இந்தியாவில் சிறந்த கடன் பரஸ்பர நிதி திட்டங்கள்..!

கடன் நிதிகள் தற்போது பிரபலமாகிவரும் நிலையில், மக்கள் நிரந்திர வைப்புநிதிக்கு மாற்றாக இதைப் பயன்படுத்த துவங்கிவிட்டனர். பொதுவாகவே, கடன் நிதி திட்டங்கள் நிரந்திர வைப்புநிதி திட்டங்களை விட அதிக லாபத்தைத் தரக்கூடியவை. ஏன் கடன் பரஸ்பர நிதி திட்டங்கள், சிறந்த முதலீட்டுத் திட்டங்கள் என்பதை என்பதை இங்கே காணலாம்.

கடன் பரஸ்பர நிதி என்றால் என்ன?

கடன் பரஸ்பர நிதி என்றால் என்ன?

கடன் பரஸ்பர நிதி புரிந்துகொள்ள மிகவும் எளிமையானது. பல்வேறு வைப்புநிதி மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம் வருமானம் திரட்டப்படுகிறது. மேலும் முதலீட்டுப் பணத்தைக் கடன் தந்து வட்டிப் பணம் பெறப்படுகிறது.

கடன் பரஸ்பர நிதியின் முக்கிய வருமானம் வட்டியின் மூலமே பெறப்படுகிறது. நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை

 

1.மாற்றப்பட்ட கால அளவு

1.மாற்றப்பட்ட கால அளவு

பத்திரங்களின் முக்கியத்துவத்தை நிர்ணயிப்பது கால அளவு. எடுத்துக்காட்டாக, 4ஆண்டு மாற்றப்பட்ட கால அளவிற்கு வட்டி விகிதம்1%ம், மொத்த சொத்து மதிப்பு 4%ம் அதிகரிக்கும்.

2. சராசரி முதிர்ச்சி

2. சராசரி முதிர்ச்சி

கடன் நிதி தொகுப்பில் பல்வேறு பத்திரங்கள் உள்ளன. எனவே சராசரி முதிர்ச்சி என்பது அனைத்துப் பத்திரங்களின் முதிர்ச்சியின் சராசரி ஆகும்.

முதிர்ச்சியின் போது கிடைக்கும் லாபம்:

முதிர்ச்சியின் போது கிடைக்கும் லாபம்:

பத்திரங்கள் முதிர்ச்சியடைந்த பின்பு கிடைக்கும் மொத்த வருமானத்தின் அளவீடு இதுவாகும். நீங்கள் நினைவில் கொள்ளவேண்டியவை

1) கால அளவு

1) கால அளவு

பணத்தை முதலீடு செய்ய விரும்பும் கால அளவை மதிப்பிடுவதன் மூலம் முதிர்ச்சியடைந்த பணத்தைப் பொறுத்து பார்க்கலாம்.

2) கிரிடிட் ரேட்டிங்

2) கிரிடிட் ரேட்டிங்

கடன் பரஸ்பர நிதியை முதலீடு செய்யும் பல்வேறு வழிகளில் பெருநிறுவன பத்திரங்கள் ஆபத்தானவை. அதே நேரம் அரசாங்க பத்திரங்கள் ஆபத்தில்லாதவை. முதலீடு செய்வதற்கு முன்பு கிரிடிட் ரேட்டிங்கை சரிபார்க்கவேண்டும். கடன் நிதியில் முதலீடு செய்வதற்குப் பயமாக இருந்தால், அதிகக் கிரிடிட் ரேட்டிங் உள்ள கடன் நிதியாகப் பார்த்து முதலீடு செய்யலாம்.

3)வட்டி விகிதம்

3)வட்டி விகிதம்

முதலில் வட்டிவிகிதங்களை ஆராய வேண்டும். வட்டிவிகிதம் அதிகமாக இருந்தால், குறைந்த கால முதலீட்டிற்குச் செல்வது உகந்தது. வட்டிவிகிதம் குறைவாக இருந்தால் நீண்ட கால முதலீடுகள் பலனளிக்கக் கூடியவை. கடன் பரஸ்பர நிதியில் உள்ள அபாயங்கள்

கடன் அபாயம்:

கடன் அபாயம்:

கடனை பெறுபவர்கள் அதைத் திருப்பிச் செலுத்த தவறும் போது இந்த அபாயம் நேருகிறது. எனவே முதலீடு செய்யும் முன்னர் அதில் உள்ள அபாயங்களைக் கவனத்தில் கொள்வது முக்கியம். ஏனெனில் குறைந்த கடன் தரம் லாபத்தை அதிகரிக்கும் அதே வேளையில் கடன் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

வட்டிவிகித அபாயம்:

வட்டிவிகித அபாயம்:

இது வட்டிவிகிதங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் பத்திரங்களின் விலையில் அது ஏற்படுத்தும் பாதிப்புகள் இதில் அடக்கம்.

எளிதில் பணத்தைத் திரும்பப் பெறுதலின் அபாயம்

எளிதில் பணத்தைத் திரும்பப் பெறுதலின் அபாயம்

இது பத்திரங்களை எவ்வளவு எளிதில் சந்தையில் விற்று முதலீட்டை திருப்பலாம் என்பது தான். எனவே முதலீட்டை இழக்காமல் சந்தையில் பத்திரங்களை விற்பதில் உள்ள கடினம் தான் இந்த அபாயம்.

