பேஸ்புக் கைவிட்டாலும், பிட்காயின் கைவிடவில்லை.. உலகின் முதல் பில்லியனர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தி சோஷியல் நெட்வொர்க் படத்தைப் பார்த்த அனைவருக்கும் வின்கெல்வாஸ் சகோதரர்களைக் கண்டிப்பாக நினைவிருக்கும். இல்லையெனில் பேஸ்புக் நிறுவனத்தின் துவக்கம் முதல் கவனித்திருப்பவர்களும் வின்கெல்வாஸ் சகோதரர்கள் யார் என்று தெரியும்.

வின்கெல்வாஸ் சகோதரர்களைப் பேஸ்புக் கைவிட்டாலும், பிட்காயின் கைவிடவில்லை. பிட்காயின் முதலீட்டில் மூலம் கிடைத்த வருமானத்தின் மூலம் வின்கெல்வாஸ் சகோதரர்கள் பில்லியனர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

உலகளவில் முதல் முறையாகப் பிட்காயின் முதலீட்டில் வாயிலாகப் பில்லியனர் ஆனதும் இவர்கள்தான்.

யார் இந்த வின்கெல்வாஸ் சகோதரர்கள்..?

யார் இந்த வின்கெல்வாஸ் சகோதரர்கள்..?

பேஸ்புக் குறித்த அடிப்படை ஐடியா மற்றும் அதன் செயல்பாடு, வர்த்தக முறை என அனைத்தையும் திட்டமிட்டு வைத்திருந்தவர்கள் வின்கெல்வாஸ் சகோதரர்கள். இவர்கள் இத்தளத்தை வடிவமைக்கச் சிறந்த வெப் டெவலப்பரை தேடிக்கொண்டு இருக்கும்போது மார்க் ஜூக்கர்பெர்க் அவர்களுக்குச் சிறந்த தேர்வாக இருந்தார்

மார்க் ஜூக்கர்பெர்க் வருகை..

மார்க் ஜூக்கர்பெர்க் வருகை..

தங்களது திட்டத்தில் பணியாற்றுவதாக ஒப்புக்கொண்ட மார்க், வின்கெல்வாஸ் சகோதரர்களின் ஐடியா மற்றும் அனைத்து விபரங்களையும் சேகரித்துக் கொண்டு தனியாகத் தி பேஸ்புக்.காம் என்ற சமுகவலை தளத்தைத் துவங்கினார் மார்க்.

வழக்கு..
 

வழக்கு..

இதற்காக மார்க் ஜூக்கர்பெர்க் மீது வின்கெல்வாஸ் சகோதரர்கள் வழக்கு தொடுத்தனர். ஆனால் இந்த வழக்கு தொடுக்கும்போதே பேஸ்புக் மிகப்பெரிய வெற்றியை அமெரிக்காவில் அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நஷ்டஈடு

நஷ்டஈடு

இந்த வழக்கின் முடிவில் வின்கெல்வாஸ் சகோதரர்களுக்கு மார்க் மற்றும் பேஸ்புக் நிறுவனத்தின் சார்பாக 65 மில்லியன் டாலர் தொகை 2009ஆம் ஆண்டுக் கொடுக்கப்பட்டது.

இந்த வழக்குத் தொடுக்கப்பட்டது 2006ஆம் ஆண்டு.

 

11 மில்லியன் டாலர்

11 மில்லியன் டாலர்

இதில் கிடைக்கப்பெற்ற தொகையை வின்கெல்வாஸ் சகோதரர்கள் சந்தையில் இருந்த மொத்த பிட்காயின் எண்ணிக்கையில் 1 சதவீத பிட்காயின்களைச் சுமார் 11 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கினர்.

புதிய உச்சம்..

புதிய உச்சம்..

ஞாயிற்றுக்கிழமை பிட்காயிந் மதிப்பு தனது புதிய உச்சமான 11,700 அமெரிக்கா டாலர் வரையில் உயர்ந்த காரணத்தால் இவர்களது முதலீட்டு அளவு 1 பில்லியன் டாலருக்கு அதிகமான அளவை அடைந்துள்ளது. இதன் மூலம் பிட்காயில் முதலீட்டில் பில்லியனர் அந்தஸ்தைப் பெற்றவர் என் பெருமையை வின்கெல்வாஸ் சகோதரர்கள் பெற்றனர்.

2013ஆம் ஆண்டு முதல்..

2013ஆம் ஆண்டு முதல்..

கார்மென் மற்றும் டைலெர் வின்கெல்வாஸ் சகோதரர்கள் 2013ஆம் ஆண்டுப் பிட்காயினில் முதலீடு செய்த நாள் முதல் இன்று வரையில் இதன் மிதிப்பு 10,000 சதவீதம் அதாவது 100 மடங்கு அதிகரித்துள்ளது.

ஜெமினி..

ஜெமினி..

பிட்காயின் மூலம் ஈர்க்கப்பட்ட வின்கெல்வாஸ் சகோதரர்கள் அக்டோபர் 2015இல் ஜெமினி என்ற பிரத்தியேக கிரிப்டோகரன்சி வர்த்தகத் தளத்தைத் துவங்கினர்.

இதன் வெளியீட்டு விழாவில் கார்மென் மற்றும் டைலெர் வின்கெல்வாஸ் பிட்காயின் ஒரு நாளில் தங்கத்தை விடவும் அதிக விலைமதிப்புடையதாக மாறும் எனக் கூறினார்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

world's 1st Bitcoin billionaires: Facebook Winklevoss twins

world's 1st Bitcoin billionaires: Facebook Winklevoss twins
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X