வெறும் 10,000 ரூபாய் முதலீடு இன்று 2 கோடி.. 25 வருடத்தில் இன்போசிஸ் அபார வளர்ச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி மென்பொருள் சேவைகள் நிறுவனமான இன்போசிஸ் 1993-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி தான் முதன் முறையாகத் தங்களது பங்குகளை ஐபிஓ மூலம் வெளியிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் இன்போசிஸ்-ன் வளர்ச்சி மிகப் பெரியது. பங்குகள் அளித்த லாபம், வருவாய் வளர்ச்சி மற்றும் பிற நிதி செயல்பாடுகள் ஆன சிறந்த ப்ளூ சிப் நிறுவனமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் இந்தியாவில் இன்போசிஸ் நிறுவனத்திற்குப் போட்டியாக டிசிஎஸ், விப்ரோ, டெக் மகேந்திரா, எச்சிஎல் உள்ளிட்ட நிறுவனங்களும் உள்ளன.

இந்திய பங்கு சந்தையில் பங்குகளை வெளியிட்டு 25 வருடங்களை 2018 ஜூன் 14-ம் தேதியுடன் இன்ஃபோசிஸ் முடிவு செய்துள்ள நிலையில் அதன் பங்கு சந்தை வளர்ச்சி குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

பங்குகள் மூலம் கிடைத்த லாபம்

பங்குகள் மூலம் கிடைத்த லாபம்

1993-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி ஐபிஓ மூலம் பங்குகளை வெளியிட்ட நிலையில் அதன் மதிப்புத் தற்போது 1600% உயர்ந்து ஒரு பங்கின் விலை 1245.60 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. இன்போசிஸ் நிறுவனம் துவங்கப்பட்ட போது அதில் 10,000 ரூபாயினை முதலீடு செய்து இருந்தால் அதன் இன்றைய மதிப்பு 2 கோடி ரூபாய் ஆக இருந்து இருக்கும். இந்த ஒரு காரணத்திற்காகவே கோவில் கட்டலாம்.

 சந்தை மூலதனம்

சந்தை மூலதனம்

டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தினை அடுத்து இந்தியாவின் மிகப் பெரிய ஐடி மென்பொருள் சேவை நிறுவனமாக இன்போசிஸ் உள்ளது. இந்திய பங்கு சந்தையில் டாப் 10 மூலதனம் பெற்ற நிறுவனங்களின் பட்டியலில் ஒன்றாக இன்போசிஸ் உள்ளது.

ஐபிஓ

ஐபிஓ

1993-ம் ஆண்டுப் பிப்ரவை மாதம் இன்போசிஸ் பங்குகள் 95 ரூபாய் ஒரு பங்கு என வெளியிடப்பட்டது. பின்னர் ஜூன் மாதம் பங்கு சந்தைக்கு வந்த பொழுது அதன் மதிப்பு 50 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கின் விலை 145 ரூபாய் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பங்கு சந்தை

சர்வதேச பங்கு சந்தை

உள்நாட்டுப் பங்கு சந்தையில் மிகப் பெரிய அளவில் மூலதனங்களை இன்போசிஸ் பெற்ற நிலையில் 1999-ம் ஆண்டு 20.7 லட்சம் பங்குகளை அமெரிக்கன் டெபாசிடரி பங்குகளாக வெளியிட்டது. இந்த நிறுவனம் நாஸ்டாக்கில் பட்டிலிடபட்டுள்ளது. மேலும் 2013-ம் ஆண்டு யூரோ நெக்ஸ்ட் லண்டன் மற்றும் பாரிஸ் பங்குச் சந்தையிலும் தங்களது பங்குகளை இன்போசிஸ் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

போனஸ் மற்றும் பங்குகளை உடைத்தல்

போனஸ் மற்றும் பங்குகளை உடைத்தல்

இன்போசிஸ் நிறுவனம் இது வரை 11 முறை முதலீட்டாளர்களுக்குப் போனஸ் அளித்துள்ளது மற்றும் ஒரு முறை பங்குகளை உடைத்துள்ளது. 25 வயது வரலாற்றில் 2000-ம் ஆண்டு முதல் தொடர்ந்து டிவிடண்ட்களையும் வழங்கி வருகிறது என்று மும்பை பங்கு சந்தைத் தரவுகள் கூறுகின்றன.

