வாயால் கெட்ட எலான் மஸ்க்.. முதல் இடத்தை பிடித்தார் ஜெப் பெசோஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பல ஆண்டுகள் போராட்டங்கள் மற்றும் கடும் முயற்சிகளுக்குப் பின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பில் கேஸ்ட் மற்றும் அமெரிக்க முதலீட்டாளரான வாரன் பபெட் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்தார் அமேசான்.காம் நிறுவனத்தின் ஜெப் பெசோஸ்.

Recommended Video

Elon Muskஐ முந்தி முதல் இடத்தை பிடித்தார் Jeff Bezos | OneIndia Tamil

ஆனால் 2020ஆம் ஆண்டில் டெஸ்லா நிறுவனம் அடைந்த அதிரடி வளர்ச்சியின் மூலம் 200 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பை அடைந்தார் எலான் மஸ்க். இதனால் ஜெப் பெசோஸ் 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

இந்நிலையில் 6 வாரப் போராட்டத்திற்குப் பின் ஜெப் பெசோஸ் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

டெஸ்லா பங்குகள் சரிவு

டெஸ்லா பங்குகள் சரிவு

டெஸ்லா பங்குகள் பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி முதல் தொடர்ந்து சரிந்து வருகிறது. எலான் மஸ்க் டிவிட்டரில் அவ்வப்போது செய்யும் டிவீட்களால் டெஸ்லா முதலீட்டாளர்கள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். பிப்ரவரி மாதத்தில் டெஸ்லா பங்குகள் 872 டாலரில் இருந்து செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் 796.22 டாலர் வரையில் சரிந்துள்ளது.

எலான் மஸ்க் முடிவுகள்

எலான் மஸ்க் முடிவுகள்

பிட்காயின் மீது செய்துள்ள 1.5 பில்லியன் டாலர் முதலீடு, கேம்ஸ்டாப் நிறுவனத்திற்குச் செய்யப்பட்ட ஆதரவு, டோஜ்காயின் மீது செய்து வரும் தொடர்ந்து முதலீடுகள் மற்றும் ஆதரவு, சீனாவில் தடை செய்யப்பட்ட வாய்ஸ் சேட்டிங் செயலியான கிளப்ஹவுஸ்-க்கு ஆதரவு என எலான் மஸ்க்-ன் பல்வேறு முடிவுகள் டெஸ்லா முதலீட்டாளர்களுக்கு எதிராக உள்ளது.

டெக்சாஸ் தொழிற்சாலை

டெக்சாஸ் தொழிற்சாலை

இதுமட்டும் அல்லாமல் அமெரிக்காவில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் டெக்சாஸ் தொழிற்சாலை பனிப்பொழிவு காரணமாகக் கட்டுமான பணிகள் முடங்கியுள்ளது. இதனால் குறித்த நேரத்தில் கட்டுமான பணிகள் முடிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது டெஸ்லா நிறுவனத்திற்குப் பின்னடைவாக அமைந்துள்ளது. இதன் வாயிலாகவே இந்நிறுவனப் பங்குகள் சரிந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை வர்த்தகம்

செவ்வாய்க்கிழமை வர்த்தகம்

அமெரிக்கப் பங்குச்சந்தையின் செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் டெஸ்லா நிறுவனப் பங்குகள் 2.4 சதவீதம் சரிந்து ஒரு பங்கு விலை 796.22 டாலராகக் குறைந்தது. இதன் எதிரொலியாக எலான் மஸ்க்-ன் சொத்து மதிப்பு 4.6 பில்லியன் டாலர் குறைந்துள்ளது.

ஜெப் பெசோஸ் முதல் இடம்

ஜெப் பெசோஸ் முதல் இடம்

இந்தச் சரிவின் மூலம் எலான் மஸ்க்-ஐ விடவும் 955 மில்லியன் டாலர் மட்டுமே அதிகமாகக் கொண்டு இருக்கும் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் 191.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

இதே வேளையில் ஜெப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகி புதிய திட்டங்களில் கவனத்தைச் செலுத்த முடிவு செய்துள்ளார். இது அமேசான் முதலீட்டாளர்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளது.

டிவிட்டரும் எலான்-ம்

டிவிட்டரும் எலான்-ம்

எலான் மஸ்க் சமூக வலைத்தளத்தில் செய்யும் அதிரடியான பதிவுகள் வாயிலாகவே ஜனவரி 26ஆம் தேதி அடைந்த உச்ச நிலையில் இருந்து சுமார் 10 சதவீதம் சரிந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு டிவிட்டரில் இருந்து சில காலம் வெளியேறுவதாக எலான் மஸ்க் அறிவித்த நிலையில், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இரண்டே நாட்களில் திரும்பி வந்த எலான் வேற லெவலில் சேட்டையைத் துவங்கியுள்ளது.

எலான் மஸ்க்-ன் மறக்க முடியாத அதரடி டிவீட்டுகள்..!எலான் மஸ்க்-ன் மறக்க முடியாத அதரடி டிவீட்டுகள்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jeff Bezos regains top on world’s richest list after Elon Musk slips

Jeff Bezos regains top on world’s richest list after Elon Musk slips
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X