ஓரே நாளில் 10000 ஸ்கூட்டர்களை விற்பனை செய்த ஓலா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எலக்ட்ரிக் இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் தனது உற்பத்தி மற்றும் தரத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் பல உயர் அதிகாரிகள் வெளியேறிய நிலையில் தனது சமீபத்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டரான 'ஓலா எஸ்1' இன் 10,000 யூனிட்களை முன்கூட்டியே முன்பதிவு செய்யும் விண்டோ-வே இணையத்தில் திறந்தது.

ஓலா விற்பனை விண்டோ-வை திறந்த 24 மணி நேரத்திற்குள் 10,000 ஸ்கூட்டர்களையும் விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

 மில்லியன் கடன்.. பாப்ஸ்டார் லேடிகாகா திவால் ஆனது ஆனாரா? மில்லியன் கடன்.. பாப்ஸ்டார் லேடிகாகா திவால் ஆனது ஆனாரா?

ஓலா எலக்ட்ரிக்

ஓலா எலக்ட்ரிக்

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் 24 மணிநேரத்தில் 10000 வாகனங்களை விற்பனை செய்துள்ளது மட்டும் அல்லாமல், முன் பதிவு செய்யப்பட்ட இ-ஸ்கூட்டர்களுக்கான டெலிவரி செப்டம்பர் 7, 2022 முதல் இந்தியா முழுவதும் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

Ola S1 முன்பதிவுகள்

Ola S1 முன்பதிவுகள்

Ola S1 முன்பதிவுகளின் அடுத்த கட்ட முன்பதிவு விண்டோ இன்று செப்டம்பர் 2 ஆம் தேதி தொடங்கியது, மேலும் நிறுவனத்தின் Ola செயலி அல்லது அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாகனங்களை முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பவிஷ் அகர்வால்

பவிஷ் அகர்வால்

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பவிஷ் அகர்வால், புதிய மாடலான Ola S1 Pro உடன் ஒப்பிடும்போது பட்ஜெட்டு வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் குறைந்த விலையைக் கொண்டு புதிய Ola S1 ஐ வெளியிட்டார்.

99,999 ரூபாய்

99,999 ரூபாய்

ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான முன்பதிவுகளுக்கு, புதிய Ola S1 அறிமுக விலை ரூ.99,999 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. இது தவிர, ஓலா காக்கி எஸ்1 ப்ரோ என்ற லிமிடெட் எடிஷன் ஸ்கூட்டரின் விநியோகத்தையும் செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

3kWh பேட்டரி பேக்

3kWh பேட்டரி பேக்

புதிய Ola S1 ஆனது 3kWh பேட்டரி பேக்குடன் வருகிறது, மேலும் நிறுவனம் தரவுகள் படி 141 கிமீ driving range வழங்க ஏஆர்ஏஐ-சான்றிதழ் பெற்றுள்ளது. இ-ஸ்கூட்டர் மணிக்கு 95 கிமீ வேகத்தில் செல்லும் மற்றும் சிவப்பு, ஜெட் கருப்பு, பீங்கான் வெள்ளை, நீலம் மற்றும் திரவ வெள்ளி ஆகிய ஐந்து வண்ணங்களில் வழங்கப்படும்.

ஓலா ஸ்கூட்டர்

ஓலா ஸ்கூட்டர்

ஓலாவின் ஸ்கூட்டர்களுக்கு இருக்கும் மென்பொருளின் புதிய மூவ் ஓஎஸ் 3 இந்த ஆண்டுத் தீபாவளியன்று வெளியிடப்படும் என்றும் ஓலா எலக்ட்ரிக் அறிவித்துள்ளது. புதிய OS ஆனது மூட்ஸ், டிஜிட்டல் கீ ஷேரிங், ப்ராக்ஸிமிட்டி அன்லாக், மேம்படுத்தப்பட்ட ரீஜென் மற்றும் இ-ஸ்கூட்டரில் ஆவணங்கள் போன்ற அம்சங்களைப் பெறும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: ola electric ola ஓலா
English summary

Ola sells 10,000 Ola S1 scooters within 24 hours

Ola sells 10,000 Ola S1 scooters within 24 hours ஓரே நாளில் 10000 ஸ்கூட்டர்களை விற்பனை செய்த ஓலா..!
Story first published: Saturday, September 3, 2022, 20:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X