ஏர்பஸ், போயிங் நிறுவனங்களுடன் போட்டி போட வருகிறது MC-21.. ரஷ்யாவின் புதிய தயாரிப்பு..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாஸ்கோவ்:உலகளவில் பயணிகள் விமானத் தயாரிப்பு மற்றும் விற்பனையில் மிகப்பெரிய வர்த்தகச் சந்தையை வைத்துள்ள ஏர்பஸ்(பிரான்ஸ்) மற்றும் போயிங் (அமெரிக்கா) ஆகிய இரு நிறுவனங்களுக்குப் போட்டியாக ரஷ்யா முதல் முறையாக MC-21 என்ற பயணிகள் விமானத்தைப் பொதுச் சந்தை வர்த்தகத்திற்காக அறிமுகம் செய்துள்ளது.

போர்விமானங்கள், ஆயுதங்கள், ஏவுகணைகள் என அனைத்திலும் சிறந்து விளங்கும் ரஷ்யா தற்போது பயணிகள் விமானத் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது.

ரஷ்யாவின் இந்த முயற்சியின் மூலம் சர்வதேச சந்தையில் ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகளவில் குறையும்.

MC-21 விமானம்
 

MC-21 விமானம்

ரஷ்யா தயாரித்துள்ள MC-21 விமானத்தில் 211 பயணிகள் அமரக்கூடிய வசதிகள் உள்ளதாக அதன் மாதிரிவடிவத்தை Irkut விமான உற்பத்தி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் அறிமுக விழாவை ரஷ்யா அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

நெடுநாள் கனவு

நெடுநாள் கனவு

சிவில் விமானப் போக்குவரத்து என்பது ரஷ்யாவின் நீண்ட நாள் கனவு, MC-21 விமானத்தின் அறிமுகம், ரஷ்யாவின் ஏரோநாட்டிக் கட்டுமானம் அடுத்தக் கட்டத்திற்குச் செல்லும் என்றும் ரஷ்ய பிரதமர் Dmitry Medvedev தெரிவித்தார்.

போட்டி

போட்டி

இதன் மூலம் பயணிகள் விமானத் தயாரிப்பு தான் வைத்தது தான் விலை, தான் வைத்தது தான் சட்டம் என்றும் இருக்கும் ஏர்பஸ் மற்றும் போயிங் ஆகியவற்றுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.

ஏற்கனவே ரஷ்ய போர் விமானங்கள் முதல் ஏவுகணைகளை வாங்க இந்தியா உட்படப் பல நாடுகள் வரிசைக்கட்டிக்கொண்டு இருக்கும் இவ்வேளையில் MC-21 விமானத்தின் அறிமுகம் சர்வதேச சந்தையில் மிகப்பெரிய போட்டி உருவாக உள்ளது.

சோதனை ஒட்டம்..
 

சோதனை ஒட்டம்..

MC-21 விமானத்தின் கட்டுமானம் முழுமையாக முடிந்தது 2017ஆம் ஆண்டுத் துவக்கத்தில் இதன் சோதனை ஒட்டம் முதல் முறையாகச் செய்யப்படும் எனத் தெரிகிறது.

அதாவது அடுத்த 6 முதல் 8 மாதத்திற்குச் சோதனை ஒட்டம் முடிந்து முழுமையான தயாரிப்பாக MC-21 விமானம் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலக்கு

இலக்கு

MC-21 விமானத்தின் அறிமுகத்தின் மூலம் ரஷ்யா, சந்தையில் ஏர்பஸ் ஏ320 மற்றும் போயிங் 737 ரக விமானங்களின் வர்த்தகத்தை அதிகளவில் குறைக்க வேண்டும் என்பதே இலக்காக வைத்துள்ளது.

சுக்கோய் விமானம்

சுக்கோய் விமானம்

ரஷ்யா சுக்கோய் என்னும் சூப்பர் ஜெட் விமானத்தை அறிமுகம் செய்து 5 வருடம் என்ற குறுகிய காலகட்டத்திற்குள் MC-21 விமான மாதிரியை அறிமுகம் செய்துள்ளது.

சுக்கோய் விமானம் பல தொழில்நுட்ப பிரச்சனைகளை அளித்து வருவது குறிப்பிடத்தக்து.

விலை குறைய வாய்ப்பு..

விலை குறைய வாய்ப்பு..

