டிசிஎஸ் நிறுவனத்தை அடுத்து ஐபிஎம்!! இந்திய ஐடி பணியாளர்களின் நிலை ரொம்ப மோசம் பாஸ்...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: மென்பொருள் துறையில் மிகப் பழமையான நிறுவனங்களில் ஒன்றான ஐபிஎம் நிறுவனம் இந்தியாவில் தனது பணியாளர்களின் எண்ணிக்கையை 1.65 லட்சம் என்ற அளவில் இருந்து 1 லட்சமாக குறைக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

 

இதன் மூலம் இந்நிறுவனத்தின் பல பணியாளர்கள் அடுத்த சில மாதங்களில் இ.எம்.ஐ கட்டுவதற்கான வழிகளையும், வேறு நிறுவனங்கள் அல்லது வேறு துறைகளில் வேலை தேடி அலைய வேண்டிய நிலை ஏற்பட உள்ளது.

ஐடி துறை

ஐடி துறை

வெளியுலகில் இருந்து பார்பவர்களுக்கு ஐடித்துறை என்றாலே லைப் செட்டில் என்ற கண்ணோட்டத்துனே பார்கிறார்கள். ஆனால் உண்மையில் ஒவ்வொரு ஐடி பணியாளர்களின் ரோலிங் சீட் அடியில் ஒரு வெடிகுண்டு காத்துக்கிடக்கிறது, அது எப்போது வெடிக்கும் என்பது அவர்களுக்கே தெரியாது. இது தான் இன்றைய நிலை.. சரி நம்ம விஷயத்திற்கு வருவோம்.

ஆட்குறைப்பு

ஆட்குறைப்பு

இந்தியாவில் அதிகளவில் ஆட்குறைப்பில் ஈடுப்படும் நிறுவனங்களின் ஒன்றான ஐபிஎம் நிறுவனம் இந்த வருடமும் தனது வேலையை காட்ட துவங்கியுள்ளது. 2015ஆம் ஆண்டின் மார்ச் மாதத்திற்குள் இந்நிறுவனத்தின் 65,000 பணியாளர்களை நிறுவனத்தை விட்டு நீக்க ஐபிஎம் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்தியா தான் டார்கெட்
 

இந்தியா தான் டார்கெட்

2011ஆம் ஆண்டின் கணக்கின் படி உலக நாடுகளில் ஐபிஎம் நிறுவனத்தில் மொத்தம் 4.33 இலட்ச பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது இதன் எண்ணிக்கை 4.3 இலட்சமாக உள்ளது. மேலும் ஐபிஎம் நிர்வாகம் இந்தியாவை குறிவைத்து அதிகப்படியான பணியாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது குறிப்பிடதக்கது.

2011ஆம் ஆண்டு நிலையே வேறு

2011ஆம் ஆண்டு நிலையே வேறு

இந்நிறுவனம் 2011ஆம் ஆண்டு இந்நிறுவனத்தின் மூத்த பணியாளர்களை நிறுவனத்தில் நிலைத்திருக்க நிறுவனத்தின் பங்குகளை வாரி வழங்கியது, ஆனால் இன்று நிறுவனத்தின் நிலை முற்றிலும் மாறுபட்டு உள்ளது என முன்னாள் ஐபிஎம் பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சீஇஓ

சீஇஓ

மேலும் இந்நிறுவனத்தில் 2012ஆம் ஆண்டு, ஐபிஎம் நிறுவனத்திற்கு முதல் பெண் தலைமை நிர்வாக அதிகாரியாக கினி ரோமெட்டி நியமிக்கப்பட்டார் இதன் பின் நிறுவனத்தின் பல மாறுதல்கள் நிகழ்ந்தேரியது. இந்த பணி நீக்க முடிவும் இவரின் தலைமையில் தான் நடக்க உள்ளது.

ஐபிஎம் இந்தியா

ஐபிஎம் இந்தியா

இந்நிறுவனம் இந்தியாவில் பெங்களுரை தலைமையிடமாகக் கொண்டு 3 இடங்களில் செயல்பட்டு வருகிறது.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IBM India staff still battle tech blues fearing more layoffs

For employees of IBM India, once considered the jewel in the crown of Big Blue, the coming weeks are expected to bring yet more lay-offs and soul-searching about the unsettled nature of working in the software industry which has helped create a new middle in India over the past two decades. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X