English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు

குடும்ப 'அரசியல்' போல இது குடும்ப 'வியாபாரம்'..!

Posted By: Staff
Subscribe to GoodReturns Tamil

சென்னை: இன்றளவில் பல நாடுகளில் வர்த்தகம் செய்யும் ஒவ்வொரு நிறுவனத்தின் பின்னணியிலும், ஒரு குடும்பத்தின் வியாபாரம் இருக்கும். இதை நாம் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும்.

உதாரணமாக ஏர் இந்தியா நிறுவனம், தற்போது இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் பலவற்றிலும் ஸ்திரமான வர்த்தகத்தைப் பெற்று நிலையான வருவாய் மற்றும் லாபத்தை அடைந்து வருகிறது. ஆனால் ஏர் இந்தியா நிறுவனத்தின் உருவாக்கத்திற்குப் பின்னணியில் டாடா குழுமம் இருந்தது எத்தனை பேருக்கு தெரியும்..?

இப்படிக் குடும்ப வியாபாரமாக இருந்த பல நிறுவனங்கள் இன்று பல நாடுகளில் வியாபாரம் செய்தும், பல அரசு நிறுவனமாகவும் மாறியுள்ளது. இத்தகைய நிறுவனங்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கு என்ன தொடர்பு..? வாங்க பார்ப்போம்..

கதையல்ல நிஜம்

இந்தியாவை பொறுத்த வரையில், தலைமுறைக்கான போராட்டங்களின் போது குடும்ப பரிந்தும், புதிய வியாபாரங்களை துவங்கிய பல கதைகள் உண்டு. ஆனால், ஒரு நாட்டை உருவாக்குவதிலும், வளமாக்குவதிலும் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்குவதிலும் இத்தகைய நிறுவனங்களின் பங்கு மிகவும் பெரியது. அதேபோல் பொருளாதார வளர்ச்சியில் இவர்களின் ஆதிக்கத்தை கணக்கிட இயலாது.

உதாரணம்

இதற்கான உதாரணம் 3 ஆகஸ்ட் 2005ஆம் வருடம் நடந்த ரிலையன்ஸ் நிர்வாக கூட்டத்தில் அனில் அம்பானி தனக்குரிய உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பிய போது, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 80 புள்ளிகள் சரிந்தது. இதுக்குறித்து வர்த்தக சந்தையில் இன்றளவும் பேசப்படுகிறது.

இந்தியா

இந்தியாவில் பல குடும்பங்கள் உலகளவில் வியாபரம் செய்து வருகிறது. இப்படிபட்ட 10 இந்திய வியாபார குடும்பங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசையா?? தொடர்ந்து படியுங்கள்.

"14வது ஸ்லைடர்"ஐ படிக்க மறந்துவிடாதீர்கள்..!

டாடா குழுமம்

1868-ம் ஆண்டு ஜாம்ஷெட்ஜி டாடாவினால் ஒரு வியாபார நிறுவனமாக தொடங்கப்பட்ட டாடா குழுமம், இன்று உலகளவில் வியாபாரம் நடத்துகிறது. சுமார் 32 நிறுவனங்களை சந்தைகளில் கொண்டுள்ள இந்நிறுவனத்திற்கு 6 டிரில்லியன் டாலர்கள் மூலதனம் கொண்டுள்ளது. டாடா குமுமத்தில் சுமார் 4,55,947 பேர் பணிபுரிந்து வருகின்றனர். டாடா மோட்டார்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா பவர், டைட்டான் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் தாஜ் ஹோட்டல்ஸ் ஆகியவையே இந்குழுமத்தின் முதன்மையான நிறுவனங்களாகும்.

முருகப்பா குழுமம்

தென்னிந்தியாவின் டாடா என்றழைக்கப்பட்ட திவான் பகதூர் ஏ.எம்.முருகப்பா என்பவரால் 1900-வது ஆண்டில் முருகப்பா குழுமம் தொடங்கப்பட்டது. இது பர்மாவில் வங்கி சேவை வியாபாரத்தை தொடங்கிய நிறுவனமாகும். தற்பொழுது, சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு, சுமார் 28 நிறுவனங்களை நிர்வகித்து வருகிறது. 32,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் இந்நிறுவனம், சுமார் 225 பில்லியன் மதிப்பு மிக்கதாகும். பொது காப்பீடு, உரங்கள், சைக்கிள் தயாரிப்பு, ஸ்டீல் டியூப்கள் மற்றும் பசை தயாரிப்பு என பல்வேறு வகையான தொழில்களில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

