ராக்கெட் வேகத்தில் உயரும் மீன் விலை.. குறையும் சிக்கன் விலை.. காரணம் என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பல வகையான வதந்திகள் பரவி வருகின்றன. இதில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது, மக்கள் சிக்கன் சாப்பிட்டால் கொரோனா வைரஸால் பாதிக்கப்படலாம் என்பது தான்.

இதனால் மீன் விலைகள் ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகின்றன.

அதிலும் ஞாயிற்றுகிழமை என்றாலே சிலருக்கு அசைவம் சாப்பிடவில்லை என்றால் தூக்கம் வராது. அந்தளவுக்கு அலாதி பிரியம் கொண்டவர்கள், எப்படியேனும் அசைவம் சாபிட்டே ஆக வேண்டும் என்ற ஆசையில் கடல் உணவுகள் பக்கம் சாய்ந்துள்ளனர்.

கடல் உணவு பொருட்கள் விலை அதிகரிப்பு

கடல் உணவு பொருட்கள் விலை அதிகரிப்பு

ஏனெனில் ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் மட்டன் விலையால், மக்கள் மீன் உள்ளிட்ட கடல் உணவுகளை நாடத் தொடங்கியுள்ளனர். இதனால் இதன் விலையும் தற்போது கிடுகிடுவென உயர ஆரம்பித்துள்ளது. குறிப்பாக நதிகளில் இருந்து பிடிக்கப்படும் மீன்கள், கடல் மீன், அரேபிய கடல் மீன், உள்நாட்டு கடல் உணவு, மகாராஷ்டிரா கடற்கரை மற்றும் நதிகளில் இருந்து பெறப்படும் மீன் வகைகள் மிக மோசமான வகையில் விலைகள் அதிகரித்துள்ளனவாம். அதிலும் பெரும் நகரமான மும்பை நகரத்தில் விலைகள் சராசரியாக 50 - 60% அதிகரித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

காரணம் இது தான்

காரணம் இது தான்

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இதுவரையில் இந்த கடல் உணவுகளை வழங்கி வரும் உணவகங்கள் விலையை அதிகரிக்கவில்லை. அப்படி அவை விலையை அதிகரித்தால் இன்னும் விளைவுகள் கடுமையாக இருக்கும். இதற்கு முக்கிய காரணம் பரவி வரும் கொரோனா வைரஸ் தான் என்றும் கூறப்படுகிறது.

மீன்பிடித்தலும் குறைவு

மீன்பிடித்தலும் குறைவு

ஏற்கனவே பல காரணங்களினால் மீன் பிடிப்பு 70% மேலாக குறைந்து விட்டது. ஆனால் செலவுகள் அதிகமான அப்படியே நிலையானதாக உள்ளது. ஆக அதற்கேற்ப விலையும் உயருகின்றன. இது மீன் ஏற்றுமதியாளர்களையும், கரையோரப்பகுதி மக்களையும் ஏற்கனவே பாதித்துள்ளது. இது உலர் மீன் சந்தையையும் பாதித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் தவிர்ப்பு

வாடிக்கையாளர்கள் தவிர்ப்பு

நாளுக்கு நாள் விலை அதிகரித்து வரும் ரோஹூ மற்றும் கட்லா போன்ற வாடிக்கையாளர்கள் நன்னீர் மீன்களும் கிலோ 250 - 400 ரூபாய் வரையில் விற்கப்படுகின்றன. இதனால் இல்லத்தரசிகள் பெரும் பாதிக்கப்படுகின்றனர். மறுபுறம் பரவி வரும் வதந்திகளால் கோழி வியாபாரம் மேலும் பாதிக்கப்படுகிறது. இதனால் மற்ற இறைச்சிகளின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coronavirus scare affect seafood prices skyrocketing in across the country

Some rumours about coronavirus of chicken and mutton amid the coronavirus scare the country. So sea food prices 50- 60% suddenly pick up in the city and surroundings in the past one week.
Story first published: Monday, March 16, 2020, 20:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X