இந்த நிறுவனத்திற்கு இப்படி ஒரு பெயரா!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: பெயரில் என்ன இருக்கிறது? என்றார் வில்லியம் ஷேக்ஸ்பியர், அது பல வருடங்களுக்கு முன்பு. ஆனால் இன்றைய காலகட்டத்தில் கேஎஃப்சி தனது நிறுவனத்தின் பெயரை வேறொன்றாக மாற்றினால் என்ன ஆகும் என்று சற்று சிந்தித்து பாருங்கள். அது நிறுவனத்தின் வணிகத்தில் நிச்சயம் பாதகமான விளைவை ஏற்படுத்திருக்கும். ஒரு பெயரின் சக்தி என்பது அதுவே!

ஒரு இணைய தள பக்கத்தை க்ளிக் செய்யும்போதோ அல்லது சாதாரணமாக தெருவில் இறங்கி நடக்கும் போதோ காணப்படும் நிறுவனங்களின் பெயர்கள் அழகாக தோன்றலாம் ஆனால் நினைவில் வைத்து கொள்வதில் சிரமம் ஏற்படுமெனில் மக்கள் விரைவில் மறந்து விடுவர். இதன் காரணமாகவே நமது காலத்தில் சில வெற்றிகரமான நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் முழு பெயரை சுருக்கி சுருக்க பெயர்களாக பயன்படுத்துகின்றன.

உதரணமாக கென்டக்கி ப்ரைடு சிக்கன் நிறுவனம் பற்றி உங்களுக்கு தெரியுமா?? அத்தாங்க நாம் ரசித்து ரூசித்து சாப்பிடும் கேஎஃப்சி-யின் உண்மையான பெயர். இந்நிறுவனம் தனது முழு பெயரைக் கொண்டு உலகம் முழுவதும் கடையை விரித்திருந்தால் அதன் நிலை என்ன?? (தலையில் துண்டு தான்). இதுபோல உலகில் பல நிறுவனங்கள் பெயரை மாற்றி உலகபுகழ் பெற்றுள்ளது. அப்படிபட்ட சில நிறுவனங்களை நாம் இங்கு பார்போம்.

ஐபிஎம்

ஐபிஎம்

1911-ல் நிறுவப்பட்ட தொழில் நுட்ப மற்றும் ஆலோசனை நிறுவனமான இது கம்யூட்டிங் டேபுலேட்டிங் ரெகார்டிங் கம்பெனி என்று அறியப்பட்டது. கேட்பதற்கே சலிப்பாக தோன்றுகிறது அல்லவா! இந்த சலிப்பை நிறுவனரும் கூட உணர்ந்து, அதன் வளர்ந்து வரும் வணிகத்திற்கு பொருத்தமாக பெயர் மாற்றம் செய்தார். கம்யூட்டிங் டேபுலேட்டிங் ரெகார்டிங் கம்பெனி, சிடிஆர் என்று அறியப்பட்ட இந்நிறுவனம் 1924இல் இண்டெர்நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஐபிஎம் என்று அறியப்படுகிறது.

அமுல்

அமுல்

இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான கூட்டுறவு வணிக நிறுவனம் இது. அமுல் குஜராத்தில் உள்ள ஆனந்த் குடியிருப்பில் அமைந்துள்ளது. அமுல் தான் தோன்றிய இடத்தின் பெயரான ஆனந்த் என்பதையும் மற்றும் சம்ஸ்கிருத சொல்லான அமுல்யா (மதிப்பிட முடியாதது) என்பதையும் இணைத்து கொண்டுள்ளது. கூட்டுறவு வணிகம் தான் அமைந்துள்ள இடமான ஆனந்த் என்ற பெயரை கொண்டு ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெட் என்று அழைக்கப்பட்டது, நிறுவனத்தின் முழு பெயரும் அதுவே! அமுல் இந்தியாவில் உள்ள முன்னணி உணவு பொருள் தயாரிக்கும் பிரண்ட்களில் ஒன்றாகும்.