டாபர் குழுமம்

1884-ம் ஆண்டு டாக்டர் எஸ்.கே.பர்மன் என்பவரால் அடிக்கல் நாட்டப்பட்ட டாபர் குழுமம் பல காலமாக இந்தியாவில் செயல்பட்டு வரும் தொழில் குடும்பமாகும். இந்தியாவிலுள்ள மிகப்பெரிய ஆயுர்வேதிக் மருந்து தயாரிப்பு நிறுவனமாக டாபர் உள்ளது. 260 வகையான மருந்துகளை உற்பத்தி செய்து சிகிச்சை அளிக்கும் பணியை டாபர் நிறுவனம் செய்து வருகிறது. இந்நிறுவனத்தில் சுமார் 3000 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

பிர்லா குழுமம்

1857-ம் ஆண்டு சேத் சிவ்நாராயண் பிர்லா என்பவரால் பிர்லா வியாபார குழுமம் தொடங்கப்பட்டது. தற்போது 33 நாடுகளில், 1,36,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் குழுமமாக வளர்ந்துள்ளது. இந்தியாவின் மூன்றாவது பெரிய தனியார் நிறுவனமான பிர்லா குழுமம். இதன் சொத்து மதிப்பு 40 பில்லியன் டாலர்களாகும். சுரங்கத் துறை, சிமெணட் உற்பத்தி, ஜவுளி, தொலைதொடர்புகள், நிதி சேவைகள், இராசயன பொருட்கள், மின் துறை, தகவல் தொழில்நுட்படம் போன்ற பல்வேறு துறைகளிலும் கால் பதித்து வெற்றிகரமாக தொழில்களை நடத்தி வருகிறது பிர்லா குழுமம்.

வாடியா குழுமம்

1736-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து கப்பல்கள் மற்றும் துறைமுக கட்டுமானத்திற்கான ஒப்பந்தம் பெற்றபோது வாடியா குழுமத்தை சார்.லோவ்ஜி வாடியா உருவாக்கினார். தற்போது பாம்பே டையிங், பிரிட்டானிய இன்டஸ்ட்ரீஸ், பாம்பே ரியாலிட்டி, கோ ஏர் மற்றும் நேஷனல் பேராக்சைடு என ஐந்து நிறுவனங்களை இந்த குழுமம் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் தற்போதைய தலைவராக இருப்பவர் நுல்சி வாடியா ஆவார். விமானத் துறை, ஹெல்த் கேர், ரியல் எஸ்டேட், தானியங்கி பொருட்கள், இரசாயனத் துறை, கட்டுமானத்துறை, தோட்டங்கள் மற்றும் சில்லறை வணிகம் என பல்வேறு பிரிவுகளிலும் இக்குழுமம் தடம் பதித்துள்ளது.

கோத்ரேஜ் குழுமம்

ஆர்தேஸ்ஹிர் கோத்ரேஜ் என்பவரால் 1897-ம் ஆண்டு பூட்டுகள் தயாரிக்கும் நிறுவனமாக கோத்ரேஜ் குழுமம் தொடங்கப்பட்டது. தற்போது வீட்டு உபயோக பொருட்கள், தொழில் கட்டுமானம், ரியல் எஸ்டேட், விவாசய-தொழில், கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் பொருட்கள் ஆகிய துறைகளில் இந்நிறுவனம் தொழில்களை நடத்தி வருகிறது. இப்பொழுது 4-வது தலைமுறை குடும்பத்தால் நடத்தப்பட்டு வரும் இந்த குழுமம் 3.5 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பினை கொண்டிருக்கிறது. இக்குழுமத்தில் 26,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிறுவனத்தின் தற்போதைய தலைவர் ஆதி கோத்ரேஜ் என்பவராவார்.

