யெஸ் பேங்க் நெருக்கடி.. தப்பி பிழைத்த எல்ஐசி.. காரணம் இது தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எந்தவொரு அவசர தேவையாகட்டும், நெருக்கடி நிலையில் அரசின் மற்றொரு கஜானாவாக இருப்பது எல்ஐசி தான். இது தவிர முடங்கி போன பல பொதுத்துறை நிறுவனங்களை புத்துயிர் பெற வைப்பதிலும் எல்ஐசியின் பங்கு இருந்து வருகிறது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறையே சேர்ந்த காப்பீட்டு நிறுவனமாக இருந்தாலும், அவ்வப்போது முதலீட்டாளராகவும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் எல்ஐசி சமீப காலமாக வங்கி துறையிலும் தனது காலடியை பதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஐடிபிஐயில் முதலீடு

ஐடிபிஐயில் முதலீடு

முன்னதாக மிகுந்த வாரக்கடன் பிரச்சனையினால் தவித்து வந்த ஐடிபிஐ வங்கியில் முதலீடு செய்தது எல்ஐசி. அப்போதே அது மக்களின் பணம். அது தொடர்ந்து நஷ்டம் கண்டு வரும் ஒரு வங்கியில் முதலீடு செய்கிறது எல்ஐசி என்ற பிரச்சனைக்கெல்லாம் ஆளானது. இந்த நிலையில் தற்போது பலமான நிதி நெருக்கடியில் உள்ள ஆர்பிஐயின் கட்டுப்பாட்டில் இருக்கும் யேஸ் பேங்கில் முதலீடு செய்யப்போவதாக செய்திகள் வெளியானது.

எல்ஐசி முதலீடு செய்ய வாய்ப்பில்லை

எல்ஐசி முதலீடு செய்ய வாய்ப்பில்லை

அதிலும் எஸ்பிஐயும், எல்ஐசியும் இணைந்து 49% பங்குளை வாங்கலாம் என்றும் கூறப்பட்டது. இது மக்கள் மனதில் சற்று கவலையை ஏற்படுத்தியது என்றே கூறலாம். ஆனால் இதற்கெல்லாம் சற்று ஆறுதல் கொடுக்கும் விதமாக எல்ஐசி யெஸ் பேங்கில் முதலீடு செய்ய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. பிசினஸ் டுடேவில் வெளியான அறிக்கையின் படி, எஸ்பிஐயின் தலைவர் ரஜ்னிஷ் குமார், எந்தவொரு முதலீட்டாளரும் ரிசர்வ் வங்கியின் வரம்புப் படி 10% பங்குதாரர்களின் வரம்பை கடைபிடிக்க வேண்டும்.

யெஸ் பேங்கில் ஏற்கனவே முதலீடு

யெஸ் பேங்கில் ஏற்கனவே முதலீடு

மேலும் எல்ஐசி ஏற்கனவே யெஸ் பேங்கில் முதலீட்டாளார் என நான் நினைக்கிறேன். ஆனால் அனைவரையும் நான் வரவேற்கிறேன். எனினும் தற்போது வரை நான் எல்ஐசியை அணுகவில்லை. ஏனெனில் அவர்கள் ஏற்கனவே முதலீட்டினை கொண்டுள்ளனர். எனவே எல்ஐசி பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை.

எவ்வளவு முதலீடு?

எவ்வளவு முதலீடு?

தற்போதைய நிலவரப்படி எல்ஐசி யெஸ் பேங்கில் 8.06% பங்குகளை வைத்திருக்கிறது. ஆக ரிசர்வ் வங்கியின் வரைமுறைப்படி எல்ஐசி 1.94% பங்குகளை மட்டுமே பெற முடியும். ஆக யெஸ் பேங்கில் அரசு நிறுவனமான எல்ஐசி குறைந்த அளவில் மட்டுமே பங்குகளை வாங்க முடியும் என்றும் குமார் தெரிவித்துள்ளார்.

விரைவில் ரிசர்வ் வங்கியை அணுகுவோம்

விரைவில் ரிசர்வ் வங்கியை அணுகுவோம்

மேலும் யெஸ் பேங்க் குறித்து பல முதலீட்டாளர்கள் இடையே பேசி வருவதாகவும், அவற்றை இன்று ரிசர்வ் வங்கியின் முதலீட்டு திட்டத்துடன் சேர்த்து பட்டியலிட வேண்டும் என்றும் குமார் கூறியுள்ளார். மேலு சில ஒழுங்குமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே முதலீட்டாளர்களை நாங்கள் பெற்றவுடன், எஸ்பிஐ -வுடன் இணைந்து முதலீடு செய்ய தயாராக இருக்கிறோம். மேலு ரிசர்வ் வங்கியை அணுகி சாத்தியமான முதலீட்டாளார்கள் பட்டியல் பற்றி கூறுவோம் என்று அப்போது எஸ்பிஐ தலைவர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

According to the sources LIC unlikely to invest in yes bank

LIc already had 8.06% of stake in yes bank. So LIC can acquire only 1.94% stake only. So LIC not necessary that to participate. But if they want to, there is no issue if it is within the limit of 10%.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X