட்ட 8 நிமிட பேச்சு..  பில்லியன் நஷ்டம்!அமெரிக்க மில்லியனர்களை புரட்டி போட்ட 8 நிமிட பேச்சு.. பில்லியன் நஷ்டம்!

2 மணிக்கு லைவ்

2 மணிக்கு லைவ்

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தனது 45வது வருடாந்திர பொதுக்கூட்டத்தை இன்று ஆகஸ்ட் 29ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடத்துகிறது. பொதுவாக நிறுவனத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் தற்போதைய மற்றும் எதிர்கால முதலீட்டாளர்களுக்காக நிறுவனத்தின் திட்டங்கள், வருமான இலக்குகள், வர்த்தகப் பாதை ஆகியவற்றை விளக்கும் கூட்டம்.

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருடாந்திர பொதுக்கூட்டங்கள் முதலீட்டுச் சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் முதலீட்டாளர்கள் அதிகளவிலான கவனம் செலுத்துவார்கள். 2021 இல் நடந்த அதன் கடைசி ஏஜிஎம்மில், நிறுவனம் இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் மற்றும் மலிவு விலையில் 5ஜி போனுக்கான திட்டங்களை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஈஷா அம்பானி

ஈஷா அம்பானி

இன்று நடக்க உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தனது 45வது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் ஆகாஷ் அம்பானிக்கு ரிலையன்ஸ் ஜியோ சேர்மன் பதவி கொடுக்கப்பட்டது போல் ஈஷா அம்பானிக்கு ரிலையன்ஸ் ரீடைல் சேர்மன் பதவி கொடுப்பது குறித்து அறிவிப்பு வெளியாகலாம்.

5ஜி சேவை

5ஜி சேவை

இக்கூட்டத்தில் 5ஜி சேவை திட்டங்களின் விபரங்கள் குறித்தும், அதன் வெளியீடு மற்றும் அறிமுகம் நாள் அல்லது கால அளவீட்டை வெளியிட வாய்ப்புகள் உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மலிவான 5ஜி சேவை அறிமுகம் செய்வதாக ஏற்கனவே அறிவித்துள்ளது கவனிக்க வேண்டியது.

இலவச 2ஜி சேவை

இலவச 2ஜி சேவை

இதே கூட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ தனது வர்த்தகத்தை மொத்தமாக 4ஜி மற்றும் 5ஜி சேவை பிரிவில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்த திட்டமிட்டு இருக்கும் நிலையில், 2ஜி சேவையை இலவசமாக அளிக்கும் அறிவிப்பு வெளியாகும் எனச் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

ஜியோ போன்

ஜியோ போன்

ஜியோ கடந்த ஆண்டுக் கூகுள் உடன் இணைந்து 10000 ரூபாய்க்குக் கீழ் 4ஜி போன் அறிமுகம் செய்து ஸ்மார்ட்போன் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது 12000 ரூபாய் அல்லது 15000 ரூபாய் கீழ் விலை அளவீட்டில் 5ஜி போன் அறிமுகம் செய்யும் திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லேப்டாப்

லேப்டாப்

இந்தியாவில் மலிவான லேப்டாப் அறிமுகம் செய்வதாக நீண்ட காலமாகக் கூறி வரும் ரிலையன்ஸ் ஜியோ இன்றைய கூட்டத்தில் தனது ஜியோ புக் லேப்டாப் குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.

ரிலையன்ஸ் ரீடைல்

ரிலையன்ஸ் ரீடைல்

இன்றைய கூட்டத்தில் ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் ஆடம்பர வர்த்தகச் சந்தைக்குள் நுழைவு, ஆன்லைன் வர்த்தக விரிவாக்கம் ஆகியவை குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம்.

நியூ எனர்ஜி

நியூ எனர்ஜி

மேலும் நியூ எனர்ஜி பிரிவில் பல மாதங்களாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இயங்கி வரும் நிலையில் இப்பிரிவு தொடர்பாக முக்கிய அறிவிப்புக் கட்டாயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Industries 45th Annual General Meeting time and date: Things investors need to look

Reliance Industries 45th Annual General Meeting time and date: Things investors need to look ரிலையன்ஸ் 45வது வருடாந்திர கூட்டம்.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது என்ன..?!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X