முதலீடு, சேமிப்பு இரண்டுக்கும் அப்படி என்ன பெரிய வித்தியாசம்...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதலீடு மற்றும் சேமிப்பு ஆகிய இரண்டு சொற்கள் பற்றியும் அடிகடி குழப்பம் உண்டாகிறது, இதுமட்டுமல்லாமல் பலர் இவை இரண்டும் ஒன்றுதான் என நினைத்துகொண்டிருக்கிறார்கள். இருப்பினும், இவை இரண்டுக்கும் இடையே அடிப்படையில் வேறுபாடு உண்டு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சேமிப்பு என்பது பணத்தை சேகரித்து அதை பாதுகாத்து வைப்பதாகும், அதேவேளை, அசல் தொகையில் இருந்து மேலதிக வருமானம் பெறும் நோக்கில் அதற்கான வழிகளைக் கண்டறிந்து அதில் உங்கள் பணத்தை இடுவது முதலீடு எனப்படும்.

இருப்பினும், இங்கு முக்கியமான கேள்வி நீங்கள் முதலீடு செய்யகிறீர்களா? அல்லது சேமிக்கிறீர்களா?. பலசமயங்களில் நீங்கள் ஒரு சேமிப்பாளராக மட்டும் இருக்க முடியும் அல்லது ஒரு முதலீட்டாளராக மட்டும் இருக்க முடியும் , அல்லது இவை இரண்டையும் செய்ய விருப்பம் உடையவர்களாகவும் இருக்கலாம். எவ்வாறாயினும், இவை இரண்டிலுமே ரிஸ்க் மற்றும் வருமானம் தொடர்பான பிரச்சனைகளை தாங்கக் கூடிய திறன் மற்றும் அதனை லாபகமாக சமலிக்கும் திறன் உங்களுக்கு இருக்க வேண்டும்.

முதியவர்களின் கொள்கை!!

முதியவர்களின் கொள்கை!!

பெரும்பாலும் பெரியவர்களிடம் அல்லது முதியவர்களிடம் பேசும் போது, அவர்களுக்கு இயல்பாகவே முதலீட்டின் மீது ஒரு அவநம்பிக்கை இருப்பதை உணரலாம். இவர்கள் தங்கள் பணத்தை பாதுகாக்க முயற்சி செய்வதால், ‘சேஃப்டி ஃபஸ்ட்' என்பதே இவர்களது கொள்கையாகும். இருப்பினும் அவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள், அதுதான் பணவீக்கம்.

சிம்பில் லாஜிக்

சிம்பில் லாஜிக்

பணவீக்க விகிதம் 8% ஆகவும், வங்கியில் உள்ள பணத்துக்கான ஆண்டு வட்டி விகிதம் 7% ஆகவும் இருந்தால், உங்கள் சேமிப்புத் தொகை 1% நஷ்டத்தையே ஈட்டுகிறது. பல நடுத்தர குடும்பங்கள், குறிப்பாக பணி ஓய்வு காலத்தில், அதிகளவு பணவீக்கத் தாக்கத்தை எதிரிகொள்ள வேண்டியுள்ளது. பணத்தை வங்கியில் சேமித்து வைப்பது அல்லது உங்கள் படுக்கைக்கு அடியில் சேமித்து வைப்பது பாதுகாப்பனது மற்றும் பண நெருக்கடியின் போது இது உங்களுக்கு கை கொடுக்கும், ஆனால், தனியான "சேமிப்பு' மட்டும் ஒரு சிறந்த தேர்வு அல்ல.

