28,000 வங்கி பணியிடங்கள் நிரப்பப்பட்டது!! ஐபிபிஎஸ் தேர்வு ஆணையம்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: வங்கிப் பணிகளின் மீது ஆர்வம் கொண்டுள்ளோருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், இன்ஸ்டிட்யூட் ஃபார் பாங்கிங் பெர்ஸனல் செலக்ஷன் (ஐபிபிஎஸ்) அமைப்பு நடத்தும் தேர்வின் மூலம் சுமார் 28,118 பணியாளர்களை 21 வங்கிகள் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

 

ப்ரொபேஷ்னரி ஆஃபீசர் மற்றும் மேனேஜ்மென்ட் டிரெனீ (பிஓ/எம்டி-II) ஆகிய பணிகளுக்கு பொது எழுத்துத் தேர்வை நடத்திய ஐபிபிஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில் சுமார் 13,422 ஒதுக்கீடற்ற பணியிடங்கள், ஆதி திராவிட வகுப்பினருக்கென 4,415 பணியிடங்கள், ஆதி திராவிட பழங்குடியினருக்கென 2,135 பணியிடங்கள் மற்றும் பின்தங்கிய வகுப்பினர்களுக்கென 7,608 பணியிடங்கள், இவை போக இதர வகுப்பினருக்கான பணியிடங்கள் என பல்வேறு வங்கிகளுக்கும் அவர்களது தேவைக்கேற்ப ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

28,000 வங்கி பணியிடங்கள் நிரப்பப்பட்டது!! ஐபிபிஎஸ் தேர்வு ஆணையம்..

இத்தேர்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இது நிச்சயம் நல்ல செய்தியாக தான் இருக்கும், ஏனெனில், அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடுத்த மாதம் வரை மட்டுமே செல்லுபடியாகும், அதற்குப் பின் காலாவதியாகி விடும். இவர்களுக்கு பணிகள் வழங்கப்படாதிருப்பின் இவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டியிருந்திருக்கும்.

ஒருங்கிணைத்து தொகுக்கப்பட்ட இப்பட்டியலின் அறிவிப்போடு, பிஓ-II பதவிக்கான ஒதுக்கீடுகள் நிறைவடைந்திருக்கின்றன.

நாட்டில் நடத்தப்படும் பெரும்பாலான போட்டித் தேர்வுகளுள், இம்முறை சுமார் 7.50 லட்சம் போட்டியாளர்கள் இந்த எழுத்துத் தேர்வில் கலந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுள் 61,339 போட்டியாளர்கள் நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டு, இவர்களுள் சுமார் 45,000 பேர் காலியான பணியிடங்களில் அமர்வதற்கு வெற்றி/தகுதி பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் 28,118 பேருக்கு பணிகள் உறுதி செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

ஐபிபிஎஸ் ஏற்கெனவே பிஓ-IIIக்கான எழுத்துத் தேர்வை நடத்தி முடித்து, நேர்முகத் தேர்வுகளையும் கூட முடித்து விட்டது. இதன் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

28,000 get probationary officer jobs in banks

In what comes as a great relief for those eyeing bank jobs, 28,118 candidates were allotted jobs in 21 participating banks by the Institute for Banking Personal Selection.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X