ஓரே நாளில் சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு.. ரத்தக்களறி ஆனது மும்பை பங்குச்சந்தை..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செவ்வாய்க்கிழமை நடந்த ரிசர்வ் வங்கியின் இருமாத நாணய மறுஆய்வு கொள்கை கூட்டத்தின் மூலம் வங்கித்துறை அதிகளவில் பாதிக்கப்படும் நிலை மற்றும் ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் வீழ்ச்சி மும்பை பங்குச்சந்தையை அதிகளவில் பாதித்தது.

 

மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் கடந்த 2 மாதங்களில் காணாத மிகப்பெரிய அளவிலான 2 சதவீத வீழ்ச்சியை இன்று பதிவு செய்துள்ளது.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

2016-17ஆம் நிதியாண்டின் முதல் நாணய மறுஆய்வு கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் தலைவர் ரகுராம் ராஜன் ரெப்போ விகிதத்தை அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்த்த வகையில் சுமார் 0.25 சதவீத வட்டியைக் குறைத்துள்ளது.

இதனால் பங்குச்சந்தையில் வங்கித்துறை பங்குகள் அதிகளவில் பாதிக்கப்பட்டது.

 

வங்கித்துறை பங்குகள்

வங்கித்துறை பங்குகள்

இன்று மும்பை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வணிக வங்கிகளில் அதிகரித்து வரும் வராக் கடன் மற்றும் கார்பரேட் நிறுவனங்களுக்கு அதிகளவில் கொடுக்கப்படும் கடன் அளவுகளைக் குறைக்கப் புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவர ஆர்பிஐ முடிவு செய்துள்ளது.

புதிய முடிவுகள்
 

புதிய முடிவுகள்

ரிசர்வ் வங்கியின் புதிய முடிவுகளால் வங்கிகளின் லாப அளவு ஒரு புறம் குறைந்தாலும், வராக் கடன் அளவு குறையும். இது சந்தை முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக விளங்குகிறது. இதனால் வங்கித்துறை பங்குகள் மீதான முதலீட்டை அதிகளவில் குறைத்தனர்.

உலகச் சந்தைகள்

உலகச் சந்தைகள்

இன்றைய வர்த்தகத்தில் ஆசிய சந்தையில் ஜப்பான் (2.42% சரிவு), ஹாங்காங் (1.57% சரிவு), ஆஸ்திரேலியா (1.37% சரிவு), தைவான் என அனைத்து முக்கியச் சந்தைகளும் 1 சதவீதத்திற்கு அதிகமான சரிவை சந்தித்துள்ளது.

அதேபோல் ஐரோப்பிய சந்தையிலும், இங்கிலாந்து, ஐரோப்பா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் சுவிஸ் ஆகிய அனைத்தும் மிகப்பெரிய நஷ்டத்தில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் தாக்கம் இந்திய சந்தையும் அதிகளவில் பாதித்துள்ளது.

 

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 516.06 புள்ளிகள் அல்லது 2.03 சதவீதம் சரிந்து 25,000 புள்ளிகள் என்ற நிலையில் இழந்து 24,883.59 புள்ளிகளை அடைந்துள்ளது.

நிஃப்டி

நிஃப்டி

சென்செக்ஸ் குறியீட்டை போல் நிஃப்டி குறியீடும் இன்று 155.60 புள்ளிகள் சரிந்து 7,603.20 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.

வங்கிக்துறை பங்குகள் 3.21% சரிவு

வங்கிக்துறை பங்குகள் 3.21% சரிவு

மும்பை பங்குச்சந்தையின் BANKEX குறியீடு இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் ரிசர்வ் வங்கி அறிவிப்பாலும் சர்வதேச சந்தைகளின் வீழ்ச்சியாலும் சுமார் 591 புள்ளிகள் சரிந்து 3.21 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் ஐசிஐசிஐ வங்கி 5.45 சதவீதம் வரை சரிந்துள்ளது. அதேபோல் எஸ்பிஐ வங்கி 5.38 சதவீதம் சரிந்த நிலையில், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்துப் பங்குகளும் இன்று சரிவை சந்தித்துள்ளது.

 

டாப் 30 நிறுவனங்கள்

டாப் 30 நிறுவனங்கள்

பிஎஸ்ஈ சந்தையின் டாப் நிறுவனங்கள் பட்டியலில் இன்று அதானி போர்ட்ஸ், பார்தி ஏர்டெல், டாடா மோட்டாஸ், பெல், மாருதி, எல் அண்ட் டி, கோல் இந்தியா என அனைத்து முக்கியமான பங்குகளும் சரிவில் தத்தளிக்கின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex dives 516 pts, Nifty ends at 7603 post RBI policy

Equity benchmarks crashed 2 percent today due to slump in global peers and post RBI monetary policy.
Story first published: Tuesday, April 5, 2016, 16:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X