5% வரிக்கு 18% வரி வசூலிக்க தயாராகும் சோமேட்டோ, ஸ்விக்கி.. ஜிஎஸ்டி மூலம் புதிய பிரச்சனை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் வேகமாக வளரும் உணவு டெலிவரி சேவை நிறுவனங்களான சோமேட்டோ, ஸ்விக்கி இனி, டெலிவரி பாய்ஸ்க்கு அளிக்கப்படும் டிப்ஸ், சர்ஜ் கட்டணம், டெலிவரி கட்டணம், பேகேஜ் கட்டணம் ஆகிய அனைத்திற்கும் ஜிஎஸ்டி வரியை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

ஜிஎஸ்டி கூட்டம்

ஜிஎஸ்டி கூட்டம்

கடந்த மாதம் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் சோமேட்டோ, ஸ்விக்கி ஆகிய நிறுவனங்கள் செய்யும் உணவு டெலிவரிக்கு 5 சதவீத வரியை உணவகங்களில் இருந்து வசூலிக்காமல், டெலிவரி செய்யப்படும் இடத்தில் அதாவது மக்களிடம் இருந்து வசூல் செய்ய உத்தரவிட்டது.

ஜனவரி 1, 2022

ஜனவரி 1, 2022

இப்புதிய உத்தரவு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கான பணிகளைச் செய்யும் போது சோமேட்டோ, ஸ்விக்கி ஆகிய நிறுவனங்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தி கிடைத்துள்ளது.

சோமேட்டோ, ஸ்விக்கி

சோமேட்டோ, ஸ்விக்கி

சோமேட்டோ, ஸ்விக்கி நிறுவன சேவையில் அறிவித்துள்ள புதிய ஜிஎஸ்டி விதிப்புகள் வாடிக்கையாளர்களுக்குத் தான் பாதிப்பு எனப் பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்பட உள்ளதால், சோமேட்டோ - ஸ்விக்கி அதிர்ச்சி அடைந்துள்ளது.

5 சதவீத வரி

5 சதவீத வரி

தற்போது செய்யப்பட்டு உள்ள மாற்றத்தில் ஜனவரி 1 முதல் சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி நிறுவனங்கள் உணவகங்களாக அறிவிக்கப்பட்டு இதுநாள் வரையில் இத்தளத்தில் இருக்கும் உணவகங்களில் இருந்து வசூலிக்கப்பட்டு வந்த 5 சதவீத வரியை, டெலிவரி செய்யப்படும் உணவுகளுக்கு மக்களிடம் இருந்து வசூலிக்க உள்ளது.

அதிக வரி

அதிக வரி

ஆனால் இந்த மாற்றத்தின் மூலம் சோமேட்டோ - ஸ்விக்கி நிறுவனங்கள் அதிகளவிலான தொகையை வரியாகச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ளது.

முதலில் உணவகத்தில் வாங்கும் உணவின் விலைக்குத் தான் 5 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் காரணத்தால் டெலிவரி பாய்ஸ்க்கு அளிக்கப்படும் டிப்ஸ், சர்ஜ் கட்டணம், டெலிவரி கட்டணம், பேகேஜ் கட்டணம் ஆகிய அனைத்திற்கும் சேர்த்து 5 சதவீதம் வரியை வசூலிக்க வேண்டும் என்பது தெரிய வந்துள்ளது.

18 சதவீத வரி

18 சதவீத வரி

இந்தச் சூழ்நிலையில் உணவு டெலிவரி நிறுவனங்கள் 5 சதவீத வரி வசூலிக்காமல் 18 சதவீத வரி வசூலிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் சோமேட்டோ - ஸ்விக்கி இன்புட் டாக்ஸ் கிரெடிட் பெற முடியும் என்பதால் இந்த முடிவை எடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அரசுக்கு பிரச்சனையில்லை

அரசுக்கு பிரச்சனையில்லை

அதற்கு அரசும் எவ்விதமான மறுப்பும் தெரிவிக்கபோவது இல்லை, இதற்கு முக்கியக் காரணம் 5 சதவீதம் வரி வருமானம் கிடைக்கும் இடத்தில் 18 சதவீதம் வரி கிடைக்கும் என்பதால் அரசு இதற்கு ஒப்புதல் அளிக்கும்.

இன்புட் டாக்ஸ் கிரெடிட்

இன்புட் டாக்ஸ் கிரெடிட்

இதேபோல் 18 சதவீத வரி மூலம் சோமேட்டோ - ஸ்விக்கி இந்நிறுவனத்தின் டெக்னாலஜி, வாடகை போன்ற பலவற்றுக்கும் இன்புட் டாக்ஸ் கிரெடிட் பெற முடியும். இது ஆன்லைன் சேவை நிறுவனங்களுக்குப் பெரிய நன்மையாக இருக்கும்.

மக்களுக்குப் பாதிப்பு

மக்களுக்குப் பாதிப்பு

ஆனால் இந்தக் கட்டமைப்பில் அதிகம் பாதிக்கப்படுவது இத்தளத்தில் உணவு ஆர்டர் செய்யும் மக்கள் தான், ஏற்கனவே சர்ஜ் கட்டணம், டெலிவரி கட்டணம், பேகேஜ் கட்டணம், வரி ஆகியவற்றின் மூலம் 80 முதல் 150 ரூபாய் வரையில் வசூலிக்கப்படும் நிலையில் 18 சதவீத வரி என்றால் இதன் அளவீடு அதிகரிக்கும்.

டிப்ஸ் தொகை

டிப்ஸ் தொகை

இதேபோல் சோமேட்டோ - ஸ்விக்கி நிறுவனங்கள் மத்தியில் வாடிக்கையாளர்கள் டெலிவரி பாய்ஸ்-களுக்குக் கொடுக்கப்படும் டிப்ஸ் தொகைக்கு வரி உண்டா என்பது முழுமையாகத் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Zomato, swiggy facing new challenge on tips, Surge fee, delivery fee on food Delivery

Zomato, swiggy facing new challenge on tips, Surge fee, delivery fee on food Delivery
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X