அரசு வயிற்றில் பால் வார்த்த எஸ்பிஐ..! 2020-ல் அது அதிகரிக்குமாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: நாட்டில் நிலவி வரும் மந்த நிலையால் வாங்கிய கடனை கட்ட முடியாமல் மக்கள் தவித்து வருவது ஒருபுறம். இதே எப்படியேனும் கொடுத்த கடனை வசூலிக்க வேண்டுமே என முயற்சித்து வங்கிகள் மறுபுறம்.

இப்படி இரண்டுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு விழிபிதுங்க நிற்பது மக்கள். இப்படியாக 2019ம் ஆண்டு முடிந்து விட, 2020 தொடங்கியுள்ள நிலையில் தற்போது தான் சின்ன சின்ன நல்ல செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.

இதுவரை எந்தவொரு பொருளாதார நிபுணரும் இந்தியா இன்னும் வீழ்ச்சி காணும், ஜிடிபி குறையும் என பயமுறுத்தி வந்தன. இதனால் பணப்புழக்கம் குறையும், மக்கள் முதலீடுகளை தவிர்ப்பர், அன்னிய முதலீடுகளும் குறையும் என பலவாறு சிந்தனையில் இருந்த நிலையில், இவற்றிற்கெல்லாம் முடிவு வரப்போகிறது என்பது போல அனைத்து செய்திகளும் தற்போது தான் வரத் தொடங்கியுள்ளன.

வாராக்கடன் வசூல் அதிகரிக்கும்

வாராக்கடன் வசூல் அதிகரிக்கும்

சரி அப்படி என்ன நல்ல செய்தி. எஸ்பிஐ என்ன சொல்லி இருக்கிறது என்றும் கேட்பது புரிகிறது. அந்த நல்ல செய்தி நடப்பு 2020ம் ஆண்டில் வாரக்கடன் வசூல் அதிகரிக்கும் என்பது தான். மேலும் மற்ற நிதி நடவடிக்கைகளை அறிவிப்பதை தவிர துறை சார்ந்த பிரச்சனைகளை களைய அரசாங்கம் பட்ஜெட்டில் தீர்க்க முற்படலாம் என்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவர் ரஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும்

பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும்

குறிப்பாக ரியல் எஸ்டேட், தொலைத் தொடர்பு மற்றும் மின் விநியோக நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு உதவ அரசாங்கம் குறிப்பிட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பிரச்சனையில் உள்ள சில துறைகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக மின்சார துறையில் சில பிரச்சனைகள் உள்ளன. ரியல் எஸ்டேட் துறையை மேம்படுத்த வேண்டும். மேலும் தொலைத் தொடர்பு துறையில் நிலவி வரும் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும்.

துறை சார்ந்த நடவடிக்கை கைகொடுக்கும்

துறை சார்ந்த நடவடிக்கை கைகொடுக்கும்

மேலும் தேவையை அதிகரிக்க வேண்டும். அரசு வரவு செலவு திட்டங்களில் எடுக்கக்கூடிய நாணய மற்றும் நிதி நடவடிக்கைகளைத் தவிர, துறை சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது முக்கியமானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்றும் ரஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார். ஏனெனில் அப்போது தான் பிரச்சனைகள் களையப்பட்டு வளர்ச்சிக்கு இது துணை புரியும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் பிரச்சனைகள்

அதிகரிக்கும் பிரச்சனைகள்

சில மதிப்பீடுகளின் படி, உற்பத்தி நிறுவனங்களிலிருந்து வாங்கிய மின்சக்திக்கு ஆகஸ்ட் மாத இறுதியில் டிஸ்கோம்கள் 67,237 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. டிஸ்கோம்களின் இந்த இயலாமை வங்கித் துறையின் வேதனைகளை அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளார். இதே போல தொலைத் தொடர்பு துறையில் பெரிய கடனுடன் போராடி வருகின்றன. இந்த நிலையில் அரசின் கோரிக்கை இன்னும் அதன் துயரத்தை அதிகப்படுத்தியுள்ளன.

2020ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்

2020ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்

இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குனரான எஸ்பிஐயின் தலைவர் பதவியின் கடைசி கட்டத்தில் இருக்கும் ரஜ்னிஷ் குமார், மோசமான கடன் வசூலை பொறுத்த வரை 2020ம் ஆண்டு, சிறந்த ஆண்டாகவே இருக்கும் என்றும் என நம்புவதாக குமார் தெரிவித்துள்ளார். மேலும் திவால் நடைமுறை சட்டமானது தற்போது வங்கிகளுக்கு ஊக்கமளித்துள்ளது. ஏனெனில் வாராக்கடனாக இருக்கும் பெரிய கணக்குகளை இதை மீட்டெடுக்க இது உதவும் என்றும் நம்புவதாக குமார் தெரிவித்துள்ளார்.

2020ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்

2020ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்

இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குனரான எஸ்பிஐயின் தலைவர் பதவியின் கடைசி கட்டத்தில் இருக்கும் ரஜ்னிஷ் குமார், மோசமான கடன் வசூலை பொறுத்த வரை 2020ம் ஆண்டு, சிறந்த ஆண்டாகவே இருக்கும் என்றும் என நம்புவதாக குமார் தெரிவித்துள்ளார். மேலும் திவால் நடைமுறை சட்டமானது தற்போது வங்கிகளுக்கு ஊக்கமளித்துள்ளது. ஏனெனில் வாராக்கடனாக இருக்கும் பெரிய கணக்குகளை இதை மீட்டெடுக்க இது உதவும் என்றும் நம்புவதாக குமார் தெரிவித்துள்ளார்.

வளர்ச்சி பிரச்சனையாகவே இருக்கும்

வளர்ச்சி பிரச்சனையாகவே இருக்கும்

எப்படி இருப்பினும் 2020ம் ஆண்டில் வளர்ச்சி என்பது ஒரு பெரிய பிரச்சனையாகவே இருக்கும். ஏனெனில் தொழில் வளர்ச்சி 7 - 8 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி காணும் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் நிதியாண்டு நல்ல கடன் வளர்ச்சியை கண்டது. இது எங்களுக்கு நல்ல வளர்ச்சியை அடைய உதவியது. மேலும் கடந்த ஆண்டு என்.ஹெச்.ஏ.ஐ (NHAI) 25,000 கோடியை திரட்ட உதவியது. இதனால் தான் நாங்கள் நேர்மறையாக பகுதிக்கே வந்தோம்.

சரியான பாதையில் சென்று கொண்டுள்ளோம்

சரியான பாதையில் சென்று கொண்டுள்ளோம்

2020ம் நிதியாண்டு குறுகியதாக இருக்கிறது. ஏப்ரல் 1 முதல் கொண்டு நாங்கள் எதிர்மறையான வளர்ச்சியைக் கண்டு கொண்டிருக்கிறோம். எனினும் கடந்த மூன்று மாத வளர்ச்சி சற்று சாதகமாக உள்ளது. இந்த நிலையில் மாத வளர்ச்சியானது சாதகமாக உள்ளது. ஏனெனில் கார்ப்பரேட்டுகள் தங்கள் மூலதனத்திற்காக பணம் எடுக்க விரும்புகின்றன. இதனால் நாங்கள் சரியான பாதையில் தான் போய்க் கொண்டிருக்கிறோம் என்றும் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI chairman said 2020 will be best year for NPA recovery

SBI chairman said 2020 will be best year for NPA recovery. And he said government will have to take action sector – specific issues in the budget.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X