சீன பாக்ஸ்கான் தொழிற்சாலையில் கலவரம்.. தொழிலாளர்கள் வன்முறை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனாவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலையில், கொரோனா தொற்றைத் தடுக்கும் நோக்கில் கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் கிட்டத்தட்ட ஒரு மாதம் இத்தொழிற்சாலை இயங்கி வந்த பின்பு, தற்போது ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் மத்தியில் மோதல் ஏற்பட்டு உள்ளது.

 

சீனாவில் உள்ள இந்த ஆப்பிள் ஐபோன் தயாரிக்கும் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், இத்தொழிற்சாலை பாதுகாப்புப் பணியாளர்களுடன் மோதினர்.

சீனா

சீனா

சீனாவில் இருக்கும் Foxconn Technology Group ஆலையில் உள்ள தொழிலாளர்கள் புதன்கிழமை அதிகாலையில் தாங்கள் தங்குமிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்புக்காக இருந்த காவல் அதிகாரிகளைத் தாக்கினர். பாதுகாப்பு அதிகாரிகள் எண்ணிக்கை குறைவாக இருந்த காரணத்தால் சில நிமிடங்களில் மொத்தமும் தலைகீழாக மாறியது.

பாக்ஸ்கான் தொழிற்சாலை

பாக்ஸ்கான் தொழிற்சாலை

வெள்ளை உடையணிந்த காவலர்களின் மீது பாக்ஸ்கான் தொழிற்சாலை ஊழியர்கள் துள்ளிக் குதித்துத் தாக்கியதும், பலர் குச்சிகளால் தாக்கிய வீடியோ சீன சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது. சீனாவில் கொரோனா தொற்று அதிகமாகப் பரவி வரும் நிலையில், பல தொழிற்சாலைகள் ஊழியர்களை நிறுவனத்திலேயே தங்க வைத்து இயங்கி வருகிறது.

ஆப்பிள் ஐபோன்
 

ஆப்பிள் ஐபோன்

இந்த நடைமுறையைப் பல துறை சார்ந்த நிறுவனங்களும் செய்து வந்தாலும் ஆப்பிள் ஐபோன் தயாரிக்கும் இந்தத் தொழிற்சாலையில் இருந்து தான் சர்வதேச சந்தைக்குத் தேவையான பெரும்பகுதி கருவிகள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் இருக்கும் ஊழியர்களின் சில நாட்களுக்கு முன்பு தொழிற்சாலையை விட்டு பல தடைகளைத் தாண்டி வெளியேறினர்.

உள்ளூர் ஊழியர்கள்

உள்ளூர் ஊழியர்கள்

இதைச் சமாளிக்கப் பாக்ஸ்கான் நிர்வாகம் உள்ளூரில் பலரை பணியில் அமர்த்தித் தொழிற்சாலையை இயக்கி வந்த நிலையில், நிர்வாகம் கொரோனா தொற்று உடையவரை ஊழியர்கள் தங்கம் விடுதியில் சேர்த்த காரணத்தால் ஊழியர்கள் தொழிற்சாலையைப் பாதுகாப்பு அதிகாரிகள் தாக்கினர் என்று தகவல் வெளியானது.

 மோதல்கள்

மோதல்கள்

இந்த நிலையில் இந்த மோதல்களை விளக்கும் வண்ணம் பாக்ஸ்கான் தொழிற்சாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சம்பளம் மற்றும் தொழிற்சாலையில் ஊழியர்கள் தங்கம் வசதிகள் மோசமடைந்த காரணத்தால் போராட்டம் வெடித்துள்ளது என விளக்கம் கொடுத்துள்ளது.

 பாக்ஸ்கான் நிறுவனம்

பாக்ஸ்கான் நிறுவனம்

தைவான் நாட்டைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களைத் தயாரிக்க வேண்டும் என்பதற்காகச் சீனாவில் பெரும் தொழிற்சாலையை அமைத்து இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் சுமார் 200000 அதிகமான ஊழியர்கள் பணியாற்றும் காரணத்தால் Zhengzhou பகுதியை ஐபோன் சிட்டி எனச் செல்லமாக அழைக்கப்படுவது வழக்கம்.

 சீன அரசு

சீன அரசு

இந்த நிலையில் சீனாவில் கொரோனா தொற்று அதிகமான நிலையில் சீன அரசு ஒவ்வொரு பகுதியிலும் ஜீரோ லாக்டவுன் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தப் பிரச்சனையில் இருந்து தப்பிக்கவும் Zhengzhou பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் குறையும் வரையில் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களைத் தொழிற்சாலைகளிலேயே தங்க வைத்து closed loop அடிப்படையில் இயங்கி வந்தது.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து உலகில் பெரும்பாலான மக்களுக்கு அளிக்கப்பட்டாலும் கொரோனா தொற்று இங்கொன்றும், அங்கொன்றுமாகத் தினமும் பாதிப்புகள் பதிவாகித் தான் வருகிறது. ஆனால் சீனாவில் தற்போது நடக்கும் விஷயங்கள் உலக நாடுகளைப் பயமுறுத்துகிறது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றுக்கான லாக்டவுன் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கி இருந்தாலும், சீனாவில் மட்டும் கொரோனா தொற்றுக் காலத்தில் கடுமையாக விதிக்கப்பட்டு இருந்த ஜீரோ கோவிட் பாலிசியைத் தொடர்ந்து பயன்பாட்டில் வைத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China Foxconn iPhone factory Violent eruptS between employees and security officers

China Foxconn iPhone factory Violent eruptS between employees and security officers
Story first published: Wednesday, November 23, 2022, 20:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X