 நாராயண மூர்த்தி

நாராயண மூர்த்தி

இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நாராயண மூர்த்தி 1981 முதல் 2002-ம் ஆண்டு வரை நாராயண மூர்த்தித் தொடர்ந்து தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பினை வகித்து வந்துள்ளார். 2002-2006 காலங்களில் இன்போசிஸ் நிறுவனத்தின் போர்டு உறுப்பினர்களின் தலைவராக இருந்துள்ளார். 2011-ம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து ராஜிநாமா செய்த நாராயண மூர்த்தி ஓய்வுபெற்ற தலைவராக உள்ளார்.

நந்தன் நீலகேனி

நந்தன் நீலகேனி

1981-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட இன்போசிஸ் நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனரான நந்தன் நீலகேனி நாராயண மூர்த்திக்குப் பிறகு 2002-ம் ஆண்டுத் தலைமை நிர்வாகப் பொறுப்பினை ஏற்றார். பின்னர் 2007-ம் ஆண்டு ராஜிநாமா செய்த நந்தன் நீலகேனி போர்டு உறுப்பினர்களின் இணை தலைவராகவும் இருந்துள்ளார்.

விஷால் ஷிக்கா

விஷால் ஷிக்கா

இன்போசிஸ் நிறுவனத்தின் முதல் நிறுவனர் அல்லாத நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான விஷால் ஷிக்கா 2014 முதல் 2017 ஆகஸ்ட் 18 வரை இந்தப் பதவியினை வகித்தாலும் பல சர்ச்சைகளில் அடிப்பட்டார்.

பெருநிறுவன நிர்வாகச் சிக்கல்

பெருநிறுவன நிர்வாகச் சிக்கல்

விஷால் ஷிக்காவின் செயல்பாடுகள் சரியில்லை என்று நாராயண மூர்த்தித் தொடர்ந்து சிக்கலை ஏற்படுத்தி வந்ததால் தான் திடீர் என்று ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிறுவனர்கள்

நிறுவனர்கள்

1981 ஜூலை 7-ம் தேதி துவங்கப்பட்ட இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு நாராயண மூர்த்தி, நந்தன் நீலநானி, எஸ். கோபால கிருஷ்ணன், எஸ். டி. ஷிபுலால், கே. தினேஷ், நஸ் ராகவன் மற்றும் அசோக் அரோரா ஆகியோர் நிறுவனர்கள் ஆவார்கள்.

பெயர் மாற்றம்

பெயர் மாற்றம்

இன்ஃபோசிஸ் லிமிடட் நிறுவனத்தின் பெயர் முதலில் இன்போசிஸ் கன்சல்டன்ஸி லிமிடட் என்று இருந்த நிலையில் 1992-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தான் இன்ஃபோசிஸ் டெக்னாலஜிஸ் என்று பெயர் மாற்றம் பெற்றது. பின்னர் 2011-ம் ஆண்டு இன்போசிஸ் லிமிடெட் என்றும் பெயர் மாற்றம் பெற்றது.

பங்குதாரர் மாதிரி

பங்குதாரர் மாதிரி

பங்குகளைப் பைபேக் செய்வதன் மூலம் முதலீட்டாளர்கள் வசம் இருந்து பங்குகளைத் தொடர்ந்து வாங்கி வெளியில் உள்ள பங்குகளின் அளவை 12.9 சதவீதமாக வைத்துள்ளனர்.

தலைமை நிர்வாக அதிகாரிகள்

தலைமை நிர்வாக அதிகாரிகள்

36 வருட நிறுவன வரலாற்றில் 6 தலைமை நிர்வாக அதிகாரிகள் மாறியுள்ளனர். நாராயண மூர்த்தி (1981-2002), நந்தன் நிலேகனி (2002-2007), எஸ் கோபாலகிருஷ்ணன் (2007-2011), எஸ்டி ஷிபுலால் (2011-2014), விஷால் சிக்கா (2014-2017), யுபி பிரவீன் ராவ் [இடைக்கால] (ஆகஸ்ட் 2017 டிசம்பர் 2017); மற்றும் சாலில் பரேக் (2018-தற்போது).

தலைமையகங்கள்

தலைமையகங்கள்

கர்நாடகாவின் தலைநகரமான பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இன்போசிஸ்-க்கு மைசூரு, புனே மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் கிளைகள் உள்ளன. இன்போசிஸ் நிறுவனத்திற்கு உலகம் முழுவது 82 விற்பனை அலுவலகங்கள் உள்ள நிலையில் இந்தியாவில் மூன்றும், பிற வெளிநாடுகளிலும் உள்ளது.

