8.4% வட்டியா.. பிக்ஸட் டெபாசிட்டுக்கு இவ்வளவா.. எந்த நிறுவனத்தில் எவ்வளவு.. விவரம் என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியிலும் கூட, ரிஸ்க் இல்லாமல் கணிசமான வருவாயினை கொடுத்துக் கொண்டுள்ள முதலீடு என்றால், அது வங்கி டெபாசிட் தான்.

அந்த வகையில் நாட்டின் முன்னணி வங்கிகள் கூட வட்டி விகிதத்தினை 6% வரையில் தான் வழங்கி வருகின்றன. ஆனால் சில வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் 8.4% வரை வட்டியினை வழங்கி வருகின்றன.

இந்த முதலீட்டினை பொறுத்த வரையில் சந்தையின் ஏற்ற இறக்கம் எதுவும் பிரதிபலிக்காது என்பதே, பலரின் ஆர்வத்திற்கும் முக்கிய காரணமாக உள்ளது. அதோடு குறைந்த வருமானமாக இருந்தாலும், முதலீட்டிற்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்பது மற்றொரு நல்ல விஷயம்.

ரூட் மொபைல் அதிரடி ஏற்றம்.. தொடர்ந்து இரண்டாவது நாளாக 16% மேல் ஏற்றம்.. என்ன காரணம்..!ரூட் மொபைல் அதிரடி ஏற்றம்.. தொடர்ந்து இரண்டாவது நாளாக 16% மேல் ஏற்றம்.. என்ன காரணம்..!

அதிக வட்டி கொடுக்கும் நிறுவனங்கள்

அதிக வட்டி கொடுக்கும் நிறுவனங்கள்

தற்போதைய காலகட்டத்தில் பல முன்னணி வங்கிகள் கூட வங்கி வட்டி விகிதத்தினை குறைவாகத் தான் வழங்கி வருகின்றன. இந்த நிலையில் 8% வரை அதிகமாக வழங்கி வரும் நிறுவனங்கள் எது?
ஒன்று ஸ்ரீ ராம் சிட்டி யூனியன் பைனான்ஸ்/ ஸ்ரீ ராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ்
இரண்டாவது பஜாஜ் பைனான்ஸ்
மூன்றாவது மகேந்திரா ஃபைனான்ஸ்

ஸ்ரீ ராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸில் வட்டி விகிதம்

ஸ்ரீ ராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸில் வட்டி விகிதம்

ஸ்ரீ ராம் சிட்டி யூனியன் பைனான்ஸின் வட்டி விகிதமானது கடைசியாக கடந்த ஆகஸ்ட் 1 அன்று மாற்றம் செய்யப்பட்டது. இங்கு குறைந்தபட்சம் ரூ.5000-லிருந்து டெபாசிட் செய்து கொள்ளலாம். இதில் ஸ்ரீ ராம் சிட்டி யூனியன் பைனான்ஸினை போலவே, ஸ்ரீ ராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸூம், அதே கால அளவு, அதே வட்டியினை வழங்குகின்றது.

  • 60 மாத கால பிக்ஸட் டெபாசிட்டுக்கு வட்டி விகிதம் - 8.40%
  • 45 -48 மாத கால பிக்ஸட் டெபாசிட்டுக்கு வட்டி விகிதம் - 8.20%
  • 30 - 36 மாத கால பிக்ஸட் டெபாசிட்டுக்கு வட்டி விகிதம் - 8.15%
  • 15 - 24 மாத கால பிக்ஸட் டெபாசிட்டுக்கு வட்டி விகிதம் - 7.70%
  • 12 மாத கால பிக்ஸட் டெபாசிட்டுக்கு வட்டி விகிதம் - 7.50% வழங்கப்படுகின்றது.

 

ஸ்ரீ ராம் - மூத்த குடி மக்களுக்கு என்ன வட்டி

ஸ்ரீ ராம் - மூத்த குடி மக்களுக்கு என்ன வட்டி

பொதுமக்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தில் கூடுதலாக 0.40% அதிகமாக வழங்கப்படும்.
இதே பிக்ஸட் டெபாசிட்டுகளை புதுபிப்பவர்களுக்கு கூடுதலாக ( நவம்பர் 1,2019 க்கு பிறகு) 0.25% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
ஸ்ரீ ராம் குழு நிறுவனங்களின் ஊழியர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் 0.15% கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது.

பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட்

பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட்

பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஜூலை 4, 2020 முதல் அதிகளவிலான வட்டியினை வழங்குகிறது. இங்கு குறைந்தபட்சம் 25,000 ரூபாய் பிக்ஸட் டெபாசிட் செய்யலாம்.

  • 36 - 60 மாதங்களுக்கு வட்டி விகிதம் 7.10%மும்,
  • 24 - 25 மாதங்களுக்கு வட்டி விகிதம் 7%மும்,
  • 12 - 23 மாதங்களுக்கு வட்டி விகிதம் 6.90% வழங்கப்படுகிறது.

 

பஜாஜ் பைனான்ஸில் மூத்த குடிமக்களுக்கு என்ன சலுகை?

பஜாஜ் பைனான்ஸில் மூத்த குடிமக்களுக்கு என்ன சலுகை?

பஜாஜ் பைனான்ஸில் மூத்த குடிமக்களுக்கு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தினை விட, கூடுதலாக 0.25% வழங்கப்படுகிறது.

FD புதுப்பிக்கும் வாடிக்கையாளார்கள் மற்றும் பஜாஜ் ஊழியர்களுக்கு 36 - 30 மாதங்களுக்கான பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 7.35% வட்டி வழங்கப்படுகிறது.

 

மகேந்திரா பைனான்ஸில் எவ்வளவு வட்டி?

மகேந்திரா பைனான்ஸில் எவ்வளவு வட்டி?

மகேந்திரா பைனான்ஸ் சம்ரிதி பிக்ஸட் டெபாசிட்டுக்கு ஆண்டுக்கு வட்டி விகிதம் 6.45% வரை வழங்குகிறது. இது ஆண்டுக்கு அதிகபட்சமாக 7.34% வருமானம் கொடுக்கின்றது. ஆகஸ்ட் 24, 2020 முதல் 1 கோடி ரூபாய் வரையிலான டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • 60 மாதங்களுக்கு - 7.34%
  • 48 மாதங்களுக்கு - 7.10%
  • 44 மாதங்களுக்கு - 7.04%
  • 40 மாதங்களுக்கு - 6.79%
  • 38 மாதங்களுக்கு - 6.75%
  • 36 மாதங்களுக்கு - 6.71%
  • 33 மாதங்களுக்கு - 6.55%
  • 30 மாதங்களுக்கு - 6.51%
  • 27 மாதங்களுக்கு - 6.46%
  • 24 மாதங்களுக்கு - 6.39%
  • 20 மாதங்களுக்கு - 6.25%
  • 18 மாதங்களுக்கு - 6.12%
  • 15 மாதங்களுக்கு - 5.87%
  • 12 மாதங்களுக்கு - 5.70% வட்டியும் வழங்கப்படுகிறது.

 

மகேந்திரா பைனான்ஸில் மூத்த குடிமக்களுக்கு வட்டி

மகேந்திரா பைனான்ஸில் மூத்த குடிமக்களுக்கு வட்டி

மூத்த குடிமக்களுக்கு சம்ரிதி பிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் கூடுதலாக 0.25% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
இதே மகேந்திர குழும ஊழியர்களுக்கும், கூடுதலாக 0.35% வட்டி வழங்கப்படுகிறது.
ஆன்லைன் மற்றும் நேரடியாக சென்று விண்ணபிப்பவர்களுக்கும், ஒரே வட்டி விகிதம் தான் வழங்கப்படுகின்றது. இங்கு குறைந்த பட்சம் 5000 ரூபாய் முதல் டெபாசிட் செய்து கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Some NFBCs offers up to 8.4% interest for FD

Bajaj finance, Sri Ram transport, Mahindra finance, Sri Ram city union finances are offers up to 8.4% interest rates
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X