அக்கவுண்டில் பணம் இல்லாதது ஒரு குத்தமாய்யா... வங்கிகளின் சூழ்ச்சி வலை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: பல சமயங்களில் நம்முடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு இருப்பு உள்ளது என்பதை மறந்திருப்போம். அதுவும் நடுத்தர மற்றும் எளியவர்கள் கதையைச் சொல்லவே வேண்டாம்.

 

இந்நிலையில் அருகில் உள்ள ஏடிஎம்-களில் உங்கள் கணக்கில் இருப்பதை விட அதிகப் பணத்தை எடுக்க முயலும்போது பணம் குறைவாக உள்ளது என்ற தகவல் வந்தால், அதனை மீண்டும் எடுக்க முயலாதீர்கள்.

ஏனென்றால்?

(வெறும் 107 ரூபாயில் 'பான் கார்ட்'.. இண்டர்நெட் இணைப்பு இருந்தால் போதும்..!)

வங்கிகளின் சூழ்ச்சி

வங்கிகளின் சூழ்ச்சி

ஏனென்றால், பலமுறை நீங்கள் அவ்வாறு முயன்றால் அதற்கான அபராத கட்டணத்தைச் செலுத்த வேண்டிவரும். (வங்கிகள் இப்படியும் உங்கள் கணக்கில் இருந்து பணத்தைத் திருடுகின்றன.)

அநியாய கட்டண விதிப்பு

அநியாய கட்டண விதிப்பு

உங்கள் வங்கி கணக்கின் இருப்பு அளவை விட அதிகப் பணத்தை எடுக்க முயன்றால், ஏடிஎம் இயந்திரம் உங்கள் கணக்கில் போதிய இருப்பு இல்லை என்பதைத் தெரிவிக்கும்.

போதிய இருப்பு இல்லாத நிலையில் அதெற்கென ஒரு கட்டணத்தை வங்கிகள் வசூலிக்கின்றன.

தவறான பதிவு..

தவறான பதிவு..

மேலும் ஒரு உதாரணம், நீங்கள் ஏடிஎம் இயந்திரத்தில் 2,500 ரூபாய்க்குப் பதிலாக 25,000 என்று தவறுதலாகக் கேட்டுவிட்டீர்கள் என்றால், வங்கியில் போதிய இருப்பு இல்லாத நிலையில் நீங்கள் கோரியது மறுக்கப்படலாம்.

அபராத கட்டணம்
 

அபராத கட்டணம்

இதற்கான காரணம் ஒன்று உங்களுடைய அஜாக்கிரதையாலோ அல்லது ஏடிஎம்-இல் போதிய பணம் இல்லாததாலோ இருக்கலாம். இது போன்ற சூழ்நிலைகளில் அபராத கட்டணம் பெரும்பாலான வங்கிகளால் வசூலிக்கப்படுகிறது.

25 ரூபாய்

25 ரூபாய்

பிற வங்கி ஏடிஎம் (Non Home Bank ATM) அல்லது விற்பனைக் கூடங்களில், நாம் பணப் பரிமாற்றம் செய்யும்போது போதிய இருப்பு வங்கிக் கணக்கில் இல்லாமல் இவ்வாறு மறுக்கப்பட்ட பரிமாற்றங்களுக்கு 25 ரூபாயை அபராதமாக வங்கிகள் விதிக்கின்றன. இதற்கான சேவைக் கட்டணம் தனி.

முன்னணி வங்கிகள்

முன்னணி வங்கிகள்

ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, கோடாக் மஹிந்திரா மற்றும் எஸ் பாங்க் ஆகிய வங்கிகள், 25 முதல் 28 ரூபாய் வரை (சேவைக் கட்டணம் உட்பட) வசூலிக்கின்றன.

எஸ்பிஐ வங்கி

எஸ்பிஐ வங்கி

எஸ்பிஐ வங்கி போதிய இருப்பு இல்லாத கணக்குகளில் வர்த்தக இடம் அல்லது ஏடிஎம் பரிவர்த்தனை மறுப்புக் கட்டணமாக 17 ரூபாய் வசூலிக்கிறது.

20 ரூபாய்

20 ரூபாய்

இந்தஸ்இந்த் வங்கி தன் சொந்த கார்டுகள் மற்றும் இதர வங்கிக் கார்டுகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளில் போதிய இருப்பு இல்லாத போது ரூபாய் 20-ஐ அபராதமாக வசூலிக்கிறது.

அறிவுரை..

அறிவுரை..

எனவே அடுத்த முறை நீங்கள் பணம் எடுக்கவோ அல்லது பொருள் வாங்கும்போது போதிய இருப்பு இல்லாமல் பரிவர்த்தனை மறுக்கப்பட்டால் அதனை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

என்ன இனிமே கொஞ்சம் ஜாக்கிரதையா இருப்பீங்கதானே?

கேஷ் பேக்

கேஷ் பேக்

கேஷ் பேக் என்பது ஒரு புதை குழி!! உஷார்..

எஸ்பிஐ வங்கி

17,000 பணியிடங்கள் காலி..!

பட்டனை தட்டினால் ஆதார் அட்டை

ரொம்ப ஈசி பாஸ்... நொடிகளில் கிடைக்கும் ஆதார் அட்டை..!

ரிலையன்ஸ் ஜியோ

தூக்கிய அடிக்க வருகிறது '‪#‎ரிலையன்ஸ்‬ ஜியோ'..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

சமுக வளைதள இணைப்புகள்

சமுக வளைதள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ATM Decline Charges Due To Insufficient Balance: Why You Need To Be Careful?

There are many instances when you forget the balance in your account and try to withdraw more than the funds in the account from your nearest ATM.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X