செயல்படும் பகுதிகள்

செயல்படும் பகுதிகள்

இன்போசிஸ் நிறுவனம் சாப்ட்வேர் லைப் சைக்கிள், கன்சல்டிங், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் அவுட்சோர்சிங் சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் தனிப்பயனாக்கப்பட்ட மென்பொருள் தயாரிப்புகள், தளங்களையும் வழங்கி வருகிறது.

நிறுவனங்களைக் கையகப்படுத்துதல்

நிறுவனங்களைக் கையகப்படுத்துதல்

25 வருட வரலாற்றில் நாராயண மூர்த்தித் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த போது பல நிறுவனங்களை இன்போசிஸ் கைப்பற்றியுள்ள நிலையில் 2012-ம் ஆண்டு லோட்ஸ்டோன் நிறுவனத்தினை வாங்கியது, 2015-ம் ஆண்டுப் பனாயா நிறுவனத்தினை வாங்கியது முக்கியமானது ஆகும். பனாயா நிறுவனத்தினை வாங்கியது தவறான முடிவு என்ற நாராயண மூர்த்தியின் குற்றச்சாட்டின் கடைசிக் கட்டத்தில் தான் விஷால் ஷிக்கா வெளியேறினார். தற்போது பனாயா நிறுவனத்தினை விற்கவும் முடிவெடுத்துள்ளனர்.

ஊழியர்கள் எண்ணிக்கை

ஊழியர்கள் எண்ணிக்கை

2018 மார்ச் 31-ம் தேதி வரையிலான நிலவரங்கள் படி இன்போசிஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் 2,04,107 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

ஆண்டுப் பொதுக் கூட்டம்

ஆண்டுப் பொதுக் கூட்டம்

இன்போசிஸ் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் வர இருக்கும் 2018 ஜூன் 23-ம் தேதி பெங்களூரு கிரிஸ்ட் பல்கலைக்கழக ஆடிட்டோரியம் ஆடிட்டோரியத்தில் நடைபெற உள்ளது.

கிரெட்ட் ரேட்டிங்

கிரெட்ட் ரேட்டிங்

இன்போசிஸ் நிறுவனத்தின் கிரெட்ட் ரேட்டின் A- (Standard & Poor's rating) மற்றும் 5A1 (Dun & Bradstreet rating) ஆகும்.

லட்சாதிபதி ஊழியர்கள்

லட்சாதிபதி ஊழியர்கள்

ஊழியர்களுக்கு ஊக்கப் பரிசாக அளிக்கப்படும் பங்குகளை வைத்துப் பல இன்போசிஸ் ஊழியர்கள் லட்சாதிபதிகளாக மாறியுள்ளனர்.

அன்மை வருவாய் மற்றும் லாபம்

அன்மை வருவாய் மற்றும் லாபம்

2017-2018 நிதி ஆண்டில் இன்போசிஸ் நிறுவனம் 73,715 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ள நிலையில் 16,372 கோடி ரூபாய் நிகர லாபம் அடைந்துள்ளது.

மொத்த சொத்துக்கள்

மொத்த சொத்துக்கள்

2018 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி இன்போசிஸ் நிறுவனத்திற்கு 79,890 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளது.

நன்மதிப்பு

நன்மதிப்பு

2018 மார்ச் 31-ம் தேதி கணக்கின் படி இன்போசிஸ் நிறுவனத்தின் நன்மதிப்பு 2,211 கோடி ரூபாய் ஆக உள்ளது.

பண இருப்புக்கள்

பண இருப்புக்கள்

2018 மார்ச் 31-ம் தேதி கணக்கின் படி இன்போசிஸ் நிறுவனத்திடம் 19,818 கோடி ரூபாய் பண இருப்புக்கள் உள்ளது.

கடன் இல்லை

கடன் இல்லை

கடன் இல்லா நிறுவனமாக இன்போசிஸ் உள்ளது. இன்போசிஸ் நிறுவனத்திற்குக் கடன் மற்றும் பிக்சட் டெபாசிட் என்று ஏதுமில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

25 Years Of Infosys In Stock Market: Rs 10,000 turn into Rs 2 crore

25 Years Of Infosys In Stock Market: Rs 10,000 turn into Rs 2 crore
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X