1) குறுகிய கால நிதி

1) குறுகிய கால நிதி

- வைப்புநிதி பத்திரங்கள், வர்த்தகத் தாள்கள்,3-6 மாத முதிர்ச்சி பத்திரங்களில் முதலீடு

- குறைந்த அபாயம் உள்ளவை மற்றும் வட்டிவிகிதம் மாறும் போதும் அதிகப் பாதிப்புகள் இருக்காது.

- 6 முதல் 12 மாதங்கள் மட்டுமே முதலீட்டை வைத்திருக்க முடியும்.

- குறுகிய காலத்தில் அதிகமாக முதலீடு செய்து நிறைய லாபம் பெற வேண்டும் என நினைப்பவர்கள் கண்டிப்பாகக் குறுகிய கால நிதியில் முதலீடு செய்யலாம்.

 

2) கில்ட் நிதி

2) கில்ட் நிதி

- வேறுபட்ட முதிர்ச்சி காலமுள்ள அனைத்து வித அரசாங்க பத்திரங்களில் முதலீடு

- குறைந்த அபாயம் உள்ளவையாக இருந்தாலும் வட்டிவிகிதம் மாறும் போதும் அதிகப் பாதிப்புகள் இருக்கும்.

- 18 முதல் 24மாதங்கள் மட்டுமே முதலீட்டை வைத்திருக்க முடியும்.

- முதலீடுகளில் ஏற்கனவே அனுபவமுள்ள, அபாயங்களைப் பற்றிப் பயப்படாதவர்கள் இதில் முதலீடு செய்யலாம். முதலீட்டின் பாதுகாப்பை விட லாபம் முக்கியம் என்பவர்களுக்கு இது உகந்தது.

 

3) கடன் நிதி

3) கடன் நிதி

- குறைந்த கடன் தரமுள்ள இனங்களில் முதலீடு. ஆனால் அதிக லாபம் தரக்கூடியது

- குறைந்த வட்டிவிகித அபாயம் உள்ளவை. அதே நேரம் கிரிடிட் ரேட்டிங் குறைந்தால் மொத்த சொத்து மதிப்பில் அதிகப் பாதிப்புகள் இருக்கும்.

- 3 முதல் 5 ஆண்டுகள் மட்டுமே முதலீட்டை வைத்திருக்க முடியும்.

- அதிகமாக ஆபத்தில் முதலீடு செய்து நிறைய லாபம் பெற வேண்டும் என நினைப்பவர்கள் கடன் நிதியில் முதலீடு செய்யலாம்.

 

4) நிலையான முதிர்ச்சி நிதி

4) நிலையான முதிர்ச்சி நிதி

- நிதியின் கால அளவை போல முதிர்ச்சி அளவுள்ள இனங்களில் முதலீடு.

- குறைந்தது முதல் சராசரி அபாயம் உள்ளவை.

- 3 அல்லது அதைவிட அதிக ஆண்டுகள் முதலீட்டை வைத்திருக்க முடியும்.

- நிலையான கால அளவில் முதலீடு செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் இதில் முதலீடு செய்யலாம்.

 

 5) எளிதில் திரும்பப் பெறும் நிதி

5) எளிதில் திரும்பப் பெறும் நிதி

- எளிதில் பணத்தைத் திரும்பப் பெறும் இனங்களான வங்கிகளுக்கிடையேயான பணச்சந்தை அல்லது கருவூல பத்திரங்கள் முதலீடு.

- குறைந்த அபாயம் உள்ளவை.

- 3 மாதங்கள் வரை முதலீட்டை வைத்திருக்க முடியும்.

- வங்கி முதலீடுகளை விட அதிக லாபம் பெற வேண்டும் என நினைப்பவர்கள் இதில் முதலீடு செய்யலாம்.

 

6) மாறக்கூடிய மற்றும் வருமான நிதி

6) மாறக்கூடிய மற்றும் வருமான நிதி

- அரசாங்க மற்றும் பெருநிறுவன பத்திரங்கள் முதலீடு.

- சராசரி முதல் அதிக அபாயம் உள்ளவை.

- 3 முதல் 5 ஆண்டுகள் வரை முதலீட்டை வைத்திருக்க முடியும்.

- கடன் நிதியில் ஏற்கனவே நல்ல முதலீட்டு அனுபவம் உள்ள, அதேநேரம் வட்டி ஏற்ற இறக்கங்களைச் சமாளித்து அதிக லாபம் பெற வேண்டும் என நினைப்பவர்கள் இதில் முதலீடு செய்யலாம்.

 

 முடிவுரை

முடிவுரை

நிரந்திர வைப்புநிதியை விட அதிக லாபம் தரவல்லது இந்தக் கடன் பரஸ்பர நிதி திட்டங்கள். ஆனாலும் உங்களின் தேவைக்கு ஏற்ப மட்டுமே முதலீடு செய்யவேண்டும். பணத்தை இழந்துவிடுவோம் என்ற பயம் இருந்தால், குறைந்த அபாயமுள்ள கடன் நிதி அல்லது எளிதாக நிரந்திர வைப்புநிதியில் முதலீடு செய்யலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+