நம்முடை பெற்றோர்கள் பாலோ செய்த பார்மூலா எல்லாம் இப்போ செட் ஆகாது..!

நம்முடை பெற்றோர்கள் பாலோ செய்த பார்மூலா எல்லாம் இப்போ செட் ஆகாது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: நம் பெற்றோர் மற்றும் அவர்களது பெற்றோர் பின்பற்றிய நிதி விதிகள் இன்றைய காலகட்டத்திற்குச் சற்றும் பொருந்தாது. ஸௌரின் பாரிக் முந்தைய தலைமுறை பின்பற்றிய பாரம்பரிய நிதி விதிகளை நன்கு ஆய்ந்தறிந்து புதிய தலைமுறையின் நிதி அறிவு ஏன் இப்பொழுது பொருத்தமானதாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

வீடு

வீடு

முன்பு, வீடு ஒரு நல்ல நிதி பாதுகாப்பு மற்றும் ஒரு நீண்டகாலப் பொருளீடாகக் கருதப்பட்டது. இன்று வீடு வாங்குவது ஒரு பெரிய இஎம்ஐ சுமையாகவே இருக்கிறது.

வீட்டுக்கடனைச் செலுத்துவது பணியில் ஆரம்பக்கால வாழ்வில் மற்ற நோக்கங்களில் சமரசம் செய்ய வைக்கிறது. மேலும் அது உங்களை ஒரே இடத்தில் கட்டிப்போட்டு உங்கள் பணி வாழ்க்கையைப் புண்படுத்துகிறது. பின்னர் அதில் அதிகப் பராமரிப்புச் செலவுகள் வேறு உள்ளது.

அவுட்: ஒரு வீடு வாங்குவது
இன் : வீடு வாடகைக்கு எடுப்பது

 

முதலீடு

முதலீடு

முந்தைய தலைமுறை மூலதனத்தைப் பாதுகாக்கவும், ஒரு ஏற்புடைய வட்டிக்காகவும் வருங்கால வைப்பு நிதி மற்றும் வைப்புகளில் பணத்தைச் சேமித்தனர். இன்று இதுபோன்ற பெரும்பாலான திட்டங்களின் வரிக்குப்பின் வருமானம் பணவீக்கத்தில் அடிபட்டுப் போகிறது.

ஓய்வு போன்ற நீண்ட கால இலக்குகளுக்கு, பெருமளவு ஒதுக்கீடு செய்து ஒரு வரி-திறமையான முறையில் பணவீக்கத்தை மிஞ்சும் வகையில் பணம் சம்பாதிக்க வேண்டும் .

அவுட்: உத்தரவாத வருமானத்தைப் பார்க்கவும்
இன்: உயர் வருமானத்தைப் பார்க்கவும்

 

சேமிப்பு

சேமிப்பு

முன்னதாக, உங்கள் வருமானத்தில் சுமார் 10%,சேமிப்பது எதிர் காலத்திற்குப் போதுமானதாகக் கருதப்பட்டது. இப்போது, நீங்கள் நிறையச் சேமிப்பது மட்டுமில்லாமல் உங்களின் வயதான காலத்தில் வறுமையிலிருந்து பாதுகாக்க சேமிப்பை சிறந்த முறையில் முதலீடு செய்து செல்வம் ஈட்ட வேண்டும்.

இதனைச் செயல் படுத்த சரியான வழி முதலில் முதலீடு செய்து பின்னர்ச் செலவு செய்வதுதான்.

அவுட்: சம்பாதிப்பதில் 10% சேமிப்பது
இன்: 10% போதாது

 

போக்குவரத்து

போக்குவரத்து

முன்னதாக, ஒரு கார் வைத்திருக்கும் அந்தஸ்தின் அடையாளமாகவே கருதப்பட்டது. எரிபொருள் கூட மலிவாக இருந்தது. இன்று, ஒரு திறமையான பொது போக்குவரத்து முறைமை மற்றும் பயன்பாட்டைச் சார்ந்த டாக்சி சேவைகள் ஒரு கார் போன்ற ஒரு தேய்மான சொத்து வைத்திருப்பது தேவையற்றது.

நீங்கள் மேலும் அதிக எரிபொருள் பில்கள், வாகன பராமரிப்பு, போக்குவரத்தில் ஓட்டுவது அல்லது பார்க்கிங் இடத்தைத் தேடும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

அவுட்: ஒரு கார் வாங்குவது
இன்: வாடகை கார் எடுப்பது

 

காப்பீடு

காப்பீடு

எண்டோமெண்ட் பாலிசிகள் காப்பீடு மற்றும் முதலீடு சேர்ந்த ஒரு கலவையை வழங்க வேண்டும். ஆனால் அவை உண்மையில் இரண்டையும் வழங்குவதில்லை.

டேர்ம் காப்பீடு குறைந்த கட்டணம் மற்றும் குறைந்த பிரீமியத்தில் அதிகப் பாதுகாப்பு வழங்கும் காப்பீடாகும். அது வருமானம் வழங்காததினால் ஒரு செலவினமாகக் கருதப்படுகிறது.

அவுட்: ஒரு மானியம் திட்டத்தை வாங்குவது
இன் : டேர்ம் திட்டத்தை வாங்குவது

 

தங்கம்

தங்கம்

விழிப்புணர்வு குறைவு மற்றும் விருப்பங்களின் பேரில் முந்தைய தலைமுறை தங்கம் வாங்குவதற்குப் பெருமளவு தொகையை முதலீடு செய்தனர்.

இன்று, தங்கப் பத்திரங்கள், தங்கம் மற்றும் தங்க ஈடிஃப் அல்லது பரஸ்பர நிதிகளை விட முன்னிற்கின்றன.

அவுட்: தங்கம் நகைகள் வாங்குவது
இன்: தங்கம் பத்திரங்கள் வாங்குவது

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Six financial rules followed by your parents have changed over the years: Find out which

Six financial rules followed by your parents have changed over the years: Find out which
Story first published: Tuesday, April 4, 2017, 14:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X