ஆர்கானிக் பண்ணை தொடங்க.. அமெரிக்க வேலையை விட்ட குஜராத் தம்பதிகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குஜராத் : நாளுக்கு நாள் இந்திய இளைஞர்கள் படித்து முடித்த பின்னர் வெளி நாட்டில் வேலை செய்யவே அதிகம் விரும்புகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் எதிராக அமெரிக்கா வேலைகளை விட்டுவிட்டு ஒரு தம்பதியினர், தற்போது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பங்களிப்பு செய்வதற்காகவும், தங்கள் கனவை நிறைவேற்றவும், இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் ஒரு ஆர்கானிக் பண்ணையை நடத்தி வருகின்றனர்.

நாடியாட் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த ஆர்கானிக் பண்ணை 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஆர்கானிக் பண்ணையில் கோதுமை, வாழைப்பழம், உருளைக்கிழங்கு, நாவல்பழம் என பல பயிர்களை உற்பத்தி செய்கிறார்களாம்.

ஆமாங்க.. அமெரிக்காவில் தொழில்நுட்ப வேலைகளை விட்டு வெளியேறிய பின்னர், அமெரிக்காவைச் சேர்ந்த இந்த குஜராத்தி வம்சத்தை சேர்ந்த தம்பதியினர், தங்களது தாயாகமான இந்தியாவில் விவசாய தொழிலில் இறங்க முடிவு செய்தனராம்.

ஆர்கானிக் சிப்ஸ் உற்பத்தியும் உண்டு!

ஆர்கானிக் சிப்ஸ் உற்பத்தியும் உண்டு!

இதற்காக இந்தியா வந்த பின்னர் ஒன்றரை மாத கால படிப்பை எடுத்த பிறகு, இந்த தம்பதியினர் ஆர்காணிக் வேளாண்மையை தொடங்கியுள்ளனராம். இங்கு ஆர்கானிக் பழங்கள் மற்றும் காய்கறிகளும் உற்பத்தி செய்வதோடு, ஆர்கானிக் வாழைப்பழ சிப்ஸ்கள் என பலவற்றை தயாரிக்கின்றனராம். இந்த சிப்ஸ் வகைகளும் ஆர்கானிக் எண்ணெய்யில் தயாரிக்கப்படுகின்றவாம்.

பயிர்கள் சுத்தமான தண்ணீரில் பாசனம்

பயிர்கள் சுத்தமான தண்ணீரில் பாசனம்

இது குறித்து இந்த தம்பதியினரில் விவேக் ஷா கூறுகையில், எங்கள் பண்ணையில் கம்பு, கோதுமை, உருளைக்கிழங்கு, வாழைப்பழம், பப்பாளி, நாவல்பழம், கொத்தமல்லி, கத்தரிக்காய் போன்ற பல பயிர்களை வளர்ப்பதாகவும் கூறியுள்ளார். நாங்கள் எங்கள் பண்ணையில் குளங்களையும் உருவாக்கி அங்கு சிறப்பு தாவரங்களையும் வளர்த்து வருகிறோம், இதன் மூலம் எங்களது பயிர்கள் சுத்தமான தண்ணீரில் பாசனம் செய்யப்படுகின்றன.

20 ஆயிரம் லிட்டர் திறன் கொண்ட மழை நீர் சேகரிப்பு!

20 ஆயிரம் லிட்டர் திறன் கொண்ட மழை நீர் சேகரிப்பு!

மேலும் எங்களது பண்ணையில் 20 ஆயிரம் லிட்டர் திறன் கொண்ட மழை நீர் சேகரிப்பு ஆலை உள்ளது. அது முழுமையாக நிரப்பப்பட்டால், எங்களது பண்ணையின் மூன்று ஆண்டுகளாகத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார்.

பூச்சி தாக்குதல் தான் மிகப்பெரிய சவால்

பூச்சி தாக்குதல் தான் மிகப்பெரிய சவால்

அதோடு ஆர்கானிக் விவசாயத்தில் மிகப்பெரிய சாவல்களில் ஒன்று பூச்சியிலிருந்து வரும் தாக்குதல்கள் தான். இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள, இந்த ஜோடி இடைபயிர் மற்றும் பல பயிர்களை ஏற்றுக் கொண்டது. இதை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க பயன்படுத்துகிறோம் என்றும், கூடுதலாக நாங்கள் துளசி மற்றும் எலுமிச்சை வகைகளையும் வளர்க்கிறோம் என்றும் விருந்தா கூறியுள்ளார்.

பண்ணை கழிவுகள் தான் உரம்

பண்ணை கழிவுகள் தான் உரம்

மேலும் இந்த பண்ணையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், வெளியேற்றப்படும் கழிவுகள் அனைத்தும் உரம் தயாரிக்கப் பயன்படுகின்றன. பின்னர் இந்த உரங்கள் பயிர்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் விவேக் மற்றும் விருந்தா தம்பதியர் சமையலறை தோட்டக்கலை மற்றும் ஆர்கானிக் வேளாண்மை குறித்த படிப்புகள் மற்றும் கருத்தரங்குகளை வழங்குவதால் இன்னும் பலர் இந்த ஆர்கானிக் வேளாண்மையை எடுத்துச் செல்கின்றனராம்.

இயற்கை வீடு!

இயற்கை வீடு!

இதோடு இந்த தம்பதியினர் இப்போது தங்கள் பண்ணைக்குள் மண் மாட்டுச் சாணம் மற்றும் கற்கள் போன்ற, முற்றிலும் இயற்கை பொருட்களைக் கொண்டு ஒரு வீட்டை உருவாக்க திட்டமிட்டுள்ளனராம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: gujarat
English summary

Gujarat couples quits us job to start organic farming in India

Gujarat couples quits us job to start organic farming in India
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X