என்னப்பா சொல்றீங்க.. இவ்வளவு வாராக்கடன்கள் தள்ளுபடியா.. அதுவும் எஸ்பிஐலயா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 220 பேரின் 76,600 கோடி ரூபாய் வாராக்கடனை தள்ளுபடி செய்துள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

 

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், பொதுவாக இந்த 220 பேரும் 100 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் வாங்கியபவர்கள் என்பது தான். எஸ்பியை கடன் வழங்குவதில் மட்டும் அல்ல, வாராக்கடன்களை தள்ளுபடி செய்வதிலும் முதலிடத்தில் உள்ளது.

அதிலும் கடந்த மார்ச் 31, 2019ன் நிலவரப்படி, எஸ்.பி.ஐ வங்கியில் வெறும் 33 பேரின் வாராக்கடன் தொகை மட்டும் 37,700 கோடி ரூபாய் என்றும், இது மீட்க முடியாமல் நிலுவையில் உள்ளதாகவும், இதில் ஒவ்வொருவரும் 500 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேலும் கடன்களைக் கொண்டுள்ளனர் என்றும் கூறியுள்ளது.

375 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..! 90 புள்ளிகள் சரிவில் தடுமாறும் நிஃப்டி..!

வசூல் செய்யமுடியாத மோசமான கடன்கள்

வசூல் செய்யமுடியாத மோசமான கடன்கள்

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் சி.என்.என் மற்றும் நியூஸ் 18 சேனல்களுக்கு வழங்கிய தகவலின் படி, வங்கி வாரியான வாராக்கடன்களை தள்ளுபடி செய்துள்ளதையும், அதிலும் 100 கோடி ரூபாய்க்கும் மேல் மற்றும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் கொண்ட அதிகமான கடன்கள் வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதையும் தெரிய வந்துள்ளது. இதில் சில தனியார் வங்கிகளும் உள்ளது தான் குறிப்பிடத்தக்க விஷயம்.

வனிக வங்கிகளில் தள்ளுபடி

வனிக வங்கிகளில் தள்ளுபடி

குறிப்பாக வணிக வங்கிகள் 100 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட கடன்களை தள்ளுபடி செய்துள்ளன என்றும், இதன் மொத்த மதிப்பு 2.75 லட்சம் கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி, 67,600 கோடி ரூபாய் வாராக்கடன்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 500 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட கடன்களை வாங்கியவர்களின், வாராக்கடன்களை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

980 பேர் கடன் கட்ட தவறியவர்கள்
 

980 பேர் கடன் கட்ட தவறியவர்கள்

இதே ஆர்.பி.ஐயின் அறிக்கையின் படி, 980 பேர் அதிகப்படியான கடன் வாங்கி, வாராக்கடன் பட்டியலில் உள்ளார்கள் என்றும், இவர்கள் ஒவ்வொருவரும் 100 கோடி ரூபாய்க்கு மேல் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்கள் என்றும் பட்டியலிட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவெனில், மொத்த கணக்கில் 220 பேர் எஸ்.பி.ஐயில் கடன் வாங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் ஒவ்வொருவர் கணக்கிற்கும் சராசரியாக 348 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இதே போல 71 பேரின் கணக்குகளின் மூலம் தலா 500 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட வாராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி தள்ளுபடி இவ்வளவு தான்

பஞ்சாப் நேஷனல் வங்கி தள்ளுபடி இவ்வளவு தான்

இதே போல் பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாராக்கடன்கள், கடந்த மார்ச் 31ம் தேதி வரையில், 94 பேரின் கடன்களை, அதுவும் தலா 100 கோடி ரூபாய்க்கு மேலான கடன்களை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த தொகையானது 27,024 கோடி ரூபாய் என்றும், இது சராசரியாக ஒரு கணக்கிற்கு 287 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது.

சிக்கலில் தனியார் வங்கிகள்

சிக்கலில் தனியார் வங்கிகள்

இதே ஐ.டி.பி.ஐ 71 கடனாளிகளின் 26,219 கோடி ரூபாய் வாராக்கடன்களை தள்ளுபடி செய்துள்ளது என்றும், இதே கனரா வங்கி 63 கணக்குக்கள் மூலம் 27,382 கோடி ரூபாய் வாராக்கடனை தள்ளுபடி செய்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இதில் கொடுமை என்னவெனில் தனியார் வங்கிகளிலும் இந்த தள்ளுபடி பட்டியலில் உண்டு. குறிப்பாக ஆக்ஸிஸ் வங்கியில் 43 பேரின் கடனும், இதே ஐசிஐசிஐ வங்கியில் 37 பேரின் மோசமான கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

State Bank of India written off bad loans worth Rs 76,600 crore, PNB also written off Rs.27,024cr

RTI query reaveals: State Bank of India written off bad loans worth Rs 76,600 crore, PNB also written off Rs.27,024cr
Story first published: Thursday, October 10, 2019, 16:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X