ஹெச்எம்வி

ஹெச்எம்வி

பிரிட்டிஷை சார்ந்த பொழுதுபோக்கு மற்றும் சில்லறை வணிகத்தில் ஈடுபடும் நிறுவனமான இது பேஷன், இசை, டிக்கெட், இதழ்கள், வீடியோ கேம்கள், சினிமா மற்றும் புத்தகங்கள் போன்ற பிற விஷயங்களின் மேம்பாடுகளிலும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் பெயரை ப்ரான்சிஸ் பர்ரௌட் என்று இருந்தது பின்பு இந்நிறுவனத்தை கிராமபோன் நிறுவனம் கைபற்றியது.

ஹெச்டிசி

ஹெச்டிசி

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சிறிய கணினி என்று சொல்லப்படுகிற டேப்லட்கள் ஆகியவற்றின் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஹெச்டிசி நிறுவனம் 1997இல் நிறுவப்பட்டது. நோட்புக்குகள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த இந்த நிறுவனம் பிறகு படி படியாக முன்னேறி தொடுதிரை போன்கள் தயாரிப்பை தொடங்கியது.இது ஆரம்பத்தில் ஹை - டெக் கம்ப்யூட்டர் கார்ப்பரேஷன் என்று அழைக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் முழு பெயரான இதிலிருந்தே நிறுவனத்தின் பெயர் ஹெச்டிசி என்று சுருக்கி அறியப்பட்டது. தற்போது நிறுவனம் தனக்கு ஹெச்டிசி கார்ப்பரேஷன் என்று பெயரிட்டு அழைத்து கொள்கிறது.

டிஹெச்எல்

டிஹெச்எல்

எக்ஸ்ப்ரெஸ் லாஜிஸ்டிக்ஸ் சேவைகளில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமான இது டாச்சிஸ் போஸ்ட் -ஆல் 2002- ல் கைப்பற்ற பட்ட நிறுவனமான இது தற்போது டிஹெச்எல் எக்ஸ்ப்ரெஸ்ஸ் என்று அழைக்கப்படுகிறது. வளர்ந்து வரும் தொழில் முனைவோர்களான லாரி ஹில்ப்லோம், அட்ரியன் டால்சே, மற்றும் ராபர்ட் லின் ஆகிய மூவரினால் டிஹெச்எல் 1969 - ல் தொடங்கப்பட்டது. இவர்கள் மூவரின் குடும்ப பெயரிலுள்ள முதல் எழுத்தை ஒன்றிணைத்து பார்க்கும் போது டால்சே, ஹில்ப்லோம், லின் ( டிஹெச்எல்) என்று இந்நிறுவனம் அறியப்பட்டது. தற்போது கடல் மற்றும் வான் மார்க்க அஞ்சல் துறையில் இந்நிறுவனமே முன்னணியில் உள்ளது.

கேள்வி

கேள்வி

கடைசி பக்கத்தில் ஒரு கேள்வி உள்ளது விடை தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்..

விப்ரோ

விப்ரோ

விப்ரோவின் வணிக ஆர்வங்கள் தகவல் தொழில்நுட்பம், அவுட்சோர்சிங், ஆலோசனை, சுகாதார மற்றும் உள்கட்டமைப்பு பொறியியல் ஆகிய துறைகளிலிருந்து வேறுபட்டதாகும். 1949 டிசம்பர் 29 இல் முஹமது ஹசீம் பிரேம்ஜியால் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் வனஸ்பதி, காய்கறி, நெய் மற்றும் தாவர எண்ணெய் ஆகியவற்றின் உற்பத்தியில் கவனம் செலுத்தியது. இந்நிறுவனத்திற்கு வெஸ்டேர்ன் இந்தியா வெஜிடபிள்ஸ் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் என்று பெயரிட பட்டது. இந்நிறுவனத்தின் லோகோ சூரிய காந்தி பூ ஆகும் இது தற்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் பெயர் தற்போது சுருக்க பட்டு சுருக்க பெயராக பயன்படுத்த பட்டு வருகிறது.

