தங்கத்தை தூக்கி சாப்பிட்ட வெள்ளி..!! அட்சய திருதியை எனும் அமோக வாய்ப்பு!! மக்களே மிஸ் பண்ணிடாதீங்க!!

இந்தியாவில் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. தங்களால் முடிந்த அளவிற்கு அந்த தினத்தில் தங்க நகையோ அல்லது நாணயமோ வாங்கினால் வாழ்க்கையில் செல்வ வளம் பெருகும் என்பது ஏராளமான மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவில் அட்சய திருதியை என்றாலே நகைக்கடைகளில் விற்பனை களைகட்ட தொடங்கி இருக்கிறது.

Also Read

இந்தியாவில் அதிக அளவு தங்கத்திற்கான டிமாண்ட் இருக்கக்கூடிய ஒரு காலமாக அட்சய திருதியை பண்டிகை காலம் பார்க்கப்படுகிறது. அட்சய திருதியை என மட்டும் இல்ல எப்போதுமே தங்கம், வெள்ளி ஆகிய இரண்டிலும் செய்யக்கூடிய முதலீடுகள் நமக்கு லாபமாக தான் இருக்கின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு அட்சய திருதியை பண்டிகைக்கு தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்தவர்கள் எல்லாம் இந்த ஆண்டு ராஜாவாக மாறி இருக்கிறார்கள்.

தங்கத்தை தூக்கி சாப்பிட்ட வெள்ளி..!! அட்சய திருதியை எனும் அமோக வாய்ப்பு!! மக்களே மிஸ் பண்ணிடாதீங்க!!

இந்த ஓராண்டு காலத்தில் தங்கம் மற்றும் வெள்ளி ஆகி இரண்டுமே முதலீட்டாளர்களுக்கு பெரிய அளவில் லாபம் தந்திருக்கிறது. கடந்த ஆண்டு அட்சய திருதியை பண்டிகை ஏப்ரல் 30ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அப்போது இந்தியாவில் 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 97,910 ரூபாய் அதுவே இன்று 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 1,55,000 ரூபாய். அதாவது கடந்த ஆண்டு 24 கேரட் தங்கம் 10 கிராம் வாங்கியவர்களுக்கு இந்த ஆண்டு அதன் மதிப்பில் 58.7 சதவீத லாபம் கிடைத்திருக்கிறது.

Recommended For You

தங்கம் விலை தன்னுடைய வரலாற்று உச்சபட்ச விலையில் இருந்து தற்போது சரிவடைந்திருக்கும் போதிலும் இந்த ஓராண்டு கால வித்தியாசத்தை பார்க்கும் போது பார்க்கும் போதே 59 சதவீத லாபம் தந்திருக்கிறது. அது மட்டுமல்ல வெள்ளியின் விலை இன்னும் தாறுமாறாக உயர்ந்து முதலீட்டாளர்களை உச்சானி கொம்பில் அமர வைத்திருக்கிறது. கடந்த ஆண்டு அட்சய திருதியைக்கு ஒரு கிலோ வெள்ளியின் விலை 1 லட்சம் ரூபாய் அதுவே இந்த ஆண்டு 2.7 லட்சம் ரூபாய் அதாவது 170 சதவீதம் வெள்ளியின் விலை உயர்ந்திருக்கிறது. கிட்டதட்ட இந்த ஓராண்டு காலத்தில் தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டுமே பெருமளவு மாற்றம் கண்டுவிட்டன.

தங்கத்தை தூக்கி சாப்பிட்ட வெள்ளி..!! அட்சய திருதியை எனும் அமோக வாய்ப்பு!! மக்களே மிஸ் பண்ணிடாதீங்க!!

குறிப்பாக கடந்தாண்டு இறுதியிலிருந்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை தங்கம், வெள்ளி ஆகிய இரண்டுமே போட்டி போட்டுக் கொண்டு விலை உயர்ந்தன. தற்போது ஈரான் போர் காரணமாக தான் கடந்த இரண்டு மாதங்களாக இந்த இரண்டு பொருட்களின் விலையுமே சரிந்திருக்கின்றன. இல்லை என்றால் இன்னும் கூட விலை உயர்ந்திருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

You May Also Like

தற்போது வரலாற்று உச்சபட்சத்தில் இருந்து தங்கம் வெள்ளி ஆகிய இரண்டுமே விலை குறைந்து தான் இருக்கின்றன. தங்கம் விலை ஒரு சவரன் இனி ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் செல்வதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு . அது மட்டும் இல்லாமல் மே ஒன்றாம் தேதியிலிருந்து ரஷ்யாவின் தங்கை ஏற்றுமதி தடையும் நடைமுறைக்கு வருகிறது என்பதால் தங்கம் வாங்க வேண்டுமென என்பவர்கள் இந்த அட்சய திருதியை பண்டிகையில் தங்கத்தை வாங்கினால் அடுத்த ஆண்டுக்குள் ஒரு கணிசமான லாபத்தை பார்க்க முடியும் என்பதே நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

தங்கத்தின் விலை அடுத்த சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் உயரத் தொடங்கும் என கணிக்கும் நிபுணர்கள் வெள்ளியின் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கும் என கூறுகின்றனர். தங்கம், வெள்ளி வாங்குவதற்கான வாய்ப்பு எப்போது கிடைத்தாலும் அதனை பயன்படுத்து கொள்ள வேண்டும் ஏனெனில் நீண்ட கால போக்கில் அது பெரிய லாபமாகவும் சொத்தாகவும் மாறி நிற்கும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+