ரஷ்யாவின் அறிமுகத்தின் மூலம் போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்கள் தங்களது விற்பனையை அதிகரிக்கத் தனது தயாரிப்புகளின் விலையைக் குறைக்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.

இந்திய - ரஷ்ய கூட்டணி

இந்திய - ரஷ்ய கூட்டணி

நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க இந்திய எல்லைக்குள் வரும் எதிரி நாட்டு விமானங்கள், போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை 400 கிலோமீட்டர் தொலைவிலேயே கண்டுபிடித்துத் தகர்த்து வீழ்த்தும் 5 ரஷ்ய எஸ்-400 டிரைம்ப் ஏர் டிபென்ஸ் ஏவுகணைகளை வாங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த 5 ஏவுகணைகளின் மொத்த மதிப்பு 39,000 கோடி ரூபாய் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 பாகிஸ்தான் - சீனா

பாகிஸ்தான் - சீனா

இந்த 5 ஏவுகணைகளில் 3 பாகிஸ்தான் எல்லையிலும், 2 சீன எல்லை பகுதியிலும் நிறுவன இந்திய பாதுகாப்புத்துறை முடிவு செய்துள்ளது.

அணு சக்தி கொண்ட நீர்மூழ்கி கப்பல்கள்

அணு சக்தி கொண்ட நீர்மூழ்கி கப்பல்கள்

இந்தியா தனது கடற்படையை வலிமைப்படுத்த 1.5 பில்லியன் டாலர் குத்தகை திட்டத்தில் அணு சக்தி கொண்ட நீர்மூழ்கி கப்பல் ஒன்றை ரஷ்யாவிடம் இருந்து பெற்றுள்ளது.

அதேபோல் அகுலா-II மற்றும் கிருஸ்டென்ட் ஐஎன்எஸ் சக்கரா ஆகிய இரு நீர்மூழ்கி கப்பல்களை 10 வருட ஒப்பந்த முறையில் வைத்துள்ளது.

272 சுகோய்

272 சுகோய்

இதுவரை இந்தியா ரஷ்யா உடன் 12 பில்லியன் டாலர் மதிப்பிலான 272 சுகோய் 30எம்கேஐ விமானங்களையும், 2.33 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐஎன்எஸ் விக்கிரமாதித்தியா போர்க் கப்பலை பெற்றுள்ளது.

ஏகே-47 ரகத் துப்பாக்கி

ஏகே-47 ரகத் துப்பாக்கி

ரஷ்யா நாட்டின் முன்னணி துப்பாக்கி தயாரிப்பு நிறுவனமான Kalashnikov, இந்திய நிறுவன கூட்டணியுடன் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஏகே-47 ரகத் துப்பாக்கியை தயாரிக்கவும், தனது தொழில்நுட்பத்தைப் பகிரவும் தயாராகியுள்ளது.

20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த துப்பாக்கிகளில் ஏகே-47 ரகத் துப்பாக்கிகளில் முதன்மையானவை.

அனில் அம்பானி

அனில் அம்பானி

இந்தியாவை நீர்மூழ்கி கப்பல்களைப் பழுது மற்றும் மேம்படுத்தும் தளமாக மாற்ற, 11,000 கோடி ரூபாய் முதலீட்டில் ரஷ்ய நிறுவனம் உதவியுடன் அனில் அம்பானி தலைமை வகிக்கும் பிப்பாவ் டிபென்ஸ் நிறுவனம் புதிய தளத்தை அமைக்க உள்ளது.

இதற்காக இரு தரப்பும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இத்திட்டம் முழுவதும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படவும், சலுகைகள் பெற உள்ளது.

200 ராணுவ ஹெலிகாப்டர்

200 ராணுவ ஹெலிகாப்டர்

சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு, ரஷ்ய நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் 200 சாப்பர் ரக ராணுவ ஹெலிகாப்டர்களை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.

அடி சக்க.. முதல நீர்மூழ்கி கப்பல், இப்போ ராணுவ ஹெலிகாப்டர்களா. கலக்குகிறது இந்தியா.

நியூஸ்லெட்டர்

நியூஸ்லெட்டர்

உங்கள் மின்னஞ்சலைத் தேடி வரும் வர்த்தக உலகம்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Russia challenges Airbus, Boeing with new jet

Russia unveiled its first MC-21 medium-haul passenger plane on Wednesday as it aims to revive its beleaguered civil aviation industry and challenge giants Airbus and Boeing.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more