3எம்

3எம்

தயாரிப்பு தொகுப்பு நிறுவனமான இது மின்னணு பொருள், பசைகள், மருத்துவ பொருட்கள் மற்றும் செயல்படாத நெருப்பு பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை தயாரிப்பில் ஈடுபடுகிறது. இந்நிறுவனம் 1902 -ல் மின்னிசோடாவில் சுரங்க துறை வணிகம் மேற்கொள்ளும் நிறுவனமாக தொடங்கப்பட்டது. ஆனால் சுரங்க துறையில் தனது வெற்றியை பதிவு செய்ய தவறி விட்டது. இந்நிறுவனம், தான் தோன்றிய இடத்தின் பெயரையும் தயாரிப்புகளையும் இணைத்து தன் பெயரை கைப்பற்றியது. நிறுவனந்தின் முழு பெயர் மின்னஸோடா மைனிங் அன்ட் மன்யூபாக்சாரிங் கம்பனியை 3எம் என்று சுருக்கமாக அழைக்கப்பெருகிறது.

கேஎஃப்சி

கேஎஃப்சி

இது ஃப்ரைட் சிக்கன் தயாரிப்பில் தனித்துவம் பெற்ற பன்னாட்டு துரித உணவகம். உலகம் முழுவதும் உள்ள பெரிய உணவகங்களில் இரண்டாவது பெரிய நிறுவனமாகும். பொருளாதார மந்த நிலாயின் போது ஹார்‌ல்யான்ட் ஸார்லாண்ட்ஸ் என்பவரால்,கென்டகி என்னுமிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சில்லறை விற்பனையில் ஈடுபடும் நிறுவனமான இது தான் தோன்றிய இடத்தின் பெயரையும் தனது தயாரிப்பான ஃப்ரைட் சிக்கன் என்பதையும் இணைத்து கேஎஃப்சி என்ற பெயரை கொண்டுள்ளது.

எஸ்ஏபி

எஸ்ஏபி

ஐபிஎம் நிறுவனத்தில் பணி புரிந்த பொறியாளர்கள் அடங்கிய குழு ஒன்று ஒரு நிறுவனத்தின் மென்பொருள் செயல் திட்டத்தில் ஈடுபட்டிருந்த போது அந்த செயல் திட்டத்தை நிறுத்துமாறு ஐபிஎம் நிறுவனத்தால் அறிவுறுத்தப்பட்டனர். அந்த குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள் ஐபிஎம் நிறுவனத்திலிருந்து வெளியேறி சிஸ்டம்ஸ், அப்பிலிகேஷன் அன்ட் ப்ராடக்ட்ஸ் இன் டேட்டா பிராஸசிங் என்று மாற்றம் பெற்றது.

ஏடி&டி

ஏடி&டி

முன்னணி அமெரிக்க தொலைதொடர்பு நிறுவனமான இது, மொபைல் தொலைபேசி, நிலையான தொலைபேசி மற்றும் பிராட் பேன்ட் சேவைகள் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தி வருகிறது. பங்கு சந்தையில் உலக அளவில் இது 21வது பெரிய நிறுவனமாகும். அமெரிக்கன் டெலிபோன் மற்றும் டெலிகிராப் என்றே இது அழைக்கப்பட்டது. தற்போது இது ஏடி&டி என்று அழைக்கப்பட்டு புகழ் பெற்ற ஏடி&டி லோகோ -வினை பயன்படுத்தி வருகிறது.

இதோ கேள்வி

இதோ கேள்வி

இந்த படத்தில் இருப்பவர் யார் என்று தெரியுமா?? 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Do You Know The Full Names of These Famous Companies?

“What’s in a name?” asked William Shakespeare. That was ages ago. Just think—what will happen if KFC changed its name to something else today? It certainly will have an adverse effect on the business of the company. That’s the power of a name.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X