எஸ்பிஐ, ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎப்சி வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கை திறப்பது எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அன்மை காலங்களில் வங்கி கணக்கு அறிக்கையினைப் பார்க்கும் போது எதற்கு என்ன கட்டணங்கள் பிடித்துள்ளார்கள் என்ற தெரியாத அளவிற்குக் கண்டப்படி வங்கி நிறுவனங்கள் ஒவ்வொரு சேவைக்கும் பிரித்துக் கட்டணங்களை வசூலிக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்காததற்காக வங்கிகள் பெறும் கட்டணமாகும்.

இவை மட்டும் தான் என்று பார்த்தால் வங்கி சேமிப்புக் கணக்குகளில் உள்ள இருப்பு தொகைக்கு வழங்கி வந்த வட்டி விகிதத்தினையும் குறைத்துவிட்டன. எனவே ஜீரோ பேலன்ஸ் வங்கி சேமிப்பு கணக்குகளை இந்தியாவின் முக்கிய அரசு மற்றும் தனியார் வங்கிகளில் திறப்பது என்று இங்கு விளக்கமாகப் பார்ப்போம்.

எதற்காக ஜிரோ பேலென்ஸ் கணக்கு?

எதற்காக ஜிரோ பேலென்ஸ் கணக்கு?

ஜீரோ பேலென்ஸ் சேமிப்பு கணக்கு என்பது முக்கியமாக ஏழைகள் மற்றும் குறைந்த அளவில் மட்டுமே வங்கி சேவைகளைப் பயன்படுத்துபவர்கள் மற்றும் வங்கி கணக்கை பயன்படுத்தாதவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகத் துவங்கப்பட்ட திட்டமாகும்.

எப்படி ஜிரோ பெலென்ஸ் கணக்கை யாரெல்லாம் துவங்கலாம்?

எப்படி ஜிரோ பெலென்ஸ் கணக்கை யாரெல்லாம் துவங்கலாம்?

ஜீரோ பேலென்ஸ் கணக்கை இவர்கள் தான் துவங்க வேண்டும் என்ற வரம்பு ஏதும் இல்லை. சாதரான தனிநபர் என யார் வேண்டும் என்றாலும் ஜிரோ பேலன்ஸ் கணக்கை துவங்கலாம். எஸ்பிஐ வங்கி ஜிரோ பேலன்ஸ் கணக்கை இணையதளம் மூலமாகவும் திறக்கலாம்.

நன்மைகள்

நன்மைகள்

ஜிரோ பேலென்ஸ் சேமிப்புக் கணக்கைத் திறக்க முக்கியமாக ஒரு ரூபாய் கூடத் தேவையில்லை. மேலும் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்க வேண்டும் என்ற அவசியம் ஏதும் இல்லை. தனிநபர் கணக்கு, ஜாயிண்ட் கணக்கு போன்ற சேமிப்பு கணக்குச் சேவைகள் அனைத்தும் கிடைக்கும்.

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

ஜிரோ பேலென்ஸ் சேமிப்பு கணக்கிற்கு எப்போதும் போல அனைத்து வகைச் சேமிப்புக் கணக்குகளுக்குப் பொதுவாக அளிக்கப்படுகின்ற 3.5 சதவீதம் வட்டி விகிதம் கிடைக்கும்.

டெபிட் கார்டு

டெபிட் கார்டு

ரூபே டெபிட் கார்டு வேண்டும் என்றாலும் கட்டணம் ஏதும் இல்லை. இதுவே விசா மற்றும் மாஸ்டர் போன்ற கார்டுகள் வேண்டும் என்றால் 10 முதல் 500 ரூபாய் வரை பயன்பாட்டுக் கட்டணம் செலுத்த வேண்டும்.

இணையதள வங்கி சேவை

இணையதள வங்கி சேவை

ஜிரோ பேலென்ஸ் சேமிப்பு கணக்கிற்கும் இணையதள வங்கி சேவை அனுமதிகள் அளிக்கப்படும். ஒருவேலைக் கணக்கை மூட வேண்டும் என்றாலும் கட்டணம் ஏதும் இல்லை.

எச்டிஎப்சி வங்கி

எச்டிஎப்சி வங்கி

இதுவே எச்டிஎப்சி வங்கியில் 15 நாட்களுக்குள் ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கை மூட வேண்டும் என்றால் 500 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. ஒரு வருடத்திற்குப் பிறகு கணக்கை மூடும் போது கட்டணம் ஏதும் இல்லை. ஆனால் எஸ்பிஐ வங்கியில் கணக்கை மூடுவதற்கான கட்டணம் ஏதும் இல்லை.

நினைவில் கொள்ள வேண்டியவை

நினைவில் கொள்ள வேண்டியவை

ஜிரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கை வைத்துள்ளவர்களால் அதே வங்கி நிறுவனத்தில் வேறு சேமிப்புக் கணக்கைத் திறக்க முடியாது. இதுவே பிற சேமிப்புக் கணக்குகள் திறந்தால் 30 நாட்களுக்குள் ஜிரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கை மூட வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to open a zero balance account with banks like SBI, ICICI and HDFC

How to open a zero balance account with banks like SBI, ICICI and HDFC
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X