கிர்லோஸ்கர் குழுமம்

1888-ம் ஆண்டு கிர்லோஸ்கர் பிரதர்ஸ் லிமிடெட் என்ற பெயரில் கிர்லோஸ்கர் குழுமம் தொடங்கப்பட்டது. திரு.லக்ஷ்மண்ராவ் கிர்லோஸ்கரின் தலைமையில் முதன்மையான நிறுவனமாகவும் மற்றும் வெற்றிகரமாக குழுமமாகவும் இந்த குழுமம் வளர்ந்தது. எஞ்சினியரிங் மற்றும் உற்பத்தி துறையில் உள்ள இந்நிறுவனம் பம்புகள், எஞ்சின்கள், வால்வுகள் மற்றும் கம்ப்ரஸ்சர்கள் ஆகியவற்றை தயாரித்து வருகிறது. 2.50 பில்லியன் டாலர்கள் வருமானமும், 18,000 பணியாளர்களையும் கொண்டுள்ள மிகப்பெரிய நிறுவனமாக கிர்லோஸ்கர் விளங்குகிறது. இக்குழுமத்தின் தற்போதைய தலைவராக இருப்பவர் சஞ்சய் கிர்லோஸ்கர் ஆவார்.

மோடி குழுமம்

1933-ம் ஆண்டு ராஜ் பகதூர் குஜ்ரார்மால் மோடி என்பவரால் இந்த குழுமம் தொடங்கப்பட்டது. தேயிலை மற்றும் பானங்கள், விடுதிகள், கல்வி நிறுவனங்கள், பொழுதுபோக்கு துறை, நுகர்வோர் பொருட்கள், ஹெல்த் கேர், உணவு மற்றும் வரவேற்பு துறை என பல்வேறு துறைகளிலும் வெற்றிகரமாக தடம் பதித்துள்ள குடும்பமாக இந்த குழுமம் உள்ளது. 2.8 பில்லியன் டாலர்கள் வருமானமும், 28,000 பணியாளர்களையும் இந்த குழுமம் கொண்டுள்ளது. தலைநகரமான டெல்லியில் தலைமையகத்தை கொண்டிருக்கும் இந்நிறுவனத்தின் தற்போதைய தலைவராக இருப்பவர் கிருஷன் குமார் மோடி என்பவராவார்.

மஹிந்த்ரா குழுமம்

ஜெ.சி.மஹிந்த்தரா மற்றும் கே.சி.மஹிந்த்ரா ஆகிய சகோதரர்களும், மாலிக் குலாம் முகமது என்பவரும் சோந்து 1945-ம் ஆண்டு இரும்பு வியாபாரத்திற்காக இந்த குழுமத்தை தொடங்கினார்கள். தற்பொழுது, இந்த குழுமம் மஹிந்த்ரா அண்டு மஹிந்த்ரா என்று அழைக்கப்பட்டு வருகிறது. 15.9 பில்லியன் டாலர்கள் வருமானமும், 1,55,000 பணியாளர்களையும் கொண்டுள்ள குழுமமாக இது உள்ளது. ஆட்டோமொபைல்ஸ், மென்பொருள், ஏரோஸ்பேஸ், விவசாய வியாபாரம், சில்லறை வர்த்தகம், ரியல் எஸ்டேட் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இவர்கள் உள்ளார்கள்.

ரேமாண்ட் குழுமம்

1925-ம் ஆண்டு புனே நகரில் கம்பளி போர்வைகளை தயாரிப்பதற்காக ரேமாண்ட் ஆலை நிறுவப்பட்டது. இன்றைய நிலையில், இந்தியாவின் முன்னணி ஆடை மற்றும் துணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருக்கும் ரேமாண்ட் குழுமத்தின் மொத்த வருமானம் 210 டாலர்களாகும். துணிகள், ஆடை வடிவமைப்பு, டெனிம், கழிப்பறை சாதனங்கள், கட்டுமான கோப்புகள் மற்றும் கருவிகள் தயாரிப்பு ஆகிய துறைகளில் இந்நிறுவனம் புகழ் பெற்று விளங்குகிறது. ஏர் சார்ட்டர் சேவைத் துறையிலும் அவர்கள் உள்ளனர். ரேமாண்ட், பார்க் அவென்யூ, பார்க்ஸ் மற்றும் ரேமாண்ட் அப்பாரல் ஆகியவை ரேமாண்ட் நிறுவனத்தின் முன்னணி பிராண்ட்களாக உள்ளன.

வாசகர் கருத்து

வாசகர் கருத்துக்கு செவி சாய்க்கும் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம்:

இதுப்போன்ற பிற குடும்ப வர்த்தக நிறுவனங்களின் பெயர்கள் தெரிந்தால் உடனே Comment செய்யவும். 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India's 10 Oldest Family Owned Businesses

In India, we hear a lot about family businesses during the succession battles. But their impact on nation building, wealth creation and employment generation is no less.
Please Wait while comments are loading...
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC