பிஎஃப் கணக்குகளை புதுப்பிக்க ஆன்லைன் சேவை துவக்கம்!!!: இபிஎஃப்ஓ

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிஎஃப் கணக்குகளை புதுப்பிக்க ஆன்லைன் சேவை துவக்கம்!!!: இபிஎஃப்ஓ
பணி ஓய்வு நிதி நிர்வாகியான இபிஎஃப்ஓ (EPFO), நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடருக்குப் பின், 5 கோடிக்கு மேற்பட்ட சந்தாதாரர்களுக்கு புதிக்கப்பட்ட கணக்கு அறிக்கைகளை ரியல் டைம் அடிப்படையில் ஆன்லைனில் அனுப்பி வைக்க உள்ளது.

தற்போது, இபிஎஃப்ஓ, ஒவ்வொரு நிதியாண்டின் செப்டம்பர் மாதத்தில், அக்கவுன்ட் பற்றிய தகவல்கள் அடங்கிய வருடாந்தர பிஎஃப் (PF) கணக்கு அறிக்கைகளை அளித்து வருகிறது.

இந்த புதிய வசதியின் மூலம், சந்தாதாரர்கள் தங்கள் புதிப்பிக்கப்பட்ட கணக்குகளைப் பார்த்துக் கொள்வதோடு அவற்றை பிரின்ட்-அவுட்களாக எடுத்து தங்கள் கோப்புகளில் ஆவணங்களாக பத்திரப்படுத்தியும் கொள்ளலாம்.

"சந்தாதாரர்கள் தங்கள் கணக்குகளை ஆன்லைன் ரியல் டைம் அடிப்படையில் பார்த்துக் கொள்ளவும், தங்கள் புதிப்பிக்கப்பட்ட கணக்குகள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளவும் வாய்ப்பளிக்கக்கூடிய இந்த ஆன்லைன் சேவையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம்." என்று இபிஎஃப்ஓவின் உயர் அதிகாரி ஒருவர் இந்த அதிகாரப்பூர்வமான தகவலை உருதி செய்துள்ளார்.

மேலும் அவர், இந்த வசதியை அறிமுகப்படுத்துவதற்கு தேவையான காலத்தை வழங்கும்படி இபிஎஃப்ஓ, தொழிலாளர் நலத்துறை அமைச்சரான ஸிஸ் ராம் ஓலாவிடம் கேட்டுக் கொண்டுள்ளர். மழைக்காலக் கூட்டத்துக்குப் பின் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்பொழுது, லைவ் அக்கவுன்ட் ஹோல்டர்களுக்கு மட்டுமே இந்த ஆன்லைன் சேவை வழங்கப்படவுள்ளது. மேலும் தொடர்ந்து 36 மாதங்களுக்கு எவ்வித பங்களிப்பும் இல்லாமல் இருக்கக்கூடிய அக்கவுன்ட்களை, இபிஎஃப்ஓ இயங்கா அக்கவுன்ட்களாக மாற்றி விடுகிறது.

தற்போதைய வழக்கப்படி, இபிஎஃப்ஓ சந்தாதாரர்களுக்கு வருடத்துக்கு ஒரு முறை பிஎஃப் ஸ்லிப்புகளை வழங்கி வருகிறது. உதாரணத்திற்கு, இபிஎஃப்ஓ 2012-2013 வருடத்துக்கான பிஎஃப் ஸ்லிப்பை சந்தாதாரர்களுக்கு 2013 செப்டம்பர் 30 ஆம் தேதி வழங்க வேண்டும்.

இபிஎஃப்ஓ, சந்தாதாரர்களுக்கு நேரடியாக பிஎஃப் ஸ்லிப்புகளை வழங்குவதில்லை, அதனால் சில சமயங்களில் அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மாறாக, இந்த ஸ்லிப்புகளை நிறுவனங்களிடம் கொடுத்து அவர்களின் ஊழியர்களுக்கு விநியோகிக்கும் படி கேட்டுக் கொள்கிறது.

ஒரு மூத்த அதிகாரி கூறுகையில், "இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பின், வருடத்திற்கு ஒரு முறை பிஎஃப் ஸ்லிப்புகளை வழங்கும் பழக்கத்தை நிறுத்தி விட்டு, வெப்சைட்டிலிருந்து அதனை டவுன்லோட் செய்து கொள்ளும்படி சந்தாதாரர்களை கேட்டுக் கொள்ளப்போகிறோம்." என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

EPFO to launch online facility to view updated accounts

EPFO is all set to launch a facility to provide online updated account statements on real time basis for 5 crore subscribers soon after the Monsoon session.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X