உள்நாட்டில் உள்ள 4 சொத்துக்களை விற்க ஒப்புதல் பெற்றது சகாரா குழுமம்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சகாரா நிறுவனத்திற்கு இந்தியாவில் உள்ள 4 சொத்துக்களை விற்று 2,710 கோடி ரூபாய் நிதியை திரட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. இத்தொகை இந்நிறுவன தலைவர்களை சிறையில் இருந்து வெளியில் கொண்டு வர தேவைப்படும் 10,000 கோடி ரூபாய் நிதிக்கு பெரும் உதவிகரமாக இருக்கும்.

 

சொத்துக்கள்

சொத்துக்கள்

இந்நிறுவனத்தின் ஜோத்பூர், புனே, குர்கான் மற்றும் மும்பை பகுதிகளில் உள்ள சொத்துக்களை விற்க சுப்ரீப் கோர்ட் கடந்த ஜூன் 4ஆம் தேதி அறிவித்ததன் படி நேற்று இதற்கான டீல் முடிந்தது.

மே 2015

மே 2015

மேலும் இந்நிறுவனம் விருப்பப்படும் அனைத்து சொத்துக்களும் வருகிற மே 2015ஆம் ஆண்டிற்குள் விற்கப்பட்டு இருக்க வேண்டும், இதற்கான காசோலைகளை செபி-சகாரா ரீபண்ட் கணக்கின் பெயரில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்க வேண்டும் எனவும் நீதி மன்றம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருந்தது.

முன்பணம்

முன்பணம்

மேலும் இந்த 4 சொத்துக்களின் விற்பனைக்கான முக்கூட்டிய தொகையாக சுமார் 184.5 கோடி ரூபாய்க்கான காசோலையை நீதிபதி தேவ் மற்றும் சிக்கிர் தலைமையிலான அமர்வில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பாங்க் ஆஃப் சீனா
 

பாங்க் ஆஃப் சீனா

மேலும் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களின் பேரில் பாங்க் ஆஃப் சீனா விடம் இருந்து சுமார் 650 மில்லியன் டாலர் அளவிலான கடனை பெறவும் இந்நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.

சகாரா நிறுவனம்

சகாரா நிறுவனம்

இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனமான சகாரா நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு செய்த மோசடிக்காக இந்நிறுவனத்தின் தலைவர் சப்ரதா ராய் மற்றும் இரு துணை தலைவர்களையும் கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

10,000 கோடி

10,000 கோடி

இவர்கள் பெயில் மூலம் வெளியில் வர சுப்ரீம் கோர்ட் செபியிடம் 5,000 கோடி ரூபாய் பணமாகவும், 5,000 வங்கி பிணையத்தை அளிக்க வேண்டும் உத்தரவிட்டது. இதன் படி இந்நிறுவனம் உள்ளநாட்டு மற்றும் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை விற்க தற்போது முயற்சி செய்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SC permits Sahara to sell 4 properties worth over Rs. 2,700 crore

The Supreme Court on Tuesday permitted the Sahara Group to proceed with the sale of four domestic properties, which is likely to fetch Rs. 2,710 crore, in its bid to raise Rs. 10,000 crore for the release of its jailed chief Subrata Roy.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X