பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பிரதமர் மோடி அவர்களின் மேக் இன் இந்தியா திட்டத்தின் படி இந்தியாவில் உற்பத்திக்கான சாத்தியகூறுகள் அதிகரிக்க பாதுகாப்புத் துறையில் சுமார் 19 திட்டங்களுக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதில் புஞ்ச் லாய்ட் மற்றும் பாரத் போர்ஜே நிறுவனத்தின் திட்டங்கள் பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது குறிப்பிடதக்கது.

புதிய மத்திய அரசு பொறுப்பேற்ற உடன் பல எதிர்ப்புகளையும் எதிர்த்து பாதுகாப்புத் துறையில் 49 சதவீத அன்னிய முதலீட்டுக்கு ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் நாட்டில் பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியவில் முதலீடு செய்ய காத்துக்கொண்டு இருக்கிறது.

மத்திய அரசு ஒப்புதல்

மத்திய அரசு ஒப்புதல்

பாதுகாப்புத் துறையில் அன்னிய முதலீட்டுக்கு ஒப்புதல் அளித்த சில மாதங்களில் இந்திய நிறுவனங்கள் ஆர்வமுடன் திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் ஒப்புதல் அளித்தது. மத்திய அரசு இன்று மட்டும் பாதுகாப்புத்துறையில் தொழில் துவங்க விண்ணப்பித்த 19 நிறுவன அறிக்கைகளை ஒப்புதல் அளித்தது.

19 திட்டங்கள்

19 திட்டங்கள்

ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் டெக்னாலஜிஸ், பாரத் போர்ஜே, மஹிந்திரா டெலிபோனிக் இண்டிகிரேடெட் சிஸ்டம்ஸ், புஞ்ச் லாய்ட் இண்டஸ்டீரிஸ் லிமிடெட், மஹிந்திரா ஏரோ ஸ்டக்சர், டாடா அட்வான்ஸ் மினரல்ஸ் போன்ற 19 நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நிலுவையில் 14 நிறுவனங்கள்

நிலுவையில் 14 நிறுவனங்கள்

14 நிறுவனங்களின் தயாரிப்புகள் பாதுகாப்புத் துறையால் ஒப்புதல் பெறாத நிலையில் இந்நிறுவனங்களுக்கான உரிமம் வழங்குவதை தற்காலிகமாக தவிர்த்துள்ளது மத்திய அரசு.

உற்பத்தியில் மந்த நிலை

உற்பத்தியில் மந்த நிலை

சில மாதங்களுக்கு முன்பு இத்துறையில் ஒரு நிறுவனத்தை துவங்க வேண்டும் என்றால் இந்தியா நிறுவனம் மட்டுமே முதலீடு செய்யும் நிலையில் இருந்தது. இதனால் அன்னிய நிறுவனங்களின் பண உதவி மற்றுந் தொழிற்நுட்ப உதவி இல்லாமல் இத்துறை நிறுவனங்கள் உற்பத்தியிலும், வருவாய் பெருவதிலும் பன்தங்கியே இருந்தது.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீடு

மத்திய அரசு இத்துறையில் உற்பத்தியை பெருக்கவும், ஆயுதங்களை ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டு இத்துறையில் 49 சதவீதம் அளவிற்கு அன்னிய முதலீட்டுக்கு ஒப்புதல் அளித்தது. இதனால், இந்தியா நிறுவனங்கள் இத்துறையில் வெறும் 51 சதவீத பங்கு வைத்திருந்தால் மட்டுமே போதுமானது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Centre clears 19 defence projects, boosts Make in India campaign

Giving a push to the Make in India drive, the government cleared 19 defence proposals of various companies including Punj Lloyd and Bharat Forge that had been pending for the last few years.
Story first published: Wednesday, October 8, 2014, 17:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X