தற்போது இன்ஸ்டாகிராம் , யூடியூப் போன்ற தளங்களில் சேனல் உருவாக்கி அதன் மூலம் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி கண்டன்ட் கிரியேட்டராக ஏராளமானவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் ஜொலிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இவற்றில் அதிக ஃபாலோவர்களை பெற்றுவிட்டால் போதும் நம் வீடியோக்களுக்கு வியூஸ் அதிகரித்து வருமானம் கிடைக்க தொடங்கும்.
பெரும்பாலான நிறுவனங்கள் தங்களுடைய பொருட்களை பிரபலம் செய்வதற்கு இன்ஃப்ளுயன்சர்களை தான் அதிகம் நாட தொடங்கி இருக்கிறார்கள். ஏனெனில் அந்த அளவிற்கு இந்த கண்டண்ட் கிரியேஷனும் இன்ஃப்ளுயன்சர் மார்க்கெட்டிங்கும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்றிருக்கின்றன. சிலர் தங்களுடைய சமையல் திறனை வெளிப்படுத்தி ஃபாலோவர்களை பெறுகிறார்கள். ஒரு சிலர் தங்களுக்கு தெரிந்த கலைகளை வெளிப்படுத்துகிறார்கள். சிலர் பாடம் எடுக்கிறார்கள் சிலர் ட்ராவல் செய்வது , பல்வேறு உணவகங்களுக்கு சென்று உணவினை மதிப்பாய்வு செய்வது என ஒவ்வொருவரும் தங்களது பிடித்த விஷயங்களை செய்து அவற்றை வீடியோவாக பதிவேற்றம் செய்து ஃபாலோவர்களை பெறுகிறார்கள்.

வீடியோக்களுக்கு எவ்வளவு வியூஸ் கிடைகிறதோ அதை பொறுத்து இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகியவை அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வருவாயையும் வழங்குகின்றன. அந்த வகையில் யூடியூப் ஷார்ட்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல் ஆகிய இரண்டில் எது கண்டன்ட் கிரியேட்டர்களுக்கு அதிக வருமானம் தருகிறது என்பதை பார்க்கலாம்.
யூடியூப்பை பொறுத்தவரை விளம்பரங்கள் தான் அதன் பிரதான வருமான ஆதாரமாக இருக்கிறது. உங்களின் சேனல் மானிடைஸ் செய்யப்பட்டது என்றால் இந்த வீடியோக்களுக்கு வரக்கூடிய வியூஸ்கள் அடிப்படையில் வருமானம் அமையும். சில சமயங்களில் நீங்கள் பிராண்டுகளோடு ஒப்பந்தம் செய்து குறிப்பிட்ட சில பிராண்டுகளை விளம்பரப்படுத்தலாம் அந்த வகையில் உங்களுக்கு ஒரு கணிசமான வருமானம் கிடைக்கும். யூடியூப் ஷார்ட்ஸ் பொறுத்தவரை நிலையானதாகவும் நீண்ட கால அடிப்படையில் வருமானம் தரக்கூடியதாகவும் இருக்கிறது. தொடர்ச்சியாக உங்களுடைய வீடியோக்கள் அதிக வியூஸ்களை பெறுகிறது என்றால் ஒரு கணிசமான வருமானம் உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும்.
அதுவே இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் நேரடி வருவாய் என்பது அதில் கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கிறது. நிறைய பேர் உங்களின் வீடியோக்களை பார்க்கிறார்கள், பகிரார்கள் , கமெண்ட் செய்கிறார்கள் என்றால் அதனை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் குறிப்பிட்ட சில பிராண்டுகளோடு செய்து ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். Affiliate marketing, brand collaboration ஆகியவை தான் இதில் நல்ல வருமானம் தரும்.
யூடியூப் போல வருமான பகிர்வு இன்ஸ்டாகிராமில் இருக்காது, யூடியூப்புடன் ஒப்பிடுகையில் இது குறைவு தான். நீங்கள் புதிதாக ஒரு சேனல் தொடங்குகிறீர்கள் என்றால் இன்ஸ்டாகிராமில் எளிதாக நீங்கள் ஃபாலோவர்களை பெற்றுவிட முடியும் ஆனால் இதில் பிராண்ட் பிரமோஷன், ஒப்பந்தம் மூலம் தான் அதிக வருவாய் சாத்தியம். ஆனால் யூட்யூபில் தான் நீண்ட காலத்திற்கு ஒரு நிலையான வருவாயை பெற முடியும். எனவே இரண்டு தளத்தையும் சரியான முறையில் பயன்படுத்துவது தான் சிறந்தது.
உதாரணமாக 1 மில்லியன் வியூஸ் கொண்ட ஷார்ட்ஸ் என்றால் யூடியூப்பில் 5000 முதல் 30000 ரூபாய் வரை கிடைக்கும், ஆனால் இன்ஸ்டா ரீல்ஸ் என்றால் இதில் சொற்பமாக கூட கிடைக்காது, ஆனால் இதனை வைத்து நீங்கள் பிராண்ட்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications

