அவசர தேவைகளுக்கும்.. குடும்பத்தை நேசிப்பவர்களுக்கும்.. கிரிட்டிக்கல் இல்னஸ் பாலிசி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக இன்சூரன்ஸ் என்றாலே கிராமப்புறங்களில் இன்றளவும் ஒரு முதலீடாகத் தான் பார்க்கப்படுகிறது. எனினும் யார் எந்த மாதிரியான பாலிசியை எடுப்பது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

அதிலும் கிரிட்டிக்கல் இல்னஸ் பாலிசி என்பது பலருக்கும் தெரிவதே இல்லை. சரி வாருங்கள் அதனை பற்றித் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

 அவசர தேவைகளுக்கும்.. குடும்பத்தை நேசிப்பவர்களுக்கும்.. கிரிட்டிக்கல் இல்னஸ் பாலிசி..!

கேன்சர், இருதய நோய், பக்கவாதம், கிட்னி பிரச்சனை என பல தீவிர நோய்களுக்கான சிகிச்சைக்கு, இந்த கிரிட்டிக்கல் இல்னஸ் பாலிசிகள் மிக முக்கியமாக பயன்படுகிறது. .

இதில் உள்ள பிளஸ் பாயிண்ட் என்னவெனில் இந்த பாலிசி எடுத்தவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

இந்த பாலிசி எடுத்து 30 நாட்களுக்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மரணமடையாமல் இருந்தால், அவர்களுக்கு இந்த பாலிசி கவரேஜ் தொகை முழுவதும் கிடைக்கும்.

ஆனால் இதிலும் ஒரு சின்ன சிக்கல் உள்ளது. எல்லா ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் எல்லா நோய்களுக்கும் கவரேஜ் கொடுப்பதில்லை. ஆக பாலிசி எடுக்கும் முன்பே, அதனை தெளிவாக தெரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு பாலிசி எடுப்பது நல்லது. இந்த ரைடர் பாலிசியில் ஒரு முறை மட்டுமே க்ளைம் செய்ய முடியும். ஒரு முறை க்ளைம் செய்து விட்டால், மறுமுறை எந்த தீவிர நோய்களுக்கும் க்ளைம் செய்ய முடியாது.

பொதுவாக ஒரு விபத்தில் ஏற்படும் மரணத்திற்கு ஆயுள் காப்பீடுகள் கைகொடுக்கும். ஆனால் தீவிர பிரச்சனை, நோய்கள் இது மாதிரியான காரணங்களுக்காக உங்களுக்கு க்ளைம் செய்ய வேண்டும் எனில், இதுபோன்ற ரைடர் பாலிசி, அதாவது துணை பாலிசிகளை எடுப்பது நல்லது.

ஆக ஒரு பாலிசி எடுக்கும் போதே கொஞ்சம் பிரிமீயம் அதிகமானலும் பரவாயில்லை என்றால், இந்த துணை பாலிசியையும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இதனை எடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

இதில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில் பொதுவாக வருடா வருடம் நீங்கள், உங்கள் மெடிக்ளைம் பாலிசியினை புதுபிக்கணும். ஆனால் இதில் அப்படி இல்லை.

இந்தியாவில் சிறந்த கிரிட்டிக்கல் இல்னஸ் பாலிசி (2019 -2020)
HDFC ergo health optima plan
MAX bupa critical care plan
HDFC ergo critical illness policy
Edelweiss criticare + plan
HDFC life cancer care plan
Manipalcigna lifestyle peotection critical care plan

இந்த பாலிசிகள் பாலிசிஎக்ஸ்.காம் என்ற இணையத்தில் எடுக்கப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is critical illness insurance? pls check here other details

Health insurance policy is very common in the present day, but there are few severe life threatening diseases (like cancer, kidney failure etc) that do not get coverage under a basic health insurance policy. so insurance companies launched critical illness insurance policy. It provide coverage for specific diseases.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X