தனிமனித நிதி திட்டம்

தனிமனித நிதி திட்டம்

ஆகவே, எப்போது முதலீடு செய்ய துவங்குகிறீர்கள்? எவ்வளவு தொகை முதலீடு செய்ய வேண்டும்? முதலீடு செய்ய துவங்குவதற்கு முன்னர் எவ்வளவு பணம் சேமித்து வைக்க வேண்டும்?. ஒரு தனிநபர், நிதி சம்பந்தமாக திட்டமிடும் போது இந்த கேள்விகள் எல்லாம் கண்டிப்பாக எழுப்பப்படவேண்டியவை. நிதி திட்டமிடலில் "சேமிப்பு" ஒரு வலுவான அடித்தளம் ஆகும், முதலீடு செய்வதற்கான ஒரு சுதந்திரத்தை இது உங்களுக்கு வழங்குகிறது. பலர் தங்கள் நிதி சுதந்திரத்தை நிறைவு செய்யும் நோக்கில், அவசரத்தின் காரணமாக எல்லாப் பணத்தையும் ரிஸ்கான சொத்துக்களில் முதலீடு செய்கிறார்கள், இவ்வாறு உங்கள் முதலீடுகள் இடக்குமுடக்காக சென்றால், கண்டிப்பாக நீங்கள் ஒரு நீண்ட கால கடன் தொல்லையில் சிக்கித் தவிப்பீர்கள்.

சேமிப்பின் மகத்துவம்

சேமிப்பின் மகத்துவம்

எல்லா செலவுகளையும் பூர்த்தி செய்யகூடிய அளவு "சேமிப்பு" வைத்திருப்பது உங்கள் முதல் நோக்கமாக இருக்க வேண்டும், வாடகை, இஎம்ஐ, மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு, யுடிலிடி பில்கள், குறைந்தது ஒரு வருடத்துக்கான உணவு மற்றும் உடை செலவுகள் போன்றவற்றுக்கும், நீண்ட கால விருப்பங்களான வீடு அல்லது புதிய கார் வாங்குவதற்காக ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிப்ப்பது ஒரு நல்ல குறிக்கோள். சிக்கலான சமயங்களில் இது உங்கள் மாதாந்த செலவுகளை சந்திப்பதற்கு பெரும் உதவியாக இருக்கும்.

முதலீடு செய்யும் முறை

முதலீடு செய்யும் முறை

சூழ்நிலை மற்றும் சேமிப்பை மனதில் கொண்டு முதலீட்டு தேர்வுகள் பற்றி தீர்மானிக்க துவங்கலாம். பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட், ஈடிஎஃப்கள், தங்கம், வர்த்தக் பொருடகள், கடன்பத்திரங்கள் போன்ற பல்வேறு முதலீட்டு தேர்வுகள் உங்களுக்கு கிடைக்கின்றன. மியூச்சுவல் பண்ட், ஈடிஎஃப்கள் ஆகியவற்றில் முதலீடு செய்ய திட்டமிடுகையில், கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட அளவு 'சேமிப்பு தொகை' உங்கள் கையில் இருக்க வேண்டும். எனவே தான், சுதந்திரமான முறையில் முதலீட்டு தேர்வு செய்வதற்கும் மற்றும் நிதி சுதந்திரம் கிடைப்பதற்கும் ஒரு நல்ல வழி அமையும்.

‘சேமிப்பு” மற்றும் “முதலீடு”

‘சேமிப்பு” மற்றும் “முதலீடு”

ஆகவே, ‘சேமிப்பு" மற்றும் "முதலீடு" ஆகிய இரண்டும் சேந்த ஒரு நிதி திட்டமிடல் மூலமாக, இறுதி காலத்தில் உங்கள் பணம் உங்களுக்கு சேவை செய்யும் விதத்தில் அதைப் பெருக்கிக் கொள்ளுங்கள். சம்பாதிப்பதை விட குறைவாக செலவு செய்வது என்பது நம் எல்லோரதும் நோக்கமாக இருக்க வேண்டும். சேமிப்பை உருவாக்கி, நல்ல வருமானம் கிடைக்கும் விதத்தில் அதை முதலீடு செய்ய வேண்டும். இது சொல்வதற்கு எளிதாகும், ஆனால் செயற்படுத்துவது கடினம். ஆனால் நிதி சுதந்திரம் பெற்ற அனைவரும் இந்த நுட்பங்களைப் பின்பற்றியே அந்த நிலையை அடைந்துள்ளார்கள் என்பதை மனதில் வைத்துக் கொண்டு, ஒங்குமுறை மற்றும் ஊக்கமுயற்சி ஆகியவற்றை கடைப்பிடித்து வாழ்க்கையில் வளம் பெறுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Understanding the difference between Investing and Saving

Many people often confuse the terms - Investing and Saving. Some of you may even think it means the same thing. However, there is a fundamental difference between the two.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X