நீங்க ஸ்விக்கி, ஜோமோட்டோ வாடிக்கையாளரா.. அப்போ ஒரு குட் நியூஸ்.. இனிதான் அதிரடி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஸ்விக்கி மற்றும் ஜோமாட்டோ நிறுவனங்கள், உணவு வினியோக நெட்வொர்க், போட்டியை சமாளிக்க இணைய திட்டமிட்டுள்ளன. இதுதொடர்பான, பேச்சுவார்த்தைகளுக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதனால் வாடிக்கையாளர்களுக்கு, டிஸ்கவுண்ட்டுகள் அதிகம் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்.

நாட்டின் மிகப் பெரிய இரு பெரிய உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கியும், ஜோமோட்டோவும் இப்போது பல போட்டிகளை சந்திக்க தொடங்கியுள்ளன. எனவேதான், இரு தரப்பும், தங்களுக்குள் இணைவது பற்றி சிந்திக்கின்றன.

இரு நிறுவனங்களின் முக்கிய முதலீட்டாளர்கள் சமீபத்திய தினங்களில் ஒன்றிணைப்பு குறித்து ஆலோசனைகளை நடத்தியுள்ளனர், இந்த பேச்சுவார்த்தைகள் இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளன.

அதிக செலவு

அதிக செலவு

உணவு விநியோக வணிகம் அதிக பண முதலீடு தேவைப்படும் துறை. வாடிக்கையாளர்களைப் பெறுவதற்கும், தங்கள் சேவையில், உணவகங்களைச் சேர்ப்பதற்கும், விநியோக உள்கட்டமைப்பைப் பராமரிப்பதற்கும் நிறுவனங்கள் அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது. ஜோமாட்டோ மற்றும் ஸ்விக்கி நிறுவனங்கள், 6 மாதங்களுக்கு முன்பு வரை ஒவ்வொரு மாதமும் சுமார் 30 மில்லியன் டாலரை செலவிட்டு வந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அமேசான், ஊபர்

அமேசான், ஊபர்

அதிக தள்ளுபடிகள், டெலிவரி ஊழியர்களுக்கு சிறந்த ஊதியங்கள் மற்றும் உணவகங்களுக்கு அதிக கமிஷன்கள் வழங்குவது, என, உணவு விநியோக வணிகத்தில் அமேசான் மற்றும் ஊபர் ஆகியவை இரட்டிப்பாக அதிரடி காட்ட தொடங்கியுள்ளன. இவற்றை, ஜோமாட்டோ மற்றும் ஸ்விக்கியால் எதிர்கொள்ள முடியவில்லை.

செலவு குறைப்பு செய்த ஜோமாட்டோ
 

செலவு குறைப்பு செய்த ஜோமாட்டோ

ஜோமாட்டோ தனது, செலவுகளைக் குறைத்து வருகிறது. கடந்த சில மாதங்களில், இது சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. ஒவ்வொரு மாதமும் செலவழிக்கும் பணத்தை 19 மில்லியன் டாலர்களாக குறைத்துள்ளது. அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்களில் நிறுவனம் லாப பாதையில் திரும்ப வேண்டும் என்பது இதன் நோக்கமாக உள்ளது.

அனுமதி கிடைக்க வேண்டும்

அனுமதி கிடைக்க வேண்டும்

நிறுவனங்களே ஒருவேளை, ஒன்றிணைக்க ஒப்புக் கொண்டாலும், பெங்களூருவைச் சேர்ந்த ஸ்விக்கி மற்றும் குருக்ராமை சேர்ந்த ஜோமாட்டோ ஆகியவை இந்தியாவில் ஆன்லைன் உணவு விநியோகத்திற்கான சந்தையின் பெரும்பகுதியை தங்கள் வசம் வைத்துள்ளதால், அவர்கள் இந்தியப் போட்டி ஆணையத்தின் (Competition Commission of India) அனுமதியை பெற பெரும் முயற்சிகளை எடுக்க வேண்டிவரும்.

இழப்பில் ஜோமாட்டோ

இழப்பில் ஜோமாட்டோ

2019 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், ரூ. 1,397 கோடி வருவாய் பெற்ற ஜோமாட்டோ ரூ .1,001.1 கோடி இழப்பை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளது. ஸ்விக்கி 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில் 468 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், அதில் 397.3 கோடி ரூபாய் இழப்பு என்றும் தெரிவித்துள்ளது. ஸ்விக்கி தனது சமீபத்திய வருடாந்திர வருவாய் மதிப்பை நிறுவன விவகார அமைச்சகத்திடம் தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Swiggy, Zomato revive merger talks

Swiggy, Zomato revive merger resumes talks as competition is on the rise.
Story first published: Tuesday, November 19, 2019, 13:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X