தொழிற்கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கான காரணங்கள் என்னென்ன..?

By D3pxkrmg
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு தொழிலை நடத்துவதற்குத் தீவிர அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் மிக முக்கியமாக பணம் தேவை. நீங்கள் இந்தத் தொகையை உங்கள் சேமிப்பிலிருந்தோ அல்லது ஒரு தொழிற்கடன் மூலமோ பெறலாம்.

 
தொழிற்கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கான காரணங்கள் என்னென்ன..?

இது ஒரு புதிய தொழில் தொடங்கவோ அல்லது ஏற்கனவே உள்ள தொழிலை விரிவுபடுத்தவோ இருக்கலாம். இன்று ஒரு கடனைப் பெறுவது குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் எளிமையான விண்ணப்ப நடைமுறைகள் காரணமாக சுலபமாகியுள்ளது.

இருப்பினும் உங்கள் தொழிற்கடனுக்கான விண்ணப்பங்கள் வங்கிகளால் பின்வரும் காரணங்களுக்காக நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

1. மோசமான முந்தைய கடன் பதிவுகள் (க்ரெடிட் ஹிஸ்டரி)

1. மோசமான முந்தைய கடன் பதிவுகள் (க்ரெடிட் ஹிஸ்டரி)

ஒருவருடைய க்ரெடிட் ஸ்கோர் எனப்படும் கடன் பெறுவதற்கான குறியீட்டு மதிப்பெண் உங்களுடைய கடன் பெறுவதற்கான தகுதியை நிர்ணயிக்கிறது. இது நீங்கள் வாங்கும் கடனை திரும்ப அடிப்பதில் எவ்வளவு திறன் உள்ளவர் என்பதைக் குறிக்கிறது. வங்கிகள் கடன் வழங்க உங்கள் முந்தைய தொழில் கடன் மற்றும் உங்கள் தனிப்பட்ட கடன்கள் பற்றிய விவரங்களை ஆய்வு செய்யும்.

உங்களுடைய தொழிற்கடன் தொடர்பான விவரங்கள் சரியாக இருந்தாலும், நீங்கள் க்ரெடிட் கார்டு நிலுவைகளையோ அல்லது மாதாந்திர தவணைகளையோ காட்டாமை அல்லது காலம் தாழ்த்திக் கட்டியிருந்தால் அது உங்கள் புதிய கடன் பரிசீலனையை பாதிக்கும். ஒரு மோசமான கடன் வரலாறு நீங்கள் வாங்கும் கடனை சரியாக நேரத்தில் திரும்பச் செலுத்த மாட்டீர்கள் என்பதையே குறிக்கும். இதனால் வங்கிகள் உங்களுக்குக் கடன் ஒப்புதல் அளித்தலைத் தடுக்கும்

2. பலவீனமான பணப்புழக்கம் (கேஷ் புளோ)
 

2. பலவீனமான பணப்புழக்கம் (கேஷ் புளோ)

ஒரு தொழில் தன்னுடைய தினசரி வர்த்தகப் பரிமாற்றங்களுக்காகவும் வாடகை மற்றும் சேவைகளை பெறவும் தேவையான அளவு பணத்தை இருப்பில் வைத்திருக்க வேண்டியது அவசியம். தொழிற்கடன் தவணைகளை திரும்பச் செலுத்தவும் அவசர தேவைகளுக்காகவும் பணம் வைத்திருக்கவேண்டியது அவசியமாகிறது.

எனவே ஒரு மந்தமான அல்லது பலவீனமான பணப்புழக்கம் தொழிலானது தன்னைச் சமாளிக்கவே சிரமப்படுவதையே குறிக்கும். இது போன்ற சூழ்நிலைகளில் எவ்வாறு தொழிற்கடன் தவணைகளை செலுத்த இயலும் என்ற கேள்வி எழவே செய்யும். எனவே பணப்புழக்கம் ஒரு தொழிற் கடனுக்கான விண்ணப்ப நிலையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

3. கடன் ஈட்டுறுதியின்மை அல்லது பற்றாக்குறை (கோலாட்டரல்)

3. கடன் ஈட்டுறுதியின்மை அல்லது பற்றாக்குறை (கோலாட்டரல்)

ஈட்டுறுதி என்பது கடன் தருபவரும் உத்தரவாதமாக நீங்கள் அளிக்கும் ஒரு சொத்து. ஒருவேளை நீங்கள் கடனை திரும்பச் செலுத்த இயலாமல் போனால், வாங்கி அந்தச் சொத்தை விற்று தன் நட்டத்தைப் போக்க முயலும். எனவே நீங்கள் தரும் ஈட்டுறுதியானது உங்கள் கடன் தொகைக்கு இணையாகவோ அல்லது அதிக மதிப்புள்ளதாகவோ இருக்க வேண்டும்.

அனைத்து வங்கிகளும் தொழிற்கடங்களுக்கு இந்த ஈட்டுறுதியை வலியுறுத்துகின்றன. நீங்கள் ஒரு தொழிலைத் தொடங்கினால் அதற்கு பெரும்பாலும் சொத்துக்கள் இருக்காது. இந்த சூழ்நிலையில் நீங்கள் உங்கள் தனிப்பட்ட சொத்துக்களை ஈட்டுறுதியாகத் தந்து கடனைப் பெற முடியும். இருப்பினும் அதனுடைய சந்தை மதிப்பு கடன் மதிப்பைக் காட்டிலும் குறைவாக இருக்குமானால் வங்கி உங்கள் விண்ணப்பத்தை நிராகரிக்கும்.

4. ஆவணங்கள் சரியின்மை

4. ஆவணங்கள் சரியின்மை

கடனுக்கு விண்ணப்பம் செய்யும் முன் அதற்குத் தேவையான அனைத்து ஆவணங்களும் சரியாக சேகரித்து வைத்துக் கொள்ளவேண்டியது மிகவும் அவசியம். தவறான அல்லது குறைபாடுகளுடன் கூடிய ஆவணங்களைத் தருவது கடன் விண்ணப்ப நிராகரிப்பிற்கான பொதுவாக காரணமாக உள்ளது.

தொழிற்கடனுக்கு நீங்கள் உங்களுடைய தொழிலுக்கான விவரமான திட்டத்தை சமர்ப்பிக்கவேண்டும்.

அது போக நீங்கள் உங்களுடைய நிதிநிலை அறிக்கைகளையும், வங்கிக் கணக்கு விவர அறிக்கையையும் வருமான வரி தாக்கல் செய்த விவரங்களையும் தரவேண்டும். வாங்கும் கடன் தொகையைக் கொண்டு நீங்கள் செய்யப்போவது என்ன என்பதையும் அந்தக் கடன் மூலம் எவ்வாறு வருமானம் வரப்போகிறது என்பதையும் நீங்கள் குறிப்பிடவேண்டும்.

5. அரசியல், பொருளாதார, சமூக மற்றும் தொழில்நுட்ப காரணங்கள் (PEST)

5. அரசியல், பொருளாதார, சமூக மற்றும் தொழில்நுட்ப காரணங்கள் (PEST)

இவை கட்டுப்படுத்த இயலாத வெளிச்சூழலில் நிலவும் காரணிகள். இவற்றில் ஏற்படும் மாற்றங்கள் உங்கள் தொழிலை பாத்திக்க கூடும். உதாரணமாக ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் புதிய தொழில்நுட்பம் போட்டி நிறுவனங்களைப் பாதிக்கும்.

தன்னுடைய பழைய தொழில் நுட்பத்தைப் புதுப்பிக்க நிறுவனம் கடன் கேட்டால் வங்கிகள் அதற்குத் தயங்கும். உயர்ந்துவரும் பணவீக்கம், அயல்நாட்டு முதலீட்டு மற்றும் வரிக் கொள்கைகளில் மாற்றம் வருடாந்திர மிதித்த திட்டங்கள் ஆகியவை கடன் தருவதை பாதிக்கக் கூடியவை ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: business loan
English summary

Reasons why business loan applications are rejected

Reasons why business loan applications are rejected
Story first published: Tuesday, October 25, 2016, 9:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X