அம்பானிகளுடன் போட்டி போட 'ப்ராஜெக்ட் லீப்'.. ஏர்டெல் வகுத்த 60,000 கோடி ரூபாய் திட்டம்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் அடுத்த 3 வருடத்தில் 60,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்து தனது நெட்வொர்கை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவைகளை அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

 

அம்பானிகளின் கூட்டணியில் புதிதாகத் துவங்கப்படும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தாக்கத்தைச் சமாளிக்கவே ஏர்டெல் இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்துள்ளது.

ஏர்டெலின் புதிய முதலீடு மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அறிமுகம் ஆகியவை இந்திய டெலிகாம் துறையில் மிகப்பெரிய போட்டியை உருவாக்க உள்ளது. இதனால் அடுத்தச் சில வருடங்களில் இத்துறையில் முதலீடுகள் சென்னை மழை போல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ராஜெக்ட் லீப்..

ப்ராஜெக்ட் லீப்..

பார்தி ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ள 60,000 கோடி ரூபாய் முதலீட்டுத் திட்டத்தின் பெயர் "ப்ராஜெக்ட் லீப்". இத்திட்டத்தின் கீழ் ஏர்டெல் நிறுவனத்தின் மொத்த நெட்வொர்க்கும் அடுத்தத் தலைமுறைக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. இதேபோல் மொத்த வாய்ஸ் மற்றும் டேட்டா சேவைகளையும் மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் சீஇஓவான கோபால் விட்டல் தெரிவித்தார்.

1,60,000 கோடி ரூபாய்

1,60,000 கோடி ரூபாய்

நடப்பு நிதியாண்டில் ஏர்டெல் நிறுவனம் ஆக்டீவ் மற்றும் பாசீவ் நெட்வொர்க், ஸ்பெக்ட்ரம், பைபர், கேபில்ஸ் மற்றும் சிஸ்டங்களில் சுமார் 1,60,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது அறிவித்துள்ள 60,000 கோடி ரூபாய் முதலீடு தனிப்பட்டது.

கால் டிராப் பிரச்சனை..
 

கால் டிராப் பிரச்சனை..

இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ஏர்டெல் நிறுவனத்தில் மட்டமான தொலைத்தொடர்பு இணைப்புகளால் கால் டிராப் பிரச்சனை அதிகரித்துள்ளதாக வாடிக்கையாளர் மத்தியில் புகார்கள் எழுந்து வருகிறது.

இப்பிரச்சனைகளைக் களைய தொலைத்தொடர்பு ஆணையமான டிராய் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இத்தகைய நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கவும் இந்த ப்ராஜெக்ட் லீப் பயன்படும்.

அம்பானிகள் கூட்டணி..

அம்பானிகள் கூட்டணி..

2015ஆம் நிதியாண்டுக்குள் இந்தியாவில் அனில் அம்பானி மற்றும் முகேஷ் அம்பானிகளின் கூட்டணியில் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் உருவாக உள்ளது.

இதனால் இந்திய டெலிகாம் துறையில் மிகப்பெரிய போட்டி உருவாகும் நிலை உள்ளது. இதில் இருந்து தங்கள் நிறுவனங்களையும், வர்த்தகத்தையும் காத்துக்கொள்ள டெலிகாம் நிறுவனங்கள் ஆயத்தம் ஆகிவருகிறது.

பேஸ் ஸ்டேஷன்

பேஸ் ஸ்டேஷன்

அடுத்த 3 வருடத்திற்குள் ப்ராஜெக்ட் லீப் திட்டத்தின் கீழ் சுமார் 1,60,000 பேஸ் ஸ்டேஷன்களை நிறுவத் திட்டமிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் 70,000 பேஸ் ஸ்டேஷன்களை ஏர்டெல் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மொபைல் பிராண்ட்பேன்ட்

மொபைல் பிராண்ட்பேன்ட்

வருகிற மார்ச் மாதத்திற்குள் இந்தியாவில் சுமார் 2,50,000 கிராமம் மற்றும் டவுன்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்குத் தடையில்லா மொபைல் பிராண்ட்பேன்ட் இணைக்கத் திட்டமிட்டுள்ளது.

அடுத்த 3 வருடத்தில் இதன் அளவு 5,00,000 இருக்கும் எனவும் திட்டமிட்டுள்ளது.

ரூ.60,000 கோடி முதலீடு

ரூ.60,000 கோடி முதலீடு

ஏர்டெல் நிறுவனத்தின் இந்த ரூ.60,000 கோடி முதலீட்டின் மூலம் ஏர்டெல் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு இணைப்புகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையான உருமாற உள்ளது.

வோடாபோன்

வோடாபோன்

மேலும் இந்தியாவில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்க வோடாபோன் நிறுவனம் இந்தியாவில் 13,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பெற்றுள்ளது.

அம்பானிகளின் புதிய நிறுவனம்

அம்பானிகளின் புதிய நிறுவனம்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Airtel to invest Rs 60,000 crore in 'Project Leap'

The country’s largest telecom services provider Bharti Airtel on Monday announced that it will invest Rs 60,000 crore over the next three-years to upgrade its networks with an aim to provide better quality services to its subscribers amid